Custom Search

Monday, December 01, 2008

ஊமைச்செந்நாய் - ஒரு வாசிப்பனுபவம்

கொஞ்சநாளா வேலையில்லை சரி ஏதும் புத்தகம் வாசிக்கலாம் என்று யோசிச்சன். யாற்ற புத்தகங்களை வாசிக்கிறதென்று யோசிக்கேக்கதான் "ஜெயமோகன் ஜெயகாந்தன் சேர்ந்து எழுதிய கவிதை நீ "என்ற பாட்டு வரி ஞாபகம் வந்திச்சு. அதோட இவர்களின் இருவரின் பெயரும் அடிக்கடி தமிழ்மணத்தில் பார்த்திருக்கிறேன். பெரிய எழுத்தாளர்கள் என்று மட்டும் தெரிந்து வைத்திருந்தேன் வேறெந்த தகவலும் தெரியாது. நூலகத்தில இவர்கள் இருவரின் புத்தகங்களை hold பண்ணினேன்(காசு குடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கிற அளவுக்கு வளரல இன்னும் ). 3 நாட்களிலயே இரண்டு புத்தகங்கள் கிடைத்தன. ஒன்று 'கோகிலா என்ன செய்துவிட்டாள்' மற்றது ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பு. கோகிலா என்ன செய்துவிட்டாள் என்னால் முழுவதுமாக வாசித்து முடிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையே எனக்கு விளங்கேல்ல. ஒன்று மொழிப்பிரச்சனை. நிறைய சொற்கள் தமிழ் இல்லாத மாதிரி இருந்தது. அதும் இல்லாம சூத்திரங்கள் காளி தேவதைன்னு திரும்ப திரும்ப வரவும் எனக்கு வாசிக்கப் பிடிக்கேல்ல மூடி வைச்சிட்டன். அடுத்த முறை நூலகத்துக்குப் போனபோது ஜெயமோகனின் புத்தகங்களைத் தவிர்த்து ஜெயகாந்தனின் 'ரிசிமூலம்' , 'சமூகம் என்பது நாலுபேர்' , 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' , 'உன்னைப்போல் ஒருவன்' என்ற நான்கையும் எடுத்துக்கொண்டு வந்தன். நான்கும் வித்தியாசமான வாசிப்பனுபவங்களைத்தந்தன. முக்கியமா ரிசிமூலம், உன்னைப்போல் ஒருவன், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன ஆகிய மூன்று நாவல்களும் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தையும் தந்தன. 1934 (?) ம் ஆண்டிலேயே இப்படியான கதைகள் எழுதப்பட்டிருப்பதே எனக்கு ஆச்சரியம்தான். அதுவும் இந்தநாவல்களில் இழையோடியிருக்கும் உளவியல் தாக்கங்களும் எண்ணப்போக்குகளும் கொஞ்சம் சிந்திக்கவும் வைத்தன என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகங்களைப் பற்றிய வாசிப்பனுவத்தை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

இன்டைக்கு இந்தப் பதிவை எழுதத் தூண்டியது நேற்று தமிழ்மணத்தில் நான் வாசித்த 'ஜெயமோகன் என்ற மா....யல்' என்ற கட்டுரைதான். கட்டுரையைப் போய் வாசித்தால் ஜெயமோகனின் 'ஊமைச்செந்நாய்' என்ற சிறுகதை ஆபாசம் நிறைந்ததாக விரசத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்ற கருத்துப்பட எழுதப்பட்டிருந்தது. என்னடா இது அந்தக் கதையைப் பற்றி ஒன்றையும் சொல்லக்காணம் எழுதினவரப் பற்றியே விமர்சனமா இருக்கென்று யோசித்தன். நான் வாசிச்ச சிறுகதையில எல்லாம் (கனக்க இல்ல 2-3 :-) ஆபாசம் எல்லாம் இருக்கலையே என்டிட்டு கூகிளாண்டவரிட்ட "ஊமைச்செந்நாய்" எனக்கும் கொஞ்சம் காட்டுங்கோவன் என்று கேட்டன். ஒருமாதிரி உயிர்மையில் பதிவு செய்து அந்த சிறுகதை(நெடுங்கதை?)யை வாசிக்கத் தொடங்கினன். வாசிக்கத்தொடங்கி கொஞ்சநேரத்திலேயே first impression is the best impression என்றது உண்மையில்லை என்று உணர்ந்தேன். ஜெயகாந்தன் நாவல்களைப் போலவே ஊமைச்செந்நாயும் எனக்கு நல்ல வாசிப்பனுவத்தையே தந்தது.

நான் வாசிச்ச அந்த விமர்சனத்தில சொல்லப்பட்டது போல இந்தக்கதையில வந்த ஓரிரு வர்ணனைகள் எனக்கு ஏனோ ஆபாசமா தெரியேல்ல. இது நான் வாசித்த ஜெயமோகனின் முதல் நெடுங்கதை என்பதால் மற்றைய நாவல்களைப் பற்றி என்னால் சொல்ல முடியாது ஆனால் இந்த நாவலில் ஆபாசம் இருப்பதாக எனக்குத்தோணேல்ல.


ஒரு வெள்ளைக்கார துரைக்கு அடிமையாக இருக்கும் ஒரு இந்தியத்தாய்க்கும் ஒரு வெள்ளைக்காரனுக்கும் பிறந்த ஒரு வேலைக்காரனின் கதை. ஊமைச்செந்நாய் ஊமையில்ல ஆனால் ஊமையாக்கப்பட்டிருந்தான்.துரை கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லுவான். ஆனால் அவனுக்கு நன்றாக ஆங்கிலம் பேசவரும் என்பது கதையின் இடையில் தெரிய வருகிறது. அவனுடைய கண்கள் காட்டு நாயின் கண்கள் போல சிவப்பாக இருக்குமாம் அதனால் அவனுக்கு அந்தப்பெயர்.கதையில் துரை பிடிக்கும் பெரிய சுருட்டு ஒரு கரிய ஆண்குறி போலிருக்கிறது என்றொரு வர்ணனை வருகிறது. இன்னொரு இடத்தில் துரைக்காக கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை அழைத்து வருகிறான் ஊமைச்செந்நாய். அந்தப்பெண் இரண்டு குழந்தைகளின் தாய். ஏற்கனவே துரையிடம் வந்து போனவள் என்று நினைக்கிறேன். அவளைப் பற்றிய வர்ணனையில் அவளுடைய மார்புகள் தூக்கணாங்குருவிக்கூட்டுக்கும் பிட்டங்கள் இரண்டு பலாப்பழங்களுக்கும் உவமிக்கப்படுகிறது. இவற்றைத்தான் ஆபாசம் என்றிருக்கிறார்கள். துரைக்கு அவளைப்பிடிக்கவில்லை துரத்திவிடுகிறான். காரணம் அவளிடமிருந்து துர்நாற்றம் வந்ததாம். இதை வாசித்ததும் அண்மையில் பார்த்த ஏதோ ஒரு திரைப்படத்தில் சோப் வாங்கிக் குடுத்து குளிக்கச்சொல்லிட்டு அதன்பிறகு அவளைப் படுக்கைக்கு அழைக்கும் தமிழ்நாட்டுத் துரைகள் ஞாபகத்துக்கு வந்தார்கள். தவிர கோலங்கள் நாடகத்தில் தொல்காப்பியனின் தாயான செல்லம்மாளோடு தொடுப்பு வைச்சால் முதலாளிக்கு நல்ல யோகம் என்று சொல்கிறார் ஒரு ஜோதிடர். அந்த முதலாளியும் அவளுடைய குடிகாரக் கணவனிடமே பணத்தாசை காட்டி அவன் மனைவியோடு தொடுப்பு வைக்க முயலும்போது அவள் முதலாளியையும் வெட்டித் தானும் வெட்டுப்பட்டு செத்துப்போகிறாள். இந்தக்காட்சியும் ஞாபகம் வந்தது. துரை அவளை அனுபவித்த பிறகு துரையிடம் அடிமையாக இருக்கும் தேமா என்ற சமையல்காரன் அவளை அடிமையாக்கி கிட்டத்தட்ட வன்புணருகிறான். துரை அவனிடம் ஒன்றும் அதைப்பற்றி கேட்கவில்லை ஆனால் ஊமைச்செந்நாயிடம் கேக்கிறான் நீ சோதியை அன்டைக்கு ஊருக்கும் கொண்டுபோய் விடும்போது அவளோடு படுத்தாயா என்று கேட்டு கோவப்படுகிறான். துரைக்கு என்ன தாழ்வுச்சிக்கலோ? ஊமைச்செந்நாயின் கண்கள் சிவப்பாக இருப்பது வெள்ளைக்காரப் பெண்களுக்கு பிடிக்கும் என்று சொல்லிவிட்டு நீயெப்பவாவது ஒரு வெள்ளைக்காரியுடன் படுத்தாய் என்று நான் அறிந்தால் நான் உன்னைக் கொலை செய்வேன் என்று சொல்கிறான். ஏன் இவனிடத்தில் இவ்வளவு குரூரம் என்ற என் கேள்விக்குப் கதையின் முடிவில் பதில் கிடைக்கிறது.

துரையும் செந்நாயும் யானைத்தந்த வேட்டைக்குப் போகிறார்கள். காட்டில் நல்ல அடிமையாக எல்லாம் செய்கிறான். யானை வேட்டையில் செந்நாயையே பணயமாக அனுப்பி யானையை வேட்டையாடுமளவுக்கு கொடியவன் துரை. இறுதியில் யானையும் சுடுபட்டு இறந்துபோகிறது. அந்த நேரத்தில் துரைக்கு பாம்பு கடித்துவிடுகிறது. காலால் உதைத்து எச்சிலால் துப்பி ஏறி மிரித்தெல்லாம் துரை செந்நாயை அவமானப்படுத்தியிருந்து அவன் துரையைக் காப்பாற்றுகிறான். உயிர் பிழைத்த துரை குற்றவுணர்வில் உண்மையெல்லாம் சொல்கிறான். நான் உண்மையில் கெட்டவனில்லை. எங்கட ஊரில நானும் ஒரு அடிமைதான். நல்ல குடும்பத்து வெள்ளைக்கார பெண்கள் எல்லாம் எங்களைத் திரும்பியும் பார்க்கமாட்டார்கள். அங்கே எங்களை யாரும் மதிப்பதில்லை அதனால்தான் இந்தியா போன்ற நாடுகளில் வந்து உங்களைப் போல அடிமைகளிடம் எங்கள் இயலாமைகளை மறைத்து உங்களிடம் அடிமைத்தனத்தை பரிசோதித்துப் பார்க்கிறோம் என்று சொல்கிறான். ஒரு கட்டத்தில் செந்நாயைப் பார்த்து நீ நல்லவன் என் சகோதரன் நண்பன் என்றெல்லாம் பினாத்துகிறான். இதை வாசிக்கும்போது பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் தாங்களும் ஒரு கட்டத்தில் தங்களிலும் வலிமை குறைந்தவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்குகிறார்கள் என்று படித்தது ஞாபகம் வந்தது. தாமிழந்து போன்ற ஏதோ ஒரு உருவமற்ற ஒன்றை இன்னொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதன் மூலம் அவர்கள் திரும்ப பெறுவதாக உணர்கிறார்கள். துரையின் நிலையும் அதுதானில்லையா?

ஏழுமலை என்றொரு படம் பார்த்தேன். அர்ஜுன் சிம்ரன் கஜோலா நடித்த படம். இந்தப்படத்திலும் இந்த அடிமையையும் ஆளுபவர்களையும் பார்க்கலாம். வெளிநாட்டிலிருந்து வரும் அர்ஜுனின் அண்ணன்களும் அண்ணிகளும் சேர்ந்து அர்ஜுனையும் சிம்ரனையும் அடிமைகள் போல நடத்துவார்கள்.சிம்ரன் காதுபடவே செக்ஸ்ஐ பற்றி ஏ பி சி டி தெரியாத இவனெல்லாம் குடும்பம் நடத்தி இப்ப பிள்ளைவே பிறக்கப்போது என்ன அதிசயம் என்று கேலி பண்ணுவார்கள். அதுவரை பொறுமையாக இருந்த சிம்ரன் ஆங்கிலத்திலயே வார்த்தைகளாலேயே அவர்களைத் திருப்பியடிப்பார்.இந்தப்படத்தில எனக்குப் பிடித்த காட்சியே ஒரு அண்ணனின் மகன் சிம்ரனிடம் சொல்லுவான் அமெரிக்கால எல்லாம் வீடு கூட்றதில இருந்து வோஸ்றூம் கழுவிறதெல்லாம் அம்மாதான் செய்வா. இங்கதான் இந்தப் பந்தா எல்லாம் என்று சொல்லி சிரிப்பான். அண்ணிமாருக்கு தாங்கள் அங்க அடிமையா இருக்கிறம் இங்க சிம்ரனை கொஞ்சம் அடிமையாக்கி தங்கள் இயலாமையப் போக்கிக்கொள்கிறார்கள்.கணவரும் இந்த கழுவுற துடைக்கிற வேலையில பங்கெடுத்தால் மனைவிமார் அடிமையா நினைக்கமாட்டினம் என்றது வேற விசயம். மாமியார் மருமகள் பிரச்சனையும் இதானில்லையா :-.

ஊமைச்செந்நாயிடம் திரும்ப வருவோம். கதையின் முடிவில் ஒரு பாறையிலிருந்து நழுவி ஊமைச்செந்நாய் ஒரு பள்ளத்தாக்கில் விழப்போகிறான். துரை தன் பெல்ற்றை குடுத்து அவனைக் காப்பாத்த முயற்சி செய்கிறான். ஆனால் ஊமைச்செந்நாயோ 'நீ நரகத்துக்குப் போ' என்று சொல்லிவிட்டு பெல்ற்றை பிடிக்காமல் பள்ளத்திலிருக்கும் பசிய மரங்களை நோக்கிப் போகிறான். முடிவு எனக்கு வடிவா விளங்கேல்ல என்று நினைக்கிறன். துரை தான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று தன்னிலை விளக்கமெல்லாம் குடுத்த பிறகு ஏன் ஊமைச்செந்நாய் துரையை மன்னிக்கவில்லை? நரகத்துக்போ என்று சொன்னதன் அர்த்தம் திரும்பி போக வழி தெரியாமல் அல்லது காட்டு மிருகங்களிடம் அடிபட்டு துரை செத்து நரகத்துப் போறதா? அல்லது சாகாமல் உயிரோட இருந்து ஒரு அடிமை போட்ட உயிர்பிச்சைல தான் உயிர் வாழுறன் என்ற குற்ற உணர்ச்கிதான் அந்த நரகமா?

21 comments:

மெல்போர்ன் கமல் said...

திரைப்படத்தில் சோப் வாங்கிக் குடுத்து குளிக்கச்சொல்லிட்டு அதன்பிறகு அவளைப் படுக்கைக்கு அழைக்கும் தமிழ்நாட்டுத் துரைகள் ஞாபகத்துக்கு வந்தார்கள்.

ம்....நீங்கள் சொல்வது ஷாஜகான் பட விவேக்கின் பகிடியை தானே?? எது ஆபாசம் என்று நம்ம ஆட்களிற்கு விளங்கேல்லைப் போல. சினிமாவில நடிகைகள் ஆபாசமாக நடிச்சா நம்ம ஆட்கள் அது ஆபாசம் இல்லை அது கவர்ச்சி என்று சொல்லிப் பார்ர்கிற கலிகாலம் இது. ஏன் அக்கா நம்ம பக்கம் எல்லாம் வர மாட்டீங்களோ???

மெல்போர்ன் கமல் said...

கணவரும் இந்த கழுவுற துடைக்கிற வேலையில பங்கெடுத்தால் மனைவிமார் அடிமையா நினைக்கமாட்டினம் என்றது வேற விசயம். மாமியார் மருமகள் பிரச்சனையும் இதானில்லையா :-.

என்ன தான் இருந்தாலும் நீங்கள் சிங்கிள் கப்பில சிக்ஸர் அடிக்கிற ஆள் தான். உங்களுக்கு வாறவருக்கு கூட்டல், பெருக்கல் வேலைகள் கண்டிப்பாக தெரிஞ்சிருக்க வேணும் என்று மறைமுகமாக சொல்ல வாறீங்கள்... அதோட நீங்கள் சீரியல் ராமா பார்க்க கணவன் உங்களை இருத்தி வைச்சு சாப்பாடு போடனும் என்று சொல்லுவீங்கள் போல இருக்கே.....

கானா பிரபா said...

//முக்கியமா ரிசிமூலம், உன்னைப்போல் ஒருவன், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன ஆகிய மூன்று நாவல்களும் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தையும் தந்தன. //

உன்னைப் போல் ஒருவன் படமாகவும் வந்தது, அருமையான நாவல், சுந்தரராமசாமி, ராமகிருஷ்ணன் படைப்புக்களை தேடி எடுத்து வாசிச்சுப் பாருங்கள். பெறுமதியானவை.

சந்தனமுல்லை said...

சிநேகிதி...நல்ல வாசிப்பு மற்றும் அலசல். நீங்க சொன்ன மாதிரி, அடிமை போட்ட உயிர்பிச்சை என்று வாழ்நாள் முழுக்க துரை மறுக வேண்டுமென்பதுதான் செந்நாய் சொல்ல வந்ததோ! மேலும், துரையின் உதவியால் உயிர்பிழைக்க விரும்பாத அவன் துரைக்குச் சொல்ல வந்ததென்ன?!

துளசி கோபால் said...

நல்ல விலேவாரியான அலசல்.

ஆமாம்....உங்கட ஊரிலே தமிழ்ப் புத்தகங்கள் வாசகசாலையில் கிடைக்குதா?

ஹூம்.........

(ஒன்னுமில்லே கொஞ்சம் லேசா புகை)

சினேகிதி said...

பெரியம்மா உங்கட காதில எல்லாம் புகை வரலாமா:-) எல்லா லைபிரரிலயும் கிடைக்காது. reference library என்று ஒன்றிருக்கு அங்க அநேகமான தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்கும். hold போட்டுவிட்டால் எங்களுக்குப் பக்கத்தில இருக்கிற லைபிரரியல் கொண்டுவந்து வைப்பார்கள்.

சயந்தன் said...

ஆமாம்....உங்கட ஊரிலே தமிழ்ப் புத்தகங்கள் வாசகசாலையில் கிடைக்குதா?

ஹூம்.........//

இன்னும் கொஞ்சம் புகையட்டும் துளசியக்கா... :) :)

http://blog.sajeek.com/?p=287

கோபிநாத் said...

நல்ல அலசியிருக்கிங்க...நானும் படிக்கானும்..நோட் பண்ணிக்கிட்டேன் ;)

விளம்பர முகாமைத்துவப் பிரிவு, சயந்தன் ஒலியலைக் கூட்டு நிறுவனம் said...

வானலை வரிசையில் ஒரு அதிரடிப் புரட்சி, ஒலிபரப்புத்துறையில் ஒரு நவீன திருப்பம், இணையத் தமிழ் ஒலியலையில் ஓர் எதிர்பாரத மாற்றம்! மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் உங்கள் இன்பத் தமிழ் வானெலி புகழ் சயந்தனின் புது முயற்சியில், அவரின் நேரடி நெறிப்படுத்தலில், தனியான நிர்வாகத்தின் கீழ் உங்கள் உலகப் புகழ் பெற்ற அமைதியின் நகரம் அமைந்திருக்கும் சுவிற்சர்லாந்திலிருந்து பண்பலையிலும், இணையத்தளத்திலும் , செய்மதி வாயிலாகவும் முதன் முறையாக அதி நவீன அம்சங்களுடன் அமைந்த, என்றுமே நீங்கள் கேட்டிராத பல புதிய வடிவில் துல்லியமான ஒலித் தெளிவுடன் ஒரு அதிரடித் திருப்பமாக ஆரம்பமாகவிருக்கிறது இருபத்தினான்கு மணி நேர வானொலி. இது பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இளம் அறிவிப்பாளர்களை நாங்கள் இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கவும் காத்திருக்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு, புதிய அறிவிப்பாளர்கள் எம்மோடு இணைந்து கொள்வதற்கு உடனடியாக உங்கள் விபரங்களைக் கீழே அனுப்பவும்…
விளம்பர முகாமைத்துவப் பிரிவு, சயந்தன் ஒலியலைக் கூட்டு நிறுவனம்.

ஹேமா said...

சிநேகிதி,அடிமை...ஆளுபவன் எங்கள் வாழ்வில் அடிக்கடி வந்துபோகும் சரித்திரத் தொடர்களாகிவிட்ட சொற்கள்.

சினேகிதி said...

இல்லை நான் விவேக் பகிடியைச் சொல்லவில்லை. ஏதோ ஒரு படத்தில் அரசியல்வாதியின் மகன் வீட்டு வேலைக்காரியிடம் சோப் வேண்டிக்குடுப்பார்.

\\மறைமுகமாக சொல்ல வாறீங்கள்... அதோட நீங்கள் சீரியல் ராமா பார்க்க கணவன் உங்களை இருத்தி வைச்சு சாப்பாடு போடனும் என்று சொல்லுவீங்கள் போல இருக்கே.....\\

அப்பிடியா?

சினேகிதி said...

\\உன்னைப் போல் ஒருவன் படமாகவும் வந்தது, அருமையான நாவல், சுந்தரராமசாமி, ராமகிருஷ்ணன் படைப்புக்களை தேடி எடுத்து வாசிச்சுப் பாருங்கள். பெறுமதியானவை.\\

ஜெயகாந்தனின் 9 நாவல்கள் இங்கத்த லைபிரரியில் இருக்காம் (துளசி பெரியம்மா புகையை நிப்பாட்டுங்கோ) அது முடிய அடுத்த சுற்று சுந்தரராமசாமிதான்.

துளசி கோபால் said...

புகை அடங்க நோ ச்சான்ஸ்......

சினேகிதி said...

\\மேலும், துரையின் உதவியால் உயிர்பிழைக்க விரும்பாத அவன் துரைக்குச் சொல்ல வந்ததென்ன?!\\

அந்தளவுக்கு ஆழமான வாசிப்புணர்வு இல்லைன்னு நினைக்கிறன் எனக்கு..நீங்களே பதிலையும் சொல்லுங்கோ.

சினேகிதி said...

\\ஆமாம்....உங்கட ஊரிலே தமிழ்ப் புத்தகங்கள் வாசகசாலையில் கிடைக்குதா?
ஹூம்.........//
இன்னும் கொஞ்சம் புகையட்டும் துளசியக்கா... :) :)
http://blog.sajeek.com/?p=287 \\

இதென்ன பாசை தெரியாமல் லைபிரரிக்கு போய் அப்புறம் தமிழ் புத்தகம் எடுத்த கதையா. (2வது விளம்பரம் இந்தப்பதிவில :-)

சினேகிதி said...

கோபிநாத் அலசல் விமர்சனம் என்றெல்லாம் சொல்லேலாது. வாசிச்ச அனுபவம் அவ்வளவுதான். படிச்சிட்டு சொல்லுங்க கதையை.

சினேகிதி said...

\\சிநேகிதி,அடிமை...ஆளுபவன் எங்கள் வாழ்வில் அடிக்கடி வந்துபோகும் சரித்திரத் தொடர்களாகிவிட்ட சொற்கள்.\\

வாங்க ஹேமா!

ramachandranusha(உஷா) said...

நல்ல அலசல்

//ஜெயகாந்தனின் 9 நாவல்கள் இங்கத்த லைபிரரியில் இருக்காம் (துளசி பெரியம்மா புகையை நிப்பாட்டுங்கோ) அது முடிய அடுத்த சுற்று சுந்தரராமசாமிதான்//

இந்தியாவின் மேற்கு மூலையில் இருந்து, இன்னும் ஒரு பெருமுச்சு ஹூம் :-(

சினேகிதி said...

ஹா ஹா இன்னொரு புகையா. எனக்கு இப்பவே கண்ணெரியுது இனி எங்க புத்தகம் வாசிக்கிறது. உங்க ஊர் லைபிரரிலயெல்லாம் இந்த மாதிரியான புத்தகங்கள் இருக்காதா? நான் இங்க ஒரு நாவல் வாங்குற பணத்துக்கு இந்தியாவில 9 நாவல் வாங்கலாம் என்று நினைக்கிறன்.

சயந்தன் said...

செல்லாது செல்லாது
ஒரு விளம்பரம்தான் எனது!
மற்றது நானில்லை.! ஆனா இனிவராது என்றத மட்டும் கொல்லிக்கிறேன். :) :)

Kanan said...

'கோகிலா என்ன செய்துவிட்டாள்' பற்றிய உங்கள் விமர்சனம்?