Custom Search

Monday, July 10, 2006

மல்ரிபிள் பேர்ஸனாலிற்றி டிஸ்ஓடர்










இந்தப்பெயர் நமக்குப் புதிதில்லை.தமிழ்ச்சினிமாக்களில் அடிக்கடி தடக்குப்படும் வித்தியாசமான மனநோய்.சந்திரமுகில ஜோதிகா,அந்நியன்ல அம்பி ,பார்த்திபனுடைய ஒரு படம் இப்படி நிறையப் பார்த்து விட்டோம்.

அதிசயமான புதிரான பலர் அறிய ஆவலாயுள்ள உளவியல் சிக்கல்களில் விவாதத்துக்குரியதும் ஆராய்ச்சியாளர்களோடு மல்லுக்கட்டும் ஒரு மனநோய்தான் இந்த MPD.

இவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவருடைய குணாதிசியங்கள் இருக்கும்.ஒவ்வொரு குணாதிசயத்தையும் ஒவ்வொரு "Alter" என்று சொல்வார்கள்.ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு அல்டர் இவர்களில் ஆதிக்கம் செலுத்தும்.உதாரணமா அந்நியனில் விக்ரம் சில நேரம் அந்நியனாகவும் சில நேரம் அப்பாவி அம்பியாகவும் அட்டகாச றெமோகாவவும் வருவாரே.இந்த அல்டரில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் மருத்துவரிடம் வரும் MPD க்கு தன் அல்டர்களைப் பற்றி அநேகமாகத் தெரிந்திருக்காது ஆனால் அல்டர்களுக்கு தம் நிலையான பாத்திரம்(original patient) பற்றியும் தன் மற்ற அல்டர்களைப் பற்றி முழுவிபரமும் தெரியும்.இந்த அல்டர்கள் வேறு வேறு பிரதேசங்களில் வசிக்கும் வெவ்வேறு வயதுடைய வெவ்வேறு இனமாகவோ ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் என்பது மற்றொரு வியப்பூட்டும தகவல்.

MPD உள்ளவர்களை சோதனைக்குட்படுத்தி அறிந்த ஆச்சரியமான உண்மைகளில் இவர்களுக்கு வெவ்வேறு இசை ரசனை, IQ ,வித்தியாசமான ஒவ்வாமைகள் இருப்பதும் அடங்கும்.

இந்த MPD க்கள் தங்கள் சின்ன வயதில் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப் பட்டிருக்கக் கூடும் என்பது உளவியலாளர்களின் கருத்து.இந்த MPDக்களின் அல்டர்கள் இவர்களின் ஒன்பதாவது வயதுக்கு முதலே உருவாகத் தொடங்குகிறார்கள்.ஒவ்வொரு அல்டரும் ஒவ்வொரு விதமான பாலியல் துன்புறுத்தலின்போது வளரத்தொடங்குகிறது.இந்த MPDயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்பது கசப்பான உண்மை.

-சினேகிதி-

9 comments:

கார்திக்வேலு said...

There are also some famous legal battles ..with people trying to use this as a ploy to get away doing some horrendous crimes .

There are some real life people playing "Alter EGO's" (Dame Edna comes to my mind ) .

Its a challenge to identity the induced MP and the disorder .

True that women suffer more of it than men .

"மல்ரிபிள் பேர்ஸனாலிற்றி டிஸ்ஓடர்"

(பல்முக ஆளுமை நோய் ??)

சினேகிதி said...

yea you r right Karthikvelu...it's debatable! some critics argue that therapists r the ones who actually direct MPD patients to find more alters.

சீனு said...

//பார்த்திபனுடைய ஒரு படம்//

அது "குடைக்குள் மழை" என்ற கவித்துவமான படம். இதைப் போய் மறந்துட்டீங்களே? உங்களை...

சினேகிதி said...

senu enai?? vida adichuduveengal pola :-)

Thekkikattan|தெகா said...

இந்த Multiple personality disorderயை இப்போ Dissociated Identity Disorder என்ற பெயர் மாற்றம் செய்து விட்டார்களாம். இது போன்ற ஆல்டர்கள் தனக்கு இன்னல்கள் ஏற்படும் பொழுது அதிலிருந்து தன்னை தற்காத்து கொள்ளும் வண்ணம் தன்னை dissociate பண்ணி பழகிக் கொள்வதால், அதுவே தொடர்ந்து நடை பெறும் பொழுது பிறகு ஒவ்வொரு வித உணர்ச்சிகளுக்கும் ஒரு விதமான ஆல்டர் வெளி வர ஆரம்பிக்குமாம்.

இதில் குழந்தை போன்ற ஆல்டர்களும் அடக்கம், 30 வயது உடம்புக்குள் 5 வயது குழந்தை இருக்கலாம், அந்த 30 வயது அம்மா 5 வயது குழந்தை போல நடந்தும் கொள்ளலாம். ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான ஃபீல்டு.

சினேகிதி said...

தெக்கிக்காட்டான் டிஸோயிற்றிவ் டிஸ்ஓடர் ல் மூன்று பிரிவு உண்டு. சைக்கோஜீனிக் அம்னீசியா, சைக்கோஜீனிக் fugue மற்றதுதான் MPD .ஏற்கனவே நான் சொன்னது போல \\MPD உள்ளவர்களை சோதனைக்குட்படுத்தி அறிந்த ஆச்சரியமான உண்மைகளில் இவர்களுக்கு வெவ்வேறு இசை ரசனைஇ IQ இவித்தியாசமான ஒவ்வாமைகள் இருப்பதும் அடங்கும்.

ராபின் ஹூட் said...

மாயவரத்தான் என்ற ஒருவர் பல பெயர்களில் மறைந்து வந்து ஆபாச பின்னூட்டம் இடுகிறாரே? அதுவும் மல்டிபிள் பர்சனாலிட்டிதானே?

சீனு said...

//senu enai?? vida adichuduveengal pola :-)//

"குடைக்குள் மழை" ஒரு அருமையான "பரீட்சார்த்தமான" படம். (அந்த படத்தை எடுத்த பார்த்தீபன் தான் 'பச்சக் குதிர' என்னும் மட்டமான படத்தை எடுத்தார்).

மற்றபடி, MPD பற்றின படம் "Me, Myself & Irene". ஜிம் கேரி-யின் வழக்கமான அருவருக்கத் தகுந்த காமெடி காட்சிகளை தவிர்த்துப் பார்த்தால், இது ஒரு நல்ல படம் என்றே சொல்லலாம். அதுவும் ஜிம்மின் மூன்று பசங்களும் பேசும் 'MF' பேச்சுக்கள் இருக்கிறதே!!! (ஹூம்...நல்ல படமாயிருந்தால் recommend பண்ணலாம்...

சினேகிதி said...

\\அதுவும் ஜிம்மின் மூன்று பசங்களும் பேசும் 'MF' பேச்சுக்கள் இருக்கிறதே!!! (ஹூம்...நல்ல படமாயிருந்தால் recommend பண்ணலாம்... \\ :-)

நன்றி சீனிவாசன் வருகைக்கும் கருத்துக்கும்.