நீ இல்லாத நான்
உனக்குப் பிடித்த பாடல்களாலும்
உன்னை படித்த நாட்களாலும்
உன்னை வடித்த வரிகளாலும்
திமிருற்ற எந்தன் ஏட்டை
அழித்து விட்டு எனக்கு நானே
சொல்லிக்கொண்டேன நம் காதல்
கலைந்து விட்டதென்று
காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால்
உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து
இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன்
இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன்
சில்லென்று மெய் நனைக்கும்
ஒவ்வொரு நீர்த்துளியும்
உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன
ஆனாலும் உன்னை மறந்து விட்டேன்
உட்கொள்ளுமோர் பருக்கையிலும்
நிராசையாகிப்போன நம் ஆசைகள்
நளினத்தோடு எள்ளி நகையாடின
என்றாலும் நாம் பிரிந்து விட்டோம்
பார்வையில் பாசையில் தூண்டலில்
துலங்கலில் நிறத்தில் மணத்தில்
சுவையில் தூக்கத்தில் கனவில்
நினைவில் எங்குமாக எல்லாமாக
நீக்கமற நீ நிறைந்திருக்கலாம்!
அதனாலென்ன
எனக்கு நீ இல்லாத நான் கிடைத்துவிட்டேனென
உரக்கச் சொல்லிக்கொள்வேன்- உண்மையாகாதா?
-சினேகிதி-
22 comments:
nice!
ம்ம்ம்.. இப்பிடியெல்லாம் எழுதக் கூடிய ஒராள் அன்டைக்கு ஒருநாள் கவிதையெல்லாம் வராது என்டு சொன்னாவாம்!! :O)
நன்றி ஷ்ரேயா :-) அண்டைக்கென்ன இண்டைக்கும் சொல்றன் கவிதை எழுதும் முயற்சிதானிது.நன்
/இப்பிடியெல்லாம் எழுதக் கூடிய ஒராள் அன்டைக்கு ஒருநாள் கவிதையெல்லாம் வராது என்டு சொன்னாவாம்/
ஷ்ரேயா, எல்லாவற்றுக்கும் ஒரு தூண்டல்/தூண்டுதல் வேண்டுந்தானே. அந்தத் 'தூண்டல்' சினேகிதியிற்கு இப்போது வந்துவிட்டது போல :-).
அதுக்கெல்லாம் வயசு வரவேணும். இப்ப வந்திட்டுது; கவிதை வருது.
எங்களுக்குத்தான் வருதில்லை, வயசும் கவிதையும்.
வசந்தனண்ணா அதுக்கு நான் என்ன செய்ய?? கோயிலுக்குப்போய் திருப்பதி படத்தில அஜீத் அரச்சனை செய்த மாதிரி நீங்கள் வயசுக்கு வரோணும் என்று அர்ச்சனை செய்யுறதோ?
தூண்டல் துலங்கல் இருக்கட்டும் டிஜே கன நாளாய் ஏன் ஒன்றும் எழுதேல்ல?
தங்கச்சி,
'வயசு வரவேணும்' எண்டதை 'வயசுக்கு வரவேணும்' எண்டு மாத்திப் போட்டியளே!
உது ரெண்டுமே பயன்பாட்டில வேற வேற அர்த்தம் கண்டியளோ?
டி.சேயைப் போல தூண்டல்/துலங்கல் எண்டு நானும் எழுதியிருக்கலாம்.
ஒ.....நீங்கள் அந்த வயசைச் சொன்னீங்கிளோ? ஆமா என்ன வித்தியாசம்??? உங்கட பேய்க்கதை மாதிரி இதுக்கும் ஒரு விளக்கப் பதிவு போடுங்கண்ணா.
நெஞ்சை நெருடுகிறது சினேகிதி.
சில நினைவுகள் அழிக்கபட்டவை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம், பொய் என்று தெரிந்தும்.
வணக்கம் சக்திபிரபா....நீங்கள் சொன்னது போல தம்மைத்தாமே பொய் சொல்லி சமாதானப் படுத்துவர்கள் பலர்.இந்தக் கவிதைக்கு ஒரு நண்பன் எழுதிய இந்த வரிகளையும் படியுங்கள்.
\\வழிகள் தோறும் வலிகள் நிறைந்தது இந்த காதல்
சோலைகள் எங்கும் சோகம் மிக்கதும் இந்த காதல்
ஆற வழியின்றி அழ வைப்பதும் இந்த காதல்
இணைவின் இறுதியில் இனிமையும் இந்த காதலில் தான்
பிரிவின் விளிம்பில் வேதனையும் இந்த காதலில் தான்\\
அட இப்படியும் மனதில் சந்தோசத்தை மீண்டும் கொண்டுவரலாமா என்ன... வாழ்த்துக்கள் நன்றாக இருக்கிறது.
nanri tharshan...umada blog la irukira kavithaikal ellam vilanga kastama iruku :-(
நல்ல கவிதை சினேகிதி !
உண்மையில் படிக்க மனம் கனக்கிறது......
:((
வாழ்த்துக்கள்
//nanri tharshan...umada blog la irukira kavithaikal ellam vilanga kastama iruku :-(//
அப்பிடியா (!) எனி சினேகிதிகக்காக கீழே ஒரு விளக்கப்பதிவு போடவா? :-))
கொஞ்சம் ஆழ்ந்துபார்த்தால் அர்தம் காணலாம் சினேகிதி.
விளக்கப்பதிவு நீங்கள் போடுறீங்கிளோ இல்லையோ...நான் ஆழமாப் பார்த்தால் தண்ணிக்குக் கீழ தரைமட்டம் தான் தெரியுது:-)
\\வழிகள் தோறும் வலிகள் நிறைந்தது இந்த காதல்
சோலைகள் எங்கும் சோகம் மிக்கதும் இந்த காதல்
ஆற வழியின்றி அழ வைப்பதும் இந்த காதல்
இணைவின் இறுதியில் இனிமையும் இந்த காதலில் தான்
பிரிவின் விளிம்பில் வேதனையும் இந்த காதலில் தான்\\
-----------------------------------
இவை அனைத்துமே வாழ்வு நமக்குத் தரும் பாடங்களே... ஒவ்வொரு காலப் பகுதியிலும் நமக்கு ஏற்படும் அனுபவங்களே எம்மை ஒரு பொறுப்புள்ள முழுமையுடைய மனிதனாக்கும் என்பது எனது கருத்து.
காதல் போயின் சாதல் என்று சிலர் கூறுவார்கள்...
ஆயினும் சாதல் என்பது உங்களிற்கல்ல... அந்த சில விடயங்களும்... அறியாமையும், சிறுபிள்ளைத் தனத்திற்குமே... எது உன்னைக் கொல்லவில்லையோ அது உன்னை இன்னும் உறுதியுள்ளவராக ஆக்கும் என்னும் கூற்றிற்கமைய...
காதலால் காயப் படலாம்... ஆயினும். காதல் மட்டும் நமது வாழ்வாகி விடாது. கண்விழித்துப் பார்க்கும் பொழுது நம்மில் உண்மை அன்பு கொண்ட பெற்றோர், சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவார்கள்.
என்ன கெட்ட பழக்கம் இது.. எனக்கொரு அழைப்பு அனுப்பாமல் காதலை பற்றிக் கதைக்கிறது.. ? ஆமோ அப்பிடியோ.. என்னை விட்டுட்டு கதைப்பியளோ காதலை பற்றி..
nalla kavithai சினேகிதி
nanri Agathiyan!
நல்லாயிருக்கு சினேகிதி.
Attakasam
nanri nanri!
Post a Comment