உன்னை எனக்குப் பிடிக்கும் என்னை உனக்குப் பிடிக்கும்
நாங்கள் எல்லாருமே தினம் தினம் எத்தின பேரை பார்க்கிறம் பழகிறம் ஆனால் ஒரு சிலரைத்தான் நல்ல நண்பர்களாகவோ காதலன் காதலியாகவோ அல்லது இன்ன பிற உறவுகளாகவோ ஏற்றுக்கொள்ளுறம். ஏன் நாங்கள் சில பேரை மட்டும் நேசிக்கிறோம்? சில பேரை வெறுக்கிறோம்? எங்கட விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கும் அகக்காரணிகள் புறக்காரணிகள் எவை?
முதலாவது காரணம் பரிச்சயம்.ஒரு பொருளாயிருந்தாலும் நபராயிருந்தாலும் ஏற்கனவே பழக்கம் என்றால் கூடுதலான நாட்டம் காட்டுவம்.யாரையும் அடிக்கடி சந்திச்சா அவையிலுள்ள நேசம் மதிப்பு எல்லாம் அதிகமாகும் என்று உளவியல் ஆராய்ச்சியாளர்களான சொல்லினம்.
பல்கழைக்கழக மாணவர்கள் சிலர் ருசி பற்றிய ஒரு ஆராய்ச்சிக்கு என்று சொல்லி கூப்பிட்டுட்டு வேற ஒரு ஆராய்ச்சி செய்தவையாம {இந்த ஆராய்ச்சியாளர்களே இப்பிடித்தான்.மில்கிறம் செய்த அதிகாரிகளுக்கு எவ்வளவு தூரம் ஒருவர் பணிந்து போவார் என்ற ஆராய்ச்சி பற்றி யாருக்குத் தெரியும்? இன்னொருநாள் அதைப்பற்றி சொல்றன்}.ஆராய்ச்சியின் போது ஒவ்வொரு அறையிலயும் போய் ஒவ்வொரு குடிவகையையும் ருசி பார்க்க வேண்டும்.இந்த ஆராய்ச்சியின போது சில பேர் பத்துக்கு மேற்படட தடவைகள் சந்தித்துக் கொண்டார்களாம் சில பேர் ஒன்றிரண்டு தடவைகள் சந்தித்துக் கொண்டார்களாம. ஆராய்ச்சி முடிவில் நடந்த ஒரு சின்ன கணக்கெடுப்பில் ஆராய்ச்சியின் போது நிறைய தடவைகள் சந்தித்துக் கொண்டவர்களை அதிகமாகப் பிடிக்கும் என்றும் குறைய தடைவ சந்தித்தவர்களை குறைவாகப் பிடிக்கும் என்றும் பங்குபற்றியவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதான் " நண்பனே எனக்குக் காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ" என்று ஜோதிகா பாடினவவோ (பாடல் வரிகள் யாற்றயோ தெரியேல்ல). அதிகமாகப் பிடிக்கும் என்றும் குறைய தடைவ சந்தித்தவர்களை குறைவாகப் பிடிக்கும் என்றும் பங்குபற்றியவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதான் " நண்பனே எனக்குக் காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ" என்று ஜோதிகா பாடினவவோ (பாடல் வரிகள் யாற்றயோ தெரியேல்ல).
200 பெண்களிடம் ஒரு 7 வயதுக்குழந்தையின் படமும் அந்தக் குழந்தை பாடசாலையில் மற்றக் குழந்தைகளுடன் சண்டை பிடிப்பது அடிப்பது பற்றிய விபரங்களும் குடுத்திட்டு அந்தக் குழந்தையைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள் என்று கேட்டினமாம்.. இந்த 200 பேரில் சிலரிடம் பார்த்தாலே கொஞ்சத் தோன்றும் அழகான குழந்தையின் படமும் சிலரிடம் வடிவில்லாத குழந்தையின் படமும் குடுத்திச்சினமாம்.(குழந்தைகள் எல்லாம் வடிவுதானப்பா அடிக்க வராதயுங்கோ).வடிவான குழந்தையைப் பார்த்தவை சொல்லிச்சினமாம் ஓ இந்தப்பிள்ளையைப் பார்த்தால் நல்ல பிள்ளையைத் தெரியுது.இந்த வயசுக்கான குழப்படிதானே அதான் மற்றப் பிள்ளையளை அடிச்சிருக்கும் வளர வளர நல்ல பிள்ளையா வரும் என்று.வடிவில்லாத பிளளைன்ர படத்தை பார்த்தாக்கள் சொல்லிச்சினமாம் ஓ இதப்பார்த்தாலே தெரியுதே இது கூடப்படிக்கிற பிள்ளையளுக்கெல்லாம் அடிக்கிற நுள்ளுற பிள்ளைதான்.அதின்ர கண்ணப் பாருங்கோ இது வளர்ந்தும் ஒரு காவாலியாத்தான் வரும் என்று சொல்லிச்சினமாம். இதாலதான் ஆசிரியர் ரீச்சர்மாரெல்லாம் வடிவான பிள்ளையளில கூட அன்பாயிருக்கிறவையோ?
ஆ 200 பேரும் பெண்கள் தானே.அவைக்கு புற அழகுதான் முக்கியமாக்கும் என்று சொல்ற ஆக்களுக்குத்தான் இது. 60 ஆண் மாணவர்களிடம் மாணவிகளின் கட்டுரை ஒன்றை மதிப்பீடு செய்யக் குடுத்தார்களாம். கட்டுரைத்தாளில நல்ல வடிவான மாணவிகளின் படமும் கொஞ்சம் வடிவான மாணவிகளின் படமும் இணைத்துக் குடுத்தவை ஆனால் எல்லாருக்கும் குடுத்த கட்டுரை ஒரே கட்டுரை.நல்ல வடிவான ஆக்கள் எழுதின கட்டுரைக்கு நிறைய புள்ளிகள் வாரி வளங்கினார்களாம்.இதையெல்லாம் தெரிஞ்சதாலதான் பல்கழைக்கழகங்களில் TA ஆக வாற ஆக்களுக்கு பயிற்சி வழங்கும்போது இந்த மாதிரியான தேர்வு எல்லாம் வைக்கிறது.கட்டுரைகள் மற்ற தேர்வுத்தாள்கள் திருத்தக் குடுக்கும்போதெல்லாம் கவர் பேஜ் ஐ எடுத்து வச்சிட்டுத்தான் திருத்தோணும் என்று சொல்லிக் குடுக்கிறவை.எத்தினபேர் அத எல்லாம் கடைப்பிடிக்குதுகளோ யாருக்குத் தெரியும். இத விட மோசமான கண்டுபிடிப்பு என்னென்றால் நீதிமன்றத்தில தீர்ப்பு வழங்கும் போதும் இந்த புற அழகு ஒரு காரணியாயிருக்கென்று உளவியளல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லினம்.வடிவான ஆக்களுக்கு கிடைக்கிற தண்டனை வடிவில்லாத ஆக்களோட ஒப்பிடும்போது குறைவாயிருக்காம்.
ஓராளை பிடிச்சுப்போக இன்னொரு காரணம் பழக்கவழக்கங்களிலும் குணாதிசயங்களிலும் உள்ள ஒற்றுமை.எங்களை மாதிரி கதைக்கிற யோசிக்கிற ஆக்களைப் பாரத்தா அவைய எங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? ஆதி படத்தில மழையில ஐஸ்கிறீம் குடிக்கிறதால விஜய திரிசாவுக்குப் பிடிக்கும் அப்பிடித்தான் இதுவும் ஹா ஹா.
மற்ற காரணம் நாங்கள் நேசிக்கிற நபர் எங்களை நேசிக்கிறாரா இல்லையா என்றது.சில பேரை முதற்சந்திப்பிலயே பிடிக்கும்.சில பேரை வாழ்நாள் முழக்கப் பிடிக்காது.சில பேரை ஆரம்பத்தில பிடிக்காட்டிலும் பழகப் பழக பிடிக்கும்.ஒரு ஆராய்ச்சியின் போது ஒராளைப் பற்றி இன்னொராள் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள வச்சார்களாம்.உதாரணமா என்னப் பற்றி நீங்கள் ஒராளுக்கு சொல்றதை நான் உங்களுக்குத் தெரியாம கேட்டுக்கொண்டிருக்கிறன் என்று வைப்பமே:
1.நீங்கள் என்னப் பற்றி நல்லதா எதுவுமே சொல்லேல்ல.
2.என்னப் பற்றி எல்லாமே நல்லதாத்தான் சொன்னீங்கள்.
3.நல்லதாச் சொல்லத் தொடங்கி கடைசியா பிளேற்ற மாத்தீட்டிங்கள்.
4.கெட்ட குணங்களைச் சொல்லி ஆனால் சினேகிதி நல்லவா அவாட்ட நிறைய நல்ல குணங்கள் இருக்கு என்று என்ர நல்ல குணங்களைச் சொல்லி முடிக்கிறீங்கள்.
என்னப்பற்றி நல்லதா சொல்லி கடைசில கவுத்த ஆளைத்தான் நான் அதிகமா வெறுப்பன்.அதே நேரம் குறையைச் சொல்லத் தொடங்கி நிறைகளைச் சொல்லி முடிச்ச ஆளைத்தான் அதிகமாக நேசிப்பேன்.மற்ற இரண்டு ஆக்களும் இந்த இரண்டு பேருக்கும் இடையில வருவினம்.
கடைசிக் காரணி என்னென்றால் ஒராளைப் பற்றி எங்களுக்கு முதல்ல என்ன தெரிய வருதோ அதை வச்சுத்தான் எங்களுக்கு அந்த நபரை எவ்வளவு பிடிக்கும் பிடிக்காது என்று தீர்மானிக்கிறமாம்.அதான் நேர்முகத் தேர்வுப் போகும்போதெல்லாம் அறிவுரை சொல்வார்களே.ஒரு ஆராய்ச்சியின் போது ஒராளைப் பற்றிய விபரம் இரண்டு பந்தியில எழுதி கொஞ்ச ஆக்களிட்ட குடுத்தினமாம்.அரைவாசிப் பேரிட்ட குடுத்த விபரத்தில் முதலாவது பந்தியில் ஒருவரின் நல்லியல்புகளிருந்தன.மற்றாக்களிட்ட குடுத்த விபரத்;தில முதல் பந்தியில கெட்ட இயல்புகளையும் இரண்டாவது பந்தியில நல்லியல்புகளையும் சொல்லியிருந்தார்கள்.முதல்ல நல்ல குணங்களை வாசிச்சவையில 78% ஆக்கள் ல அந்த X ஐ நல்லவன் என்று சொல்லிச்சினமாம்.கெட்ட குணங்களை முதல்ல வாசிச்சவையில 18% ஆக்கள் அந்த X ஐ நல்லவன் என்று சொல்லிச்சினமாம்.
-சினேகிதி-
11 comments:
ம்.. நீங்கள் சொல்லும் முதல் காரணம்தான் மிக முக்கியம். நம் முகம் யாருக்கு பிடிக்காவிட்டாலும் நமக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா சின்ன வயசுலேர்ந்து அடிக்கடி பாத்துகிட்டே இருக்கோம் இல்லையா!
ஆகமொத்தத்தில் ஒண்டு புரிஞ்சு போச்......
சினேகிதிய சினேகம் பிடிக்கோணுமெண்டால், அவாவைப்பற்றி படு மோசமான விமர்சனங்களை சொல்லத்தொடங்கோணும்..
வலைப்பதிவு நண்பர்களே , சினேகிதியைப்போல மோசமான ஒரு ஆளை இதுக்கு முதல் நான் அறிஞ்சதே இல்லை.
;-P
வணக்கம் அருள்குமார்..நம்ம முகம் நமக்குப் பிடிக்கும் தான்.ஆனால் குணம் எப்பிடி?
என்ன மயூரன் யாரு ஆக மொத்தமா இருக்கிறது?? இவ்வளவு சொல்லியிருக்கிறன் ஒன்றுதான் விளங்கினது போல.
பொதுவா நான் வலைப்பதிவுகளுக்கு போய் சீரியசா கொமென்ட் சொல்லுறதா நினச்சுக்கொண்டு பிரச்சனைகளுக்க மாட்டுப்படுறனான். ஆளாளுக்கு நான் சொன்ன ஏதாவது வார்த்தைய தூக்கிப்பிடிச்சுக்கொண்டு சண்டைக்கு வாறாங்க
அதால கொஞ்சம் மாறுதலுக்கு "கூலா" கொமென்ட் சொல்லுவம் எண்டு பாத்தன். இங்கயும் வார்த்தைக்கு வார்த்தை கிளருராங்கப்பா.
குப்பையத்தானே கிளறுறது என்று சொல்றது?வார்த்தையையுமா? நீங்கள் சொன்னாச் சரிதான் :-)
ம்.. நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.
ivaluu naal kalichu solreer eatukollakodiyatha irukendu :wink:
என்ன செய்ய சினேகிதி நான் இப்போதுதான் இணையத்தில் மீண்டும் உலாவித்திரிந்து பதிவுகளை படித்துகொண்டிருக்கிறேன். உங்களுடையய வலைப்பூவில் கூட அதிகமானவற்றை விட்டுவிட்டேன்.
இது நல்ல பதிவு சிநேகிதி.. அப்போ தவற விட்டுவிட்டேன்... எடுத்துச் சொன்னமைக்கு முதலில் நன்றிகள்
இந்த புற அழகு பார்த்து முடிவெடுக்கும் இயல்பு நமது இள வயது சினிமாக்களாலும், கார்ட்டூன் வில்லன்களாலும், தேவதை கதைகளாலும் கட்டியமைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.. இது பற்றியும் தொட்டுச் சென்றிருக்கலாம்..
வாங்க பொன்ஸ் :-) அப்ப ஒராளவது நான் குடுத்த இணைப்பை வாசிச்சிருக்கிறா :-)
நீங்கள் சொன்னவிடயங்களையும் இணைத்திருக்கலாம் தான். http://snegethyj.blogspot.com/2007/02/blog-post_01.html
இந்தப்பதிவில் கார்ட்டுன் கதைகள் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.
Post a Comment