Custom Search

Friday, June 24, 2005

தரிசனம் கிடைக்காதா?

-சினேகிதி-

ஓவ்வொரு வருசமும் முத்துமரி அம்மன் கோவில் திருவிழா இருபத்தைந்து நாட்களும் புத்தக விற்பனை நடப்பது வழக்கம்.அவ்வாறே 2000ம் ஆண்டும் புத்தக விற்பனைப் பிரிவுக்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் அழைக்கப்பட்டு ஒவ்வொரு செயற்திட்டங்கள் வழங்கப்பட்டது.காலை ஆறு மணியிலிருந்து மத்தியானம் இரண்டு மணிவரைக்குமான காசுப்பொறுப்பாளர்கள் சயிந்தினியக்காவும் ராஜேஷண்ணாவும் மற்ற மற்ற பொறுப்புகளுக்குமாக மொத்தமாக எட்டு பேர் இருப்பார்கள்.அதில நான் விற்க வேண்டியது மு.வரதனாரின் புத்தகங்கள் (“தம்பிக்கு” “தங்கைக்கு” அப்பிடிதான் அவருடைய புத்தகங்களின் தலைப்புக்கள் இருந்நதாக ஞாபகம் ).இருபத்தைந்து நாட்கள் சந்திக்கிற இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் இடையே நிறைய காதல் பூ பூக்கிறதும் நடக்கிறது.

நான் படிச்ச பள்ளிக்கூடத்தில திடீர் இராணுவ நடவடிக்கை மாதிரி எங்களை எல்லாம் பிறேயருக்கு அனுப்பிட்டு சில ரீச்சர்ஸ்மாரும் மாணவர் தலைவிகளும் சேர்ந்து எங்கட உடமைகள் அத்தனையும் ஆராய்வார்கள்..அதில யாராவது வைத்திருந்த நடிகர்களின்ர படம் லவ் லெற்றர்ஸ் ஏதாவது அகப்பட்டா அதோ கதிதான….அம்மா அப்பா வந்துதான் பிரின்ஸிட்ட போய் அதெல்லாம் வாங்கவேணும் …..அதுமட்டுமா இத்தின cm ல்தான் சட்டை collar இருக்கவேணும் அதில button இருக்கவேணும் சங்கிலி போடக்கூடாது மோதிரம் போடக்கூடாது ஒருநாள் கூட தலை பின்னி றிபன் கட்டாம வந்தி;ட்டா அவளவுதான் வாழைநாரால பின்னிக் கட்டி விடவெண்டே இருக்குது ஒரு குறூப்.இப்பிடியெல்லாம் செய்யிற அக்காமார் தப்பித்தவறி எங்கட அண்ணாமாருக்கு லைன் போடுறதா தெரிஞ்சது அம்புட்டுத்தான் அவங்க காதலுக்குச் சமாதிதான்.நிறைய பாவம் பண்ணிட்டன் போல இருக்கு. .என்னத்தையோ சொல்ல வந்து எங்கயோ போயிட்டன்.

சயிந்தினயக்காவும் எங்களுக்குப் பிடிக்காத ஒரு மாணவ தலைவிதான்.ராஜேஷண்ணாட்ட நாங்கள் ரியுசனுக்குப் போறனாங்கள்.அவருக்கு சயிந்தியக்காவில விருப்பம் அவா நல்ல வடிவு கெட்டிக்காரியும் கூட.அவேன்ர A/L ரியூசன் முடிய இன்னும் கொஞ்சநாள் தான் இருந்தது அதான் அவர் திருவிழாவிலேயே தன்ர காதலைச் சொல்லப் போறன் எண்டு சொல்லிட்டு வைரமுத்ததுவின் கவிதைப் புத்தகம் ஒன்றையும் வாங்கி வைச்சிருந்தவர்.எங்களிட்ட சொன்னவர் நான் சயிந்திட்டச் சொல்லப் போறன் என்று நாங்களும் குட் லக் சொல்லிட்டுச் சாப்பிட போட்டம்.சாப்பிட்டு வந்தால் சயிந்தியக்கா இல்லை ராஜேஷண்ணா தனிய கோபத்தில இருந்தார்.என்னாச்சு எண்டு கேட்டதுதான் தாமதம் சும்மா ஆமிக்காரன் கெலியிலிருந்து நெருப்புப்பொறி பொரிஞ்ச மாதரி வார்த்தைகள் வந்து விழுந்தன … “ பெடியங்கள் அப்பவே சொன்னவங்கள் டேய் சயிந்தியைப் பற்றி உனக்குத் தெரியாது… வேண்டாம் என்று….நான்தான் நம்பாமால் ….இருந்தாலும் இந்தத்திமிர் கூடாது. பிடிக்கல என்றால் சொல்ல வேண்டியது தானே அத விட்டிட்டு நான் குடுத்த புத்தகம் சொக்லட் இரண்டையும் இங்க இந்தக் கால்வாயில போட்டிட்டுப் போட்டாள்.அழகு அறிவோட சேர்த்து மற்றவையை எப்பிடி நோகடிக்கலாம் என்றும் தெரிஞ்சு வைச்சிருக்கிறா.”

நாங்கள் எட்டி கால்வாயைப் பார்த்தா சாமி தீர்த்தம் ஆடிட்டுப் போன மஞ்சள் குங்குமம நீரெல்லாம் வடிஞ்சு வந்து கவிதைப் புத்தகம் நனைஞ்சு சிதைஞ்சு கொண்டிருந்தது ராஜேஷண்ணான்ர மனசைப்போல.

13 comments:

கிஸோக்கண்ணன் said...

மனசு குளிர்ந்தது நனைஞ்சது என்று இன்பமான நிகழ்வைத்தான் சொல்வார்கள்.

அந்தப் புத்தகம் நனைந்து சிதைஞ்சு கொண்டிருந்தது ராஜேஸ் அண்ணாவின்ரை மனசைப் போல என்று சொல்லலாமே.

நன்றாகவே எழுதியிருக்கிறீங்கள். வாழ்த்துக்கள்.

இளங்கோ-டிசே said...

சினேகிதி உங்களுக்கு நல்லதொரு எழுத்து நடை உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

கயல்விழி said...

சிநேகிதி இந்த வாழை நார் அனுபவம் எங்கட பள்ளியிலும் நடக்கிறது. அழகாய் சிலைற் போட்டிட்டு ஸ்ரைல் பண்ணி வருவினம். அக்காமார் பிடிச்சு தண்ணி தடவிப்போட்டு பின்னி விடுறவை.

அழகாய் சொல்லியிருக்கிறியள். பாவம் ராஜேஸின் காதல். காதலிக்காமல் விடுவது வேறு விடயம். அதை மறுப்பது இப்படியா.? றொம்ப மோசம் பெண்கள்.

இளங்கோ-டிசே said...

//இப்படியா...? றொம்ப மோசம் பெண்கள்//
கயல்விழி, சில 'பெண்கள்' இந்த ஆண்களே மோசம் என்று எல்லோரையும் பொத்தாம் பொதுவாகச் சொல்வதுபோல, எல்லாப் பெண்களும் மோசம் என்று அர்த்தம் வருவதுமாதிரி எழுதியிருக்கின்றீர்களே :-(. நீங்கள் அப்படியான அர்த்தத்தில் கூறியிருக்கமாட்டீர்கள் என்று ஒரளவு புரிந்தாலும் ..... :-).

சினேகிதி said...

கிஸோண்ணா நீங்க சொன்னது சரிதான் மாற்றி விட்டேன்.நன்றி டி.சே. கயல்விழி உங்களுக்குமா?? இன்னும் நிறைய அநியாயம் பண்ணினாங்க பிறகு எழுதிறேன்.

கறுப்பி said...

மோதல்ல தானே காதல் உண்டாகும் எண்டீனம் . அப்பிடி ஒண்டும் நடக்கேலையா?

டீசே உங்கட படம் வடிவா இருக்கு. (*_*)

கறுப்பி said...

ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஐரோப்பாவில் வெளிவந்த "பெண்கள் சந்திப்பு மலர்" பற்றிய விமர்சனக் கூட்டம் அறை இலக்கம் 1இல் இடம்பெற உள்ளது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் படைப்புக்களும் பெண்களினது. தங்களைப் போல் எழுத ஆர்வமுள்ளவர்களைத் தூண்டுவதற்காக வெளிவந்து கொண்டிருக்கின்றது. தங்களுக்கு விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளுங்களேன்.

சினேகிதி said...

கறுப்பி இந்தக் கூட்டம் எங்கு நடைபெறுகிறது?

கறுப்பி said...

Scarborough civic center

see here
http://karupu.blogspot.com/2005/06/blog-post_14.html

துடிப்புகள் said...

இதே சம்பவத்தை சிறுகதையா கொஞ்சம் கற்பனை கலந்து எழுதலாமே!! முயற்சி பண்ணுங்க!

சினேகிதி said...
This comment has been removed by a blog administrator.
சினேகிதி said...

முகில் கற்பனை குதிரை தான் என்னைப் பார்த்தா ஓடிப்போகுது இருந்தாலும் எழுத முயற்சி செய்கிறேன்.

சினேகிதி said...

அச்சச்சோ சக்தி பொறாமை வந்திடுச்சா??? நேக்கு ரொம்ப சந்தோசம். என் எழுத்து மேலே யாருக்கும் பொறாமை வருதுன்னா….