Custom Search

Wednesday, July 12, 2006

கொள்ளையின்பம் தரும் மழலைகள்

எல்லாற்ற வீட்டிலயும் மழலைச்சத்தம் கேட்டிருக்கும் கேட்டுக்கொண்டிருக்கும் இல்லாட்டா இனிம கேக்கும் தானே?அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பண்ணிய குறும்புகளையாவது ரசிச்சிருப்பீங்கள் தானே:-)

எங்கட வீட்டயும் இரண்டு பபாக்கள் இருக்கினம்.இவை செய்யுற ஒவ்வொரு சின்னச் சின்னச் செயல்களும் நல்ல ஒரு கவிதை வாசித்த சுகத்தைவிட கூடச் சந்தோசம் தரக்கூடியவை.அப்படி நான் ரசிச்சு சிரிச்ச சில சந்தர்ப்பங்களை உங்களுக்குச் சொல்கிறேன் அதேமாதிரி நீங்கள் ரசித்தவற்றையும் சொல்லுங்கள்.

சின்னாக்கள் வடிவாக்கதைக்க முதல் திக்கித் திக்கி அரைகுறை வார்த்தைகளால் கதைப்பினம்.
கவினுக்கு இரண்டு வயசு.ஒரு சில வார்த்தைகள் மட்டுமே கதைச்சார் இப்ப " அத்தி அண்ணா பார்க் டொம்மா" என்று ஒவ்வொருநாளும் அஞ்சுமணிக்கு நச்சரிக்கத் தொடங்குவான்.சித்தி அண்ணாவை பார்க்குக் கூட்டிக்கொண்டு போங்கோ என்றதுதான் அதின்ர அர்த்தம்.தம்பி பிறந்தவுடனே எல்லாரும் அண்ணா என்று சொல்லிப்பழக்கித் தன்னைத்தானே அண்ணா என்று கூப்பிடுறார்.

தண்ணில விளையாடுறது எல்லாச் சின்னப்பிள்ளையளுக்கும் விருப்பம் போல.கவிணும் "அண்ணா கும் கும் குளிக்கிப்போ" என்று சொல்லுவார்...இன்று மழை பெய்தபோது ஓடி வந்தார் வந்து " அத்தி தாத்தாக்கார் அப்பாக்கார் மாமாக்கார் கும் கும் அ அ".

ஆதிப்பட அத்தி அத்திக்காய் பாட்டுப்போட்டாத்தான் சாப்பாடு தீத்தலாம்.வானுக்குள்ள பாட்டுப்போட்டா "சுற்றும் விழிச்சுடரே " ,"அத்தி அத்திக்காய் " ,"ரா ரா" இப்பி அவருக்கெண்டு கொஞ்ச பாட்டிருக்கு.பாட்டின்ர ஆரம்ப இசை வரவே அவர் பாடத் தொடங்கிடுவார் மிச்ச பாட்டு. அதே மாதிரி ப்ளு குளூஸ் விக்கிள்ஸ் என்றாக்காணும் சாப்பாடும் வேண்டாம்.

கவின்ர பக்கத்துவீட்டு பிரண்ட்ஸ் கொஞ்சம் பெரிய ஆக்கள்.இப்ப கின்டர்கார்டின் போயினம்.அவேன்ர அம்மம்மா சொல்லுவா இவங்கள பக்கத்தில வச்சுக்கொண்டிருந்தா ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சுக் கதைக்கோணும் என்று.ஒருநாள் தெரியாத்தனமா கெட்டவார்த்தை என்று சொல்லிட்டாவாம் உடனே அவான்ர பேரன்கள் இரண்டு பேரும் ஓ ஓ என்று சொல்லத்தொடங்க தானுடனே "excuse ma french " என்று சொல்ல அவை உடனே "hmm that wasn't french" என்று சிரிக்கினமாம்.
இப்பிடி நீங்கள் ரசித்தவற்றைச் சொல்லுங்கள். :)

-சினேகிதி-

10 comments:

வசந்தன்(Vasanthan) said...

சரியாப் போச்சு.
காதல் கவித வந்து நாலு நாளில குழந்தைப் பதிவு வந்து நிக்குது.

சினேகிதி said...

\\சரியாப் போச்சு.
காதல் கவித வந்து நாலு நாளில குழந்தைப் பதிவு வந்து நிக்குது. \\

haha :-)

கானா பிரபா said...

மழலை மொழி கேட்பதே தனி இன்பம் தான்

பரஞ்சோதி said...

சகோதரி,

மழலையின் பேச்சுக்கு இணையான இன்பம் வேறு இல்லை என்பதை அறிந்தவன் நான்.

என் மகள் சக்திக்கு இப்போ வயது ஒண்ணரை ஆகுது, என்ன பேச்சு எல்லாம் பேசுகிறார் தெரியுமா?

இங்கே BABY TV வருது, காலையில் எழுந்து முதல் பேச்சு, அம்மா பீபீ டி அபா பீபீ டி என்பது தான்.

அப்புறம் நான் please உபயோகிப்பதை அறிந்து இப்போ எது தேவை என்றாலும் அம்மா பீஸ், அப்பா பீஸ் என்று தேன் சுவை குரலில் சொல்லி வாங்கி விடுகிறார். என் வாழ்க்கையில் மேலான இன்பம் இதுவே என்று நினைக்கிறேன்.

சரவணகுமார் said...

சினேகிதி,
வணக்கம்

நீங்கள் எழுதும் சிங்களத்தமிழ் எழுத்து நடையே என்னை போன்ற தமிழ்நாட்டில் உள்ளவனுக்கு (புரிந்தும் புரியாமலும் அதே நேரம் சுவையாகவும்) மழலை போல்தான் இருக்கிறது ..:))

மற்றபடி இந்த பதிவு பற்றி ஒரு பெரிய பின்னூட்டம் நாளை இடுகிறேன்

சினேகிதி said...

நன்றி பிரபாண்ணா!

பரஞ்சோதி அம்மா பீஸ் அப்பா பீஸ் ஆ...ஹா ஹா இங்கயும் அதே கதைதான்.

சரவணகுமார் அதென்ன சிங்களத்தமிழ்??சத்தியமா எனக்கப்பிடியொரு பாசை தெரியாது! புதுசா இருக்கு.ஒருக்கா சிங்களத்தமிழ் எழுதிக்காட்டுங்கோ பிளீஸ்.

சின்னக்குட்டி said...

நல்லொதொரு பதிவு... சிநேகதி வாழ்த்துக்கள்.
//சிங்களத்தமிழ்//

சரவணகோபால் சார் நீங்கள் சொன்ன மற்ற கருத்தெல்லாம்... ஓகே...நீங்கள் அறியாமால் சொல்லும் சிங்களத் தமிழ் என்பது ஏற்று கொள்ள கூடியதாயில்லை..

இத்தருணத்தில் முந்தி நடந்த சம்பவமொன்றை சொல்வது பொருத்தமாயிருக்குமன்று நினைக்கிறன். சிவாஜி நடித்த இலங்கை இந்திய கூட்டு தயாரிப்பான பைலட் பிரேம்நாத்தில் உள்ள பாடலொன்றில் நாலு பக்கம் கடல் சூழவுள்ள சிங்கள தீவு என்ற வரி வருகிறது... அந்த வரிகளை மாற்றினால் தான் யாழில் அந்த படத்தை ஓட விடுவோமென்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.... பின் நாலு பக்கம் கடல் சூழவுள்ள இலங்கை தீவு என்று வரிகளை மாத்திய பின்னர் தான் அந்த படத்தை மக்கள் ஓட விட்டார்கள்

சினேகிதி said...

என்ன சின்னக்குட்டி சிங்களத்தமிழ் என்று சொல்லிட்டார் என்று அவற்ற பெயரையே சரவணகோபால் என்று மாத்திட்டீங்கள் :-)

சின்னக்குட்டி said...

//அவற்ற பெயரையே சரவணகோபால் என்று மாத்திட்டீங்கள் :-) //

ஆமா....மாத்திட்டன் அல்லா...... அவற்றை பெயர்...சரவணகுமாரா எல்லோ......

வசந்தன்(Vasanthan) said...

//நீங்கள் எழுதும் சிங்களத்தமிழ் எழுத்து நடையே என்னை போன்ற தமிழ்நாட்டில் உள்ளவனுக்கு (புரிந்தும் புரியாமலும் அதே நேரம் சுவையாகவும்) மழலை போல்தான் இருக்கிறது ..:))//


இது இவருக்கு மட்டும் உரிய பிரச்சினையில்லை. பலருக்கு இருக்கிறது.
சிங்களத் தமிழ், சிங்களத் தமிழர் என்ற பதங்கள்கூட வலைப்பதிவில் பாவிக்கப்பட்டன. நான் வலைப்பதிய வந்த புதிதில் இப்படி ஓரிருவர் சொல்லினர். நான் மறுத்து விளக்கம் அளித்திருக்கிறேன்.

ஈழத்தமிழையும் ஈழத்தமிழரையும் தான் இப்படிச் சொல்கின்றனர்.
ஏன், எதற்கு, எப்படி என்று எனக்கும் ஆச்சரியம்தான்.