Custom Search

Sunday, November 30, 2008

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!


அப்பா தங்கச்சியோட சண்டை பிடிக்காதயுங்கோ - அவள்ட
வயசு அப்பிடி வாய்க்கு வாய்தான் கதைப்பாள். அன்பால எதையும்
செய்ய வைக்கலாம் தொலுக்காரிப்பும் அதிகாரமும் பதின்ம வயதுகளிடம்
எடுபடாது அவளோட அன்பா கதையுங்கோ என்று வழக்கம் போலவே
நான் அவளுக்காக வாதாடுறன் நீங்களும் எப்ப பாரு முறிச்சுபோடுவன்
அடிச்சு போடுவன் வெளில பிடிச்சு விடுவன் என்ன பண்றன் என்று
பண்ணேக்க பாருங்கோ வழக்கம் போல உறுமிட்டுப் போறீங்கள்

அக்கா நீயும் வழக்கம் போல ஏன் நான் அப்பாவோட
வாதாடுறன் என்ற உண்மை தெரியாமல் வழக்கம் போலவே
நானும் நடுகப் பார்க்கிறன் உனக்கு எப்பவும் அப்பாவோட என்ன
அராத்தல்.அவர் சொல்றதை செஞ்சா என்ன குறைஞ்சு போடுவீங்கள்
வாய்க்கு வாய் காட்டிறதில மட்டும் குறைச்சலில்லை என்று
வழக்கம் போல என்னைக் குறை சொல்லிட்டு போறாய்

வழக்கம் போல முத்தம் தருவியா மாட்டியா என்று பார்க்கிறதுக்காகவே
நானும் முத்தம் கேக்குறன். நீயும் வழக்கம் போலவே என்னென்னவோ
எல்லாம் கதைச்சிட்டு வழக்கம் போலவே முத்தம் தராமலே போட்டாய்

அம்மா நீங்க வைத்தியர் இல்லைன்னு தெரிஞ்சும் ஏம்மா என் ஒரு கண்ணு
மட்டும் சிவந்திருக்குன்னு கேக்குறன் நீங்களும் வழக்கம் போலவே அது
ஒன்னுமில்ல நீ கனநேரம் ரீவி பாக்கிறாய் என்று எந்த சமாதானமும்
சொல்லாமல் பேசாம படு என்டிட்டு திரும்பி படுக்கிறீங்கள்.

நானும் வழக்கம்போலவே நான் சந்தோசமா இருக்கிறன் என்று சொல்லித்
நல்ல தருணங்களை எல்லாம் நினைச்சு நினைச்சு தூங்க முயற்சிக்கிறன்.
வழக்கம் போலவே தூக்கம் வராமல் எழுதிக் கொண்டும் இருக்கிறன்.


குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

7 comments:

சந்தனமுல்லை said...

:-)

சினேகிதி said...

வழக்கம் போலவே நீங்களும் சிமைலி போட்டிருக்கிறீங்கள்:-)

Anonymous said...

க்கா நீயும் வழக்கம் போல ஏன் நான் அப்பாவோட
வாதாடுறன் என்ற உண்மை தெரியாமல் வழக்கம் போலவே
நானும் நடுகப் பார்க்கிறன் உனக்கு எப்பவும் அப்பாவோட என்ன
அராத்தல்.அவர் சொல்றதை செஞ்சா என்ன குறைஞ்சு போடுவீங்கள்
வாய்க்கு வாய் காட்டிறதில மட்டும் குறைச்சலில்லை என்று
வழக்கம் போல என்னைக் குறை சொல்லிட்டு போறாய்

ஏதோ சொந்தக் கதையைத்தான் அக்கா சோகக் கதை மாதிரி எழுதியிருக்கிறா. ஓ இதுவும் குடும்ப அரசியல் போல இருக்கும். மன்னிக்கவும் குடும்ப விடயம் போல இருக்கும்,

Anonymous said...

வழக்கம் போல முத்தம் தருவியா மாட்டியா என்று பார்க்கிறதுக்காகவே
நானும் முத்தம் கேக்குறன். நீயும் வழக்கம் போலவே என்னென்னவோ
எல்லாம் கதைச்சிட்டு வழக்கம் போலவே முத்தம் தராமலே போட்டாய்

ஆஹா கிளம்பிட்டங்கையா.... இப்ப வலைப் பதிவையும் தூது அனுப்ப நம்மாளுங்க பயன்படுத்துறாங்கள். ம்......... விசயம் போய்ச் சேரா வேண்டியவருக்குக் கண்டிப்பாக போய்ச் சேர்ந்திருக்கும். கவலைப் படாதேங்கோ.... அடுத்த முறை கண்டிப்பாக கிடைக்கும்.

Anonymous said...

//வழக்கம் போல முத்தம் தருவியா மாட்டியா என்று பார்க்கிறதுக்காகவே
நானும் முத்தம் கேக்குறன். நீயும் வழக்கம் போலவே என்னென்னவோ
எல்லாம் கதைச்சிட்டு வழக்கம் போலவே முத்தம் தராமலே போட்டாய்//

"என்னென்னவோ" எண்டால் என்னென்ன எண்டு எங்களுக்கும் சொல்லுங்க அக்கா. எங்களுக்கும் பிரியோசனமா இருக்கும்.

ஹேமா said...

வணக்கம் அன்பின் சிநேகிதி.முதன் முறையாக உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.அருமையான வரவேற்பு.அற்புதம்"குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா"காது குளிர்ந்து விட்டது மனம் வரை.
திரும்பத் திரும்பக் கேட்டேன்.
இன்னும் வருவேன் இந்த இசைக்காகவே.யார் பாடியது என்றும் போட்டிருக்கலாம் நீங்கள்.இவர் சங்கீதரத்னா M.S.சுப்புலட்சுமி அவர்கள்தானே!

சிநேகிதி,வழக்கம்போல நினைவுகள் பழையதாக இருந்தாலும் எங்களுக்குத் தருணங்கள் என்றுமே புதிதுதானே!

சினேகிதி said...

\\வணக்கம் அன்பின் சிநேகிதி.முதன் முறையாக உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.\\

வாங்கோ!

\\யார் பாடியது என்றும் போட்டிருக்கலாம் நீங்கள்.இவர் சங்கீதரத்னா M.S.சுப்புலட்சுமி அவர்கள்தானே!\\

M.S.சுப்புலட்சுமியம்மாவ எல்லாருக்கும் தெரியும் என்று விட்டிட்டன் :(