Custom Search

Wednesday, July 13, 2005

சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு

Hi Sumi
Hi Miss
How are you today?

Did you do your homework?

Sumi are you okay?

my mom said that she wont pick me up today.
Y did she say that?
Because I forgot to do my piano homework so my piano teacher compliant about me.
Oh why didn’t you do your home work then?
Because I forgot it.
And my mom said that I have to sleep in the garage today.
Hmm ok sumi don’t cry I’ll let you play flipwords today okay.
Can I go on the internet….can you open www.whatsherface.com for me?

என்னட்ட படிக்க வாறவா சுமி.அந்தப்பிள்ளை பியானோ, Swimming, Computer Math , Dance எண்டு ஆயிரத்தெட்டு வகுப்புக்கு போறது.நான் நினைக்கிறன் அதுக்கு விளையாடவே நேரம் கிடைக்காதெண்டு.சின்ன பிள்ளையளால எவ்வளவு நேரம்தான் இப்பிடி தொடர்ந்து படிக்க முடியும்.சின்ன வயசிலேயே வெறுப்புத்தான் வளரும்.சின்ன வயசில படிச்சா நல்லம்தான் அதுக்காக அதுகளைப்போட்டு பிச்சு எடுக்கக்கூடாது.பத்மாக்கா சொன்னமாதிரி இப்பிடி நிறைய வகுப்புக்களுக்குப் போற பிள்ளையளிடம் நான் அடிக்கடி கோபத்தைப் பார்த்திருக்கிறன்.

என்னையெல்லாம் எங்கட வீட்டில ஒருநாளும் புத்தகத்தை எடுத்துப்படி என்று சொன்னது கிடையாது அதுக்காக நான் படிக்காம இருந்ததில்லை.அவர்களாக ஊக்கம் எடுத்து ஆர்வத்தோட எதையும் செய்தால்தான் அவர்களின் திறமை வெளிப்படும் அதைவிட்டிட்டு அகப்பக்காம்பு வச்சு இடிச்சு சாப்பாடு தீத்தினா சத்திதான் வரும் புத்தி வளராது.

என்னமோ சொல்லணும் என்று நினைச்சன் சொல்லிட்டன்.

5 comments:

U.P.Tharsan said...

சுத்தம் :-(( ஒண்டுமே விளங்கவில்லை. நான் ஆங்கிலத்தை சொன்னன்.

கிஸோக்கண்ணன் said...

நிஜப்பேருகளை நீங்கள் பாவித்தீர்களோ இல்லையோ என்று சொல்ல வேண்டாம். இனி(யும்) பாவிக்காதேங்கோ.

சினேகிதி said...

தர்சன் என்ன நக்கலா?:)

கிஸோண்ணா என்ன நிஜப்பெயர் பொய்ப்பெயர்?? கொஞ்சம் புளிபோட்டு விளக்கி விடுங்கோ.

கிஸோக்கண்ணன் said...
This comment has been removed by a blog administrator.
சினேகிதி said...

ohh okay okay...gotcha Kisonna