90:10 என்றொரு அடிப்படைக் கொள்கை
90:10 என்றொரு அடிப்படைக் கொள்கைஇருக்காமே?உங்கள் எல்லாருக்குமே அது தெரியுமோ? சத்தியமா எனக்குஇதுவரைக்கும் தெரியாது. அம்மா சொல்றவா நான் ஒரு அவசரக் குடுக்கையாம்.என்ன செய்யிறதெண்டாலும் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்து போட்டு பிறகு இருந்துயோசிக்கிறனாம். பதறாத காரியம் சிதறாதாம் என்று சொல்றவா தான் நான் கேட்டால் தானே.அப்பா ஒரு கதை சொன்னா நான் பத்துக் கதை சொல்லுவன் பிறகு வாய்க்கு வாய் காட்டதா என்று அப்பா பளார் என்று ஒன்று போட்டாப் பிறகு மூஞ்சையைத் துÖக்கி வைச்சுச்கொண்டு கொஞ்ச நேரம் திரிவன்.
சும்மா மாடு சொன்னா கேக்காட்டாலும் மணி கட்டின மாடு சொன்னாக் கேக்கேணும் தானே. ஒரு மணி கட்டின மாடு 90:10 கொள்கை பற்றி எனக்கு சொல்லிச்சுது அதான் நான் உங்கள் எல்லாருக்கும் மாட்டுப் பாசை விளங்காதெண்டு மனித பாசையில சொல்றன் கவனமாக் கேட்டிட்டு வாழ்க்கைக்கு பிரஜோசனமாப் பயன்படுத்துங்கோ என்ன.
ஒரு நாளைக்கு ரெயின் வர லேட்டானா அடுத்த ரெயின் வர இன்னும் ஒரு மணித்தியாலம் ஆகுமெண்டால் அன்றையநாள் வகுப்பு அம்பேல்தான். போற வழியில கார் மக்கர் பண்ணலாம் அல்லது ஒரு வோல்வோ ட்றக் சாரதி நித்திரை தூங்கிக் கொண்டே வந்து காரை இடிக்கலாம். இப்பிடி வாழ்க்கையில எதிர்பாரமா நடக்கிற விசயங்கள் 10% தான் ஆனால் இப்பிடி ஏதாவது நடந்தாப் பிறகு நாங்கள் என்ன செய்ய முடிவெடுக்கிறம் என்றதிலதான் வாழ்க்கையின் மிச்ச90% தங்கியிருக்காம்.
ரெயின் வரத் தாமதமாவதை என்னாலோ, உங்களாலேயோதடுக்க முடியாது. ஆனால் ஒரு மணித்தியாலம் வெள்ளன வெளிக்கிட்டா ஐயோ ரெயின் லேற்றா வந்திட்டுதே இனிம நான் எப்ப வகுப்புக்குப் போய் எப்ப அஸைன்மன்ற் ஐ குடுக்கிறது என்று புலம்புறதை நிப்பாட்டலாம். (வேற வேலை இல்லை 8.30 வகுப்புக்கு 6 மணிக்கா வீட்டை விட்டுப் போறது:-).
சரி இந்த 90% எங்களிலதான் தங்கியிருக்கா என்று பார்ப்பம்.
காலமச் சாப்பாடு எல்லாரும் ஒன்றா இருந்து சாப்பிடுறியள். மகள் கவின்யான்ர கை பட்டு வேலைக்கு வெளிக்கிட்டு நின்ற அப்பான்ர சேர்ட்டில மேசையில கிடந்த தேத்தண்ணி ஊத்துப்பட்டிடுத்து. தேத்தண்ணிய ஊத்தோணும் என்று கவின்யா ஊத்தேல்ல. எதிர்பாராத விதமா நடந்தது இது. ஆனால் அடுத்து அப்பா என்ன செய்யிறது என்றது அப்பான்ர கையிலதானிருக்கு.
ஒரு வேலை ஒழுங்காச் செய்யத் தெரியாது.இப்பவும் சூட்டி பபாவுக்கு நிக்கிறது.கண்டறியாத ரீவி ஒன்று. ரீவியை ஆவென்று பாத்துக் கொண்டு தேத்தண்ணிய அருமந்த சேர்ட்டில ஊத்தியாச்சு.
அவள் என்ன வேணுமென்றா ஊத்தினவள்.பள்ளிக்கூடம் வெளிக்கிட்ட பிள்ளைய அழ வைச்சாச்சு. - இது அம்மா.
எல்லாம் உன்னாலதானப்பா. தேத்தண்ணியக் கொண்டு வந்து நுனி மேசையில வைக்க வேண்டியது பிறகு மகாராணிக்கு வக்காலத்து வாங்கிறது.
அடுத்த 10 நிமிசத்தில அப்பா வேலைக்கு ஆயத்தம் ஆனா கவின்யா அழுதும் முடிக்கேல்ல சாப்பிட்டும் முடிக்கேல்ல.
எனக்கு நேரம் போட்டுது. அழுதது காணும் கார் ஸ்ரார்ட்டில நிக்குது கெரியா வா கவின்யா.
காருக்கயும் அவளைத் திட்டாதயுங்கோ. போட்டு வாங்கோ.-இது அம்மா.
கவின்யாவக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில விட்டிட்டு வேலைக்கு போற அவசரத்தில 120ல ஓட வழியில மாமா மறிச்சு ஒரு 100 டொலருக்கு ரிக்கற் தந்து விட்டார் போனஸாக. பள்ளிக் கூட வாசல்ல கவின்யாவ இறக்கி விட கோவத்தில கவி போட்டு வாறன் அப்பா என்று சொல்லாமப் போக, கோவம்,வருத்தம் எல்லாம் கூடிட்டுது. வேலைக்கு அரை மணித்தியாலம் தாமதமாப் போய் அங்கயும் பத்தாதக்கு யாரோடயும் சத்தம் போட்டு ...சா தேவையா இதெல்லாம்? தெரியாம தேத்தண்ணி தட்டுப்பட்டு ஊத்துப்பட்டதில தொடங்கி எங்க வந்து நிக்கிறார் அப்பா.
இதுக்கு யார் காரணம்?தேத்தண்ணியா?கவின்யாவா?அம்மாவா?ரிக்கற் தந்த மாமாவா? இல்லாட்டா அப்பாவா?
அப்பாதான் காரணம்.
தேத்தண்ணி ஊத்துப்பட்ட உடனே அப்பா கோவப்பட்டு சத்தம் போட்ட அந்த சில வினாடிகளதான் எல்லாத்துக்கும் காரணம்.
அப்பா கவியில கோபப்படாம, பறவாயில்ல கவிம்மா... இனிம இப்பிடி கவலைனமா இருக்கக் கூடாது. பள்ளிக்கூடம் போற நேரத்தில கட்டாயம் ரீவி பார்க்கோணுமோ.வந்து பார்க்கலாம் என்ன. நீங்கள் வெளிக்கிட்டாச்சா? அப்பா இரண்டு நிமிசத்தில உடுப்பு மாத்திக் கொண்டு ஓடி வாறன். அம்மா எனக்கு இன்னொரு ரீ போடுங்கோ.
கவியை ஸ்கூல்ல விட கவி அப்பா போட்டு வாறன் பின்னேரம் மாமா வீட்ட போறம் தானே? ஓம் போறம். மூன்றரைக்கு வெளில வந்து நில்லுங்கோ கவி அப்பா வாறன் ஏத்த. அப்பா வேலைக்குப் போய் நிம்மதியாய் வேலை செய்திட்டு வீட்ட வாறார்.
அப்பா தேத்தண்ணி ஊத்துப் பட்டதுக்காக கோபப்பட்டுக் கத்தினார். அப்பிடி கத்தாம கவியை இனிம இப்பிடிச் செய்யக் கூடாதெண்டு சொல்லியிருக்கலாம்.
இப்பத்தான் 90:10 தெரியுமே.. . யாராவது உங்களைப் பற்றி குறைவாச் சொன்னா உடன நீங்கள் எந்த விதத்திலயும் குறையப் போறதில்லை. உடனே ஆத்திரப்பட்டுசத்தம் போட்டால் வீணா மனஉளைச்சல் தான் மிஞ்சும். அவசரத்தில செய்யுற எதுவுமே நல்ல முடிவைத் தாறதில்லை.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சும்மாவா சொல்லி வைச்சிருக்கினம்?அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டிட்டு பிறகு கவலைப்படுறது. மேலாளரோட சண்டை பிடிச்சிட்டு வேலையை விட்டிட்டு வாறது. பிறகு வேலை போச்சே என்று கவலைப்படுறது.கவலைப்படுறத விட்டிட்டு அடுத்த வேலையைத் தேட அந்தச் சக்தியை பயன்படுத்தச் சொல்லித்தான் 90:10 சொல்லுது.
நண்பர்களோட வாக்குவாதப்படுவானேன் பிறகு அநியாயமா நல்ல ஒரு நட்பைத் தொலைச்சிட்டன் என்று புலம்புவானேன்?என்ன காரியம் செய்ய முதலும் 90:10 கொள்கையை ஒரு கணம் ஞாபகப்படுத்தி இனிமேலாவது நல்லாயிருப்பமே.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்:-)
9 comments:
//எதிர்பாரமா நடக்கிற விசயங்கள் 10% தான் ஆனால் இப்பிடி ஏதாவது நடந்தாப் பிறகு நாங்கள் என்ன செய்ய முடிவெடுக்கிறம் என்றதிலதான் வாழ்க்கையின் மிச்ச90% தங்கியிருக்காம்.//சரியா சொன்னமா என் கண்ணு, இதில 90% நடக்க கூடியது அத்தனையும் நம்ம கையில தான் இருக்கு!
என்ற பார்வையிலிருந்து இந்த பதிவு எப்படி காணாமா போவம்.நன்றாக கதைக்கிறீங்கள்.நாமதானே புள்ளங்களுக்கு சொல்லி குடுக்கோனும்.புள்ளங்கமேல சத்தம் கூடாது. அது அல்லாரையும் வஞ்சித்துடும். நான் வந்து அப்பகிட்ட பேசும்.கவியை வைய வேணாம்.சாயங்காலம் வந்து ரீவி பாக்கலாமோ .பள்ளி போகும் போது சமத்து புள்ளய போகனும் .அப்ப வேலைவிட்டு வந்து கவிய பிக்கப் பன்னிப்பேனாம்.சரியா இப்ப சந்தோஷமா.தேத்தண்ணி குடிசுண்டு வந்து இன்னும் கதைக்கின்றன்.
ஹாய் தாத்ஸ் :-) இத நான் சொல்லேல்ல யாரோ சொன்னது அதை நான் எனக்கு விளங்கினமாதிரி சொல்லியிருக்கிறனம்.ஆனால் உண்மைதான் நாமதான் எல்லாத்துக்கும் காரணம்.
என்ன சிங் தேத்தண்ணியென்றெல்லாம் சொல்றீங்கள்? அதுசரி இவ்வளவு நேரமா தேத்தண்ணியா குடிச்சுக்கொண்டிருக்கிறியள்?
வணக்கம் சினேகிதி
இந்த அடிப்படைக் கொள்கையை உங்கள் பதிவிலிருந்து வாசித்துவிட்டு நான் மனதுக்குள் அசைபோட்டேன். எவ்வளவு பெரிய உண்மை, அதை உங்கள் பாணியில் தந்தது இன்னும் சிறப்பாக இருந்தது. உங்களைப் போல இளம் வயதினர் இப்படியான எழுத்தாற்றல் கொண்டிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இது வெறும் புகழ்ச்சி அல்ல.
வாழ்த்துக்கள்.
என்ன கண்ணு ஆளையே காணோம்!
சிநேகிதி!
இதைத்தானே ஆத்திசூடியில் ஆறுவது சினம் என்று சொன்னார்கள். படித்தோம் ஆனால் (கடைப்)பிடிக்கவில்லை. அவ்வளவுதான்.
நன்று
\\இந்த அடிப்படைக் கொள்கையை உங்கள் பதிவிலிருந்து வாசித்துவிட்டு நான் மனதுக்குள் அசைபோட்டேன். எவ்வளவு பெரிய உண்மை, அதை உங்கள் பாணியில் தந்தது இன்னும் சிறப்பாக இருந்தது. உங்களைப் போல இளம் வயதினர் இப்படியான எழுத்தாற்றல் கொண்டிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இது வெறும் புகழ்ச்சி அல்ல.
வாழ்த்துக்கள்.\\
தற்செயலா இந்தப்பக்கத்துக்கு வந்தன்...இந்த வாழ்த்தை நான் இதுக்கு முதல் பார்க்கவே இல்ல :)
Post a Comment