Custom Search

Monday, July 25, 2005

அப்படியே ஆகட்டும்

-சினேகிதி-

ஹலோ தர்மினியே?

ஓம் தாத்தா சொல்லுங்கோ.

அம்மா அப்பா ஒருத்தரும் இல்லையே??

தாத்தா அவையள் பின்னால தோட்டத்துக்க நிக்கினம் போன் கொண்டு போய் குடுக்கிறதே??

இல்லை அவையைக் குழப்ப வேண்டாம் நான் எங்களுக்கு ஒரு றூம் ஒன்று வாடகைக்கு தேவையெண்டு சொல்லி வைக்கத்தான் எடுத்தனான்.

ஏன் தாத்தா உங்களுக்கு ஒரு றூம்?? உங்களுக்கும் பாட்டிக்கும் ஒரு றூம் எண்டா அப்ப விமல் மாமா எங்க இருக்கப்போறார்?

அவனுக்கு நான் பார்த்து வைச்ச பொம்பிளையள் ஒருத்தரையும் பிடிக்கேலயாம் அதான் கூட வேலை செய்யுற ஒரு குஜராத்தி பிள்ளையை விரும்பிறானாம் அவளைத்தான் கட்டப் போறானாம்.எல்லாத்தையும் இப்பதானே சொல்லுறான்.வீட்டுக்கு நோட்டிசும் குடுத்திட்டுத்தான் எங்களிட்டயே சொல்றான்.வாற மாசம் கல்யாணமாம் அதுக்குப் பிறகு மிசிசாகாவில போய் இருக்கப் போயினமாம்.தர்மினி பாட்டிய நடக்கப் போப்போறாவாம் நான் போனை வைக்கிறன் நீங்க அம்மா அப்பாட்ட சொல்லுங்கோ.

சரி தாத்தா நீங்க இந்த முறை எங்கட தோட்டம் பார்க்க வரேல்ல…எப்ப வாறீங்கள்?

வாறன் ஒரு நாளைக்கு…இந்த முறை தோட்டத்தில என்ன வைச்சிருக்கிறியள்?

பூசணி கத்தரி வெங்காயம் மிளகண்டு உருளைக்கிழங்கு கீரை தக்காளி.

பறவாயில்லையே கனடாவிலயும் இவ்வளவு மரக்கறி நட்டுப் பராமரிக்கிறா அம்மா..சொல்லி வையுங்கோ தாத்தா இந்தக்கிழமை வருவன் எண்டு.சரியடா நான் பிறகு கதைக்கிறன்.

சரி தாத்தா.bye.

எங்கட பக்கத்து வீட்டில முந்தி இருந்த தாத்தா நேற்று போன் பண்ணினார்.62 வயசிலயும் என்ன சுறுசுறுப்பாய் வேலை செய்வார்.பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு குறைந்த சம்பளத்துக்கு உதவி ஆசிரியரா இருக்கிறார்.அவங்க குடுக்கிற சம்பளம் பாட்டின்ர மருந்துக்குதான் காணும்.தாத்தாவும் பாட்டியும் வேற மதத்தவர்கள் காதலிச்சு கல்யாணம் பண்ணி எப்பவுமே சந்தோசமா இருக்கினம்.பாட்டிக்கு இப்பவும் தலைக்கு குழிச்சா தலை துவட்டி விடுவார்.பொம்பிளைப் பிள்ளையள் இல்லை.எங்களில சரியான பாசம்.விமல் மாமா ஒரு போக்கு.எல்லாரோடயும் பெரிசாக் கதைக்க மாட்டார்.தாத்தா சொல்றதுக்கு எதிராத்தான் எல்லா வேலையும் செய்வார்.பாட்டி கதை கேட்டா பட்டும் படாமலும் ஏதாவது முணுமுணுத்துக் கொண்டு போவார்.இப்ப அவருக்கு கல்யாணமாம் அதுக்கு ஏன் தாத்தாவை வீடு மாறவேணும்.பாவம் தாத்தா இந்த வசயிலயும் பஸ்சில வேலைக்குப் போய் வரோணும்.

ஊரில எங்கட தாத்தா எங்கட வீட்டதான் இருந்தவர்.எங்கட வளவுக்குள்ள ஏழு வீடுகள். சித்தப்பாவேன்ர அன்ரியவேன்ர மாமாவேன்ர இப்பிடி எல்லா வீடும் பக்கத்தில பக்கத்தில.தாத்தா எல்லாற்ற வீட்டுக்கு நடந்து திரிவார்.அவர் ஆயுள் வேத வைத்தியர்.அப்ப ஆக்கள் நாடி பிடிச்சு பார்க்க குழந்தைப் பிள்ளைகளுக்கு தொய்வு பார்க்கவெண்டு வருவினம்.தாத்தா என்னவோ எல்லாம் வாயுக்குள்ள சொல்லிக்கொண்டு கையில ஒற்றைக்கை முத்திரை இரட்டைக்கை முத்திரை எல்லாம் பிடிப்பார்.சின்னப் பிள்ளையள் நாங்க பாரத்துக்கொண்டு நிண்டிட்டு தூரத்தில போய் நிண்டு கொண்டு அப்பிடிச் செய்து பார்க்கிறது. தாத்தா கண்டா காணும் ஓடிடுவம் ஏனெண்டால் சும்மா அப்பிடிக் கையால செய்யக் கூடாதெண்டு பேச்சு விழும்.

தாத்தாக்கு ஆர் சுங்கான் கழுவி புகையிலை இடிச்சுப் போட்டுக் குடுக்கிறமோ அந்தப் பேரப்பிள்ளைக்கு அண்டைக்குத் தாத்தா சாப்பாடு தீத்துவார்.என்ர முறை வந்தா நான் தாத்தாட்ட வாங்கிச் சாப்பிட்டிட்டு வீட்டுக்குள்ள போய் இறைச்சிக் கறியோடு தயிர் போட்டுச் சாப்பிடுவன்.தாத்தாக்கு அது பிடிக்கவே பிடிக்காது. கண்டால் அம்மாக்கும் சேர்த்துப் பேச்சு விழும்…பசுவுக்கு முலை வெடிச்சுப்போடும் எண்டெல்லோ சொன்னான் எண்டு தொடங்கிடுவார்…பிறகெண்ன நான் வீட்டைச் சுத்தி ஓட வேண்டியதுதான்.

பசு எண்டவுடனேதான் ஞாபகம் வருது….பசு கன்று போட்டவுடனே அம்மம்மா கடும்பு காய்ச்சித் தருவாவே…என்ன உருசையது..சட்டி வழிக்கிறது நானாத்தானிருக்கும்.

தாத்தாக்கு அம்மாவோட சேர்த்துப் பத்துப் பிள்ளையள்.ஒருத்தருக்கொருத்தர் சண்டையில்லாம அவையெல்லாரும் ஒண்டா ஒரே வளவுக்க இருந்ததால தாத்தா நல்ல சந்தோசமா இருந்தவர்.வீட்ட வாற ஆரும் உங்களுக்கென்னையா பிள்ளையள் சண்டை பிடிக்காம ஒற்றுமையா இருக்குதுகள் எனக்கும் வந்து பிறந்துதகள் பிசாசுகள் எண்டு சொன்னா தாத்தா சொல்லுவார் அப்பிடிச் சொல்லாதயுங்கோ…நாங்க கதைக்கிறதைக் கேட்டுக் கொண்டிருக்கிற சாத்தான் அப்பிடியே ஆகட்டும் எண்டு சொல்லிப்போடும் எண்டு.

போன வெள்ளிக்கிழமை நான் அம்மா அப்பா தங்கச்சி அண்ணா எல்லாரும் ஓக்விலுக்கு அக்கா வீட்ட போனாங்கள்.போற வழியில அம்மா சொன்னா நடுகலும் அப்பாவைக் கேக்காம நாங்களே அக்கா வீட்ட போகலாம் வரேக்க Go train ல நாங்கள் வருவம் எண்டு. அப்பாவும் அண்ணாவும் கார்ல வீட்டை போகட்டும் எண்டு.403 ல அக்கா வீட்ட போற exit எடுக்கு ஒரு இரண்டு நிமிசத்துக்கு முதல் படார் எண்டொரு சத்தம்…அவ்வளவும் தான் தெரியும் சும்மா கார் நாலு றவுண்ட் சுத்திச் சுழண்டடிச்சுக் கொண்டு வந்து நடு track ல நிண்டிச்சுது.நாலாவது track ல போய்க்கொண்டிருந்த கார் என்ன மாதரி 2வது track க்கு வந்திச்சுதோ கடவுளுக்குத்தான் தெரியும்.அம்மா இருந்த பக்கக் கதவு தான் முதல் அடிபட்டது.அவாதான் முதல் Volvo truck ஐ பார்த்ததும். பயந்திட்டா சரியா; அழத்தொடங்கிட்டா.தங்கச்சி மட்டும்தான் belt போட்டிருந்தவா நானும் அம்மாவும் ஊஞ்சல் ஆடினது தான்.கார் ஒரு பக்கம் சப்பை.நான் நினைக்கிறன் truck ல இருந்தது பால் எண்டு எண்ணெய் மட்டும் இருந்திருக்க வேணும் அம்மளவும் தான் குடும்பத்தோட கைலாசம் தான்.Paramedics வந்து அம்மாக்கு sugar blood presure எல்லாம் பார்த்தாப்பிறகு அத்தான் வந்து எங்களைக் கூட்டிக்கொண்டு போனவர்.வீட்ட வரேக்க Go train தான்.தாத்தா சொன்ன மாதிரி சாத்தான் நாங்க கதைச்சதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கும் போல.ஆனால் ஒண்டு truck ஓட மோதியும் ஒருத்தருக்கும் காயம் இல்லை அதால எங்கள் எல்லாருக்கும் ஆயுள் கெட்டியாம். (*:*)

பக்கத்து வீட்டு தாத்தா ஒரு றூம் வேணும் எண்டு சொல்லச் சொன்னவர் நான் எங்கட தாத்தாட்ட போய் சாத்தானிட்ட போய் தாத்தா போன் பண்ணினதையே சொல்ல மறந்திட்டன்…அம்மா………. தாத்தா…

14 comments:

கிஸோக்கண்ணன் said...

/பாட்டிக்கு இப்பவும் தலைக்கு குழிச்சா தலை துவட்டி விடுவார்\
உதென்ன பிரமாதாம்?! குளிக்காமலே தலை துவட்டிவிடுவார் என் தாத்தா.

/பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு\
நல்ல பகிடி. பரவாயில்லை...உங்களுக்கு நகைச்சுவையும் நன்றாகவே வருகின்றது.

அந்தத் தாத்தாவுக்கு றூம் எடுத்துக் கொடுத்தியளே பிறகு?

சினேகிதி said...

உங்கட தாத்தா வாழ்க நீவீர் வாழ்க.

றூம் இன்னும் கிடைக்கேல்ல…உங்கட வீட்டு basement ஐ குடுக்கிறீங்களா?

கிஸோக்கண்ணன் said...

மன்னிக்க வேணும்...நான் வசிக்கிறதே நிலவறையில். தேவையானால் இதயத்தில் மட்டும் அவையளுக்கு இடம் கொடுக்குறன் இப்ப.

சினேகிதி said...

அடடா உங்களுக்கு நல்ல மனசு.சாத்தான் உங்களுக்கு அருள்புரிவாராக.

சினேகிதி said...

Siruvan ippidi kastapattu comment type panirukinga...amma parthutu poi padiyada endu sollellaya?

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

Good 2 know that you are alright.

take care

சினேகிதி said...

Shreya neenga kanavu kandu enaku athu palichuduchu pola :)

கயல்விழி said...

அழகாய் எழுதியிருக்கீங்க ஒரு சின்னப்பிள்ளையின் வாயால கேக்கிற மாதிரி உணர்வு வந்தது வாசிக்கும் போது. நீங்களும் சின்னப்பிள்ளை தானே.

சினேகிதி said...

நன்றி கயல்விழி அக்கா (*|*) (நான் சின்னப்பிள்ளைதானே) அக்கா என்று சொன்னா அடிக்கமாட்டீங்கதானே?

குழலி / Kuzhali said...

இரண்டு முறை படித்துவிட்டேன்...

சினேகிதி said...

என்ன அவதாரம் இப்பிடிக் கேட்டிட்டீங்க….
உங்களை மாதிரி ஆக்கள் வந்து சொல்லடி கொடுப்Pங்க என்று கருடபுராணத்தில சொல்லியிருக்கு தெரியுமா? போங்க போங்க போய் உங்கட பாட்டியை வாசிச்சுக் காட்ட சொல்லுங்க.இல்லாட்டி அந்நியனின்ர பாட்டி ஆனந்தம் சூட்டிங் ஸ்பொட்ல இருப்பாங்க போய்க் கேளுங்க.

சினேகிதி said...

குழலி இரண்டு முறை படிச்சாச்சா??? அவதாரம் நான் எழுதியே கொல்லுறன் என்று சொல்லுது…எனக்கு அழுகை அழுகையா வருது.

குழலி / Kuzhali said...

//குழலி இரண்டு முறை படிச்சாச்சா??? //

ஆமாம் படிச்சும் புரியலை ஹி ஹி

ஒரு விளம்பரம்

ஆர்வ கோளாறு 30 என ஒரு பதிவிட்டேன் தமிழ்மணம் திரட்டமாட்டேன் என்கின்றது, ஒரே ஒரு முறை தமிழ்மணத்தில் காண்பித்து விட்டு காணமல் போய்விட்டது உங்கள் மேலான கருத்துகளை அங்கே இடுங்கள்

சினேகிதி said...

ஐயோ ஐயோ ஐயோ…கதை சொல்ற மாதிரி எழுதியிருக்கிறன்…புரியலை என்றால் இனி நான் என்னத்த செய்ய.நான் நினைக்கிறன் உங்கட மூளை ஓய்வெடுக்குது போல.உங்கட ஆர்வக்கோளாறு 30 படிச்சேன்.