Custom Search

Thursday, May 04, 2006

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்..




சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது.இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிற சந்தர்ப்பம் இன்று எனக்கு வாய்த்தது.அதால நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொல்லோணும் என்ன.

அப்ப எனக்கொரு மூன்று வயசிருக்கும்.அம்மாவும் அப்பாவும் வீட்ட இல்லை நானும் அக்காவும் அம்ம்மா வீட்டதான் நின்டனாங்கள்.அம்மாவும் அப்பாவும் வீட்ட வந்திட்டினம் அம்மம்மா சாய்மனைக் கட்டில்ல தடியோட இருக்க நானும் அக்காவும் ஹ_ட்வாசல்ல முழசிக் கொண்டிருக்கிறம்.அம்மா வந்ததுதான் தாமதம் அம்மம்மா போட்டுக்குடுக்கத் தொடங்கிட்டா.

அம்மம்மா: பிள்ளை இஞ்ச வந்து பார் உன்ர பெட்டையள் இரண்டும் என்ன செய்திருக்குதுகள் என்று.

அம்மா: என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்?

அம்மம்மா: அதில்லை இன்டைக்கு இரண்டும் சம்பல் இடிச்சு வைச்சிருக்குதுகள்.என்ன சம்பல் தெரியுமே? புவுண் சம்பல்.

அம்மா:என்னம்மா? புவுண் சம்பலோ?

அம்மம்மா:அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து காப்பு சிமிக்கி எல்லாத்தையும் கழட்டி உரலுக்கை போட்டு இடிச்சு வைச்சிருக்குதுகள்.

உரலுக்கு நசிஞ்சு போய்க் கிடந்த எல்லாத்தையும் அம்மம்மா எடுத்துக் கொண்டு வந்து காட்டினா அவ்வளவும் தான் தெரியும் அடுத்த நிமிசம் புக்கத்தில நின்ற செவ்வரத்தையை முறிச்சு இரண்டு பேருக்கும் நல்ல வெளுவை.

அடுத்த திருவிழா ஒரு புpறந்த நாள் விழாக்குப் போட்டு வந்த இரவு நடந்தது.வீட்டுக்குள்ள வரும்வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.அப்பா நல்லாத்தான் கதைச்சுக் கொண்டு வந்தவர்.வீட்டுக்குள்ள வந்த உடன கதிரைல தூக்கி இருத்தினார்.இருத்திப்போட்டு பிரம்பு எடுத்துக்கொண்டு வந்தார்.

அப்பா:இரண்டு பேரும் கையை நீட்டுங்கோ.

நானும் அக்காவும் : ஏனப்பா நாங்கள் ஒரு குழப்படியும் செய்யேல்லயே.

அப்பா: கைய நீட்டைச் சொன்னான்.

இரண்டு பேருக்கும் மூன்று மூன்றடி.

அப்பா: எத்தினாள் சொன்னான் உடைஞ்ச பலூனை வைச்சு விளையாட வேண்டாம்.முட்டை விட வேண்டாம் என்று.பிரவீனாக்கு பலூன் துண்டு தொண்டைல ஒட்டி என்ன நடந்தது என்று தெரியும் தானே.இனிம பலுனைக் கண்டாலே இந்த அடிதான் ஞாபகம் வரோணும்.

ஒரு நாள் நாங்கள் பக்கத்து வீட்டு பிள்ளையள் எல்லாரும் சேர்ந்து உக்கிப் போன மண்ணெண்ணை பரலுக்கு மேல உருண்டு விளையாடினாங்கள்.பரலில படுத்துக்கொண்டு காலால உருட்டினா இது உருளும்.எத்தின பேர் இந்த விளையாட்டு விட்டிருப்பியள்.அதில கிடந்த ஒரு உக்கின இரும்புத் துண்டு அக்காக்கு குத்தி இரத்தம் வந்திட்டுது.டாக்குத்தர் மாமாட்ட போய் மருந்தெல்லாம் போட்டிட்டு வந்திட்டு இரண்டு பேருக்கும் விளாசல் தான்.

பிறகொருநாள் அக்கா நெல்லி மரத்தில ஏறி நின்டுகொண்டு நெல்லிக்காய் ஆய்ஞ்சு போட போட நான் கீழ நின்று பொறுக்கிக் கொண்டு நிண்டனான்.அக்கா ஒருநாள் நான் அங்கர் மா களவெடுத்து சாப்பிட்டத அம்மாட்ட கோள்மூட்டிட்டா அந்தக் கோவத்தில சும்மா அவாவை வெருட்டுறதுக்காக அக்கா நீ நிக்கிற கொப்புக்குப் பின்னால கோடாலிப் பாம்பு நிக்குது என்று ஒரு பொய்யைச் சொன்னன்.அவா பயத்தில பலன்ஸ் இல்லாம தொபுக்கடீர் என்று விழுந்திட்டா.பெரிய உயரம் இல்லை நெல்லி மரம் ஆனால் விழுந்த இடத்தில இருந்த கல்லு உள்ளங்கையில குத்திட்டுது அவாக்கு.அன்டைக்கும் எனக்கு புூசைதான்.

இன்னொருநாள் உப்பிடித்தான் கோயில் திருவிழா நெரிசல்ல "அம்மா அப்பான்ர சைக்கிள் டைனமோவைக் களவெடுத்தது இந்த மாமா தான " என்று நான் கத்திட்டன்.அவருக்கு ஒரு மாதிரிப் போட்டுது.அம்மாக்கு ஏன்தான் என்னை கோயிலுக்குக் கூட்டிக் கொண்டுவந்தம் என்று ஆயிடுச்சு. என்னைக்.கோயிலுக்குள்ள கூட்டிக்கொண்டே போய் இறுக்கி நுள்ளி விட்டா.

இன்னும் நிறைய சளார் பளார் சடீர் எல்லாம் இருக்கு.ஆனால் இனிம நீங்கள் சொல்றதைக் கேப்பம்..நான் நிப்பாட்டுறன் நீங்கள் உங்கட வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்துங்கோ.

-சினேகிதி-

14 comments:

theevu said...

பவுண் சம்பலுக்கு போட்ட அடி காணாது:)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//அம்மா அப்பான்ர சைக்கிள் டைனமோவைக் களவெடுத்தது இந்த மாமா தான //

:O))

சின்னக்குட்டி said...

எனக்கு...உந்த பூவரசும்பூ தடியாலை...வேண்டின ..அநுபவம்...கனக்க....க.....கா பிள்ளை இல்லை...நான்.....அச்சா பிள்ளை................சின்னவிசயமெண்டாலும்....போட்டடிக்கும்.....வீட்டுப்பிரச்சனையின்ரை.....ஆத்திரத்தை....எனனிலை காட்டுவினம்....செய்வியா..செய்வியா.....என்று கேட்டு அடிப்பினம்....அப்படி..பெரிசாய் ஏதும் பிழை செய்ததா தெரியறேலை ....

நன்றி...சினேகதி...நல்லதொரு பதிவு...வாழ்த்துக்கள்

சினேகிதி said...

வணக்கம் ஸ்ரோயா நலமா? என்ன சிரிப்போட நிப்பாட்டியாச்சு? நீங்கள் அடியே வாங்காத அச்சாப்பிள்ளை போல:-)

சினேகிதி said...

வணக்கம் சின்னக்குட்டி...தமிழ்மணத்தில பாட்டிக்கு கடிதம் எழுதின ஒரு சின்னக்குட்டி இருக்கிறார் நீங்களா அது ? பூவரம் தடியாலயா:-) சூப்பர்.

சினேகிதி said...

ஏன் தீவு காணாது? நல்ல காலம் நீங்கள் பக்கத்தில இல்லை இருந்திருந்தா காணாது இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று தடி முறிச்சுக் குடுத்திருப்பியள் போல.

இளங்கோ-டிசே said...

நான் இப்ப மட்டுமில்லை சின்னப்பிள்ளையாக இருக்கும்போதும் நல்ல பிள்ளையாய் இருந்ததனால் ஒருத்தரிட்டையும் அடிவாங்கவில்லை :-). சினேகிதி உங்களினதும் பின்னூட்டம் எழுதிய ஆக்களினதும் சம்பவங்களைப் பார்த்தால் எனக்கு ஏதோ உலக் அதிசயங்களாய்த் தெரிகிறது. இப்படி உங்கடை வண்டவாளங்களை எல்லாம் சொல்லி என்னையும் குழப்படிக்கார பெடியனாக்க வேண்டாம் :-))))).

வெளிகண்ட நாதர் said...

//நீங்கள் உங்கட வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்துங்கோ.//
என்னமா பேத்தி, நீ ஏத்தினது பத்தாதா?

Muthu said...

உங்க சேட்டைகளைப் பார்த்தபின்னால் பலருக்கும் மலரும் நினைவுகள் வருமென்று நினைக்கிறேன். என்னைப் போலவே :-)

சினேகிதி said...

டிஜே சின்னன்ல குழப்படி இல்லை என்று சொல்றீர் ஓரளவுக்கு நம்பலாம் ஆனால் இப்பவும் குழப்படியில்லை என்று சொல்றது நம்புறமாதிரி இல்லையே:-) நாங்கள் சொல்றது உலக அதிசயமா இருக்கோ உமக்கு.

சினேகிதி said...

ஹாய் தாத்ஸ்! நலமா? நான் சொல்றது இருக்கட்டும் நீங்கள் ஏற்கனவே உங்கட வலைப்பதிவில உங்கட வால்தனம் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கிறீங்கள் தான் இருந்தாலும் மிச்சத்தையும் சொல்லுங்கோ.பேத்திக்கு கேக்கோணும் போல இருக்கு.

சினேகிதி said...

வணக்கம் முத்து.மலரும் நினைவுகளை என் பதிவு மீட்டு வந்ததில் மகிழ்ச்சி.

U.P.Tharsan said...

// பிள்ளை இஞ்ச வந்து பார் உன்ர பெட்டையள் இரண்டும் என்ன செய்திருக்குதுகள் என்று.

என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்? //

கனகாலம் இப்படியான உரைநடைகளை கேட்டு. :-)) கேட்க ஆசையாய் இருக்கிறது. ;-)) சிறுவயதில் செய்த கூத்துக்களை என்றும் மறக்க முடியாதுதான். அதனால்தான் நானும் மீனாப்பீத்தல் என்ற ஒரு பதிவைப்போட்டேன். :-))

சினேகிதி said...

தர்சன் நலமா? மீனாப்பித்தல் கொஞ்சம் சோகம்.