Custom Search

Monday, June 20, 2005

நானும் என் நண்பர்களும்

-சினேகிதி-

என்னவென்று சொல்வது எங்க ஊரழகை? ஐயோ எனக்கு வர்ணிக்கத் தெரியாதே…நான் பிறந்தது கொஞ்சம் வளர்ந்தது அல்வாய் என்ற ஊரில்.மிச்சம் வளர்ந்தது மாத்தளையில்.அல்வாயில் பிறந்ததால அல்வா குடுப்பனோ எண்டு நினைக்க வேண்டாம் ஆனால் என்ன எனக்கு கொஞ்சம் வாய் நீளம் எண்டு நினைக்கிறன். சீ சீ வாயெல்லாம் அளவான நீளம் அகலம் தான் கதைதான கூட.

அல்வாயில எனக்கு இருக்கிற நண்பர்கள் கூட்டத்தில முக்கியமானவை சுஜித்தா சுபாசினி பிரபா இவையெல்லாம் பக்கத்;து வீட்டாக்கள்.ரியூசனில கோபிராம் புழுக்கொடியல் துசி அபிராமி ஜெயந்தி தர்சி….ரியூசனால வரேக்க ஒரு முறைப்பாட்டோடதான் நான் வீட்ட போறது.அம்மம்மா இண்டைக்கு என்னை துசி நுள்ளிப்போட்டா ம் ம் அப்பத்தானே அம்மம்மா போய் அவேன்ர அம்மம்மாட்ட யாருடி அவ என் பேத்தியை நுள்ளினவா கொண்டாடி அந்தக்கையை வெட்டி அடுப்புக்க வைக்கிறன்…இப்ப நினைச்சா சிரிப்பு வருது ஆனால் அப்ப அதெல்லாம் தினமும் நடக்கிற கூத்து.

ஐந்தாம் வகுப்பு முடிய வேற பள்ளிக்கூடம் போகவேணும் அப்ப புது நண்பர்கள் பது ஆசிரியர்கள் ‘.செல்லையா கம்பஸ’ என்றது நான் படிச்ச பள்ளிக்கூடத்துக்குச் செல்லப்பெயர்.எல்லா ரீச்சருக்கும் என்னில விருப்பம் வாழ்க்கைத்திறன் படிப்பிக்கிற செல்வி ரீச்சரைத் தவிர. 'இவாக்குப் பஞ்சு மாஸ்ரர்ட மருமோள் எண்ட தலைக்கனம் அதான் கணிதத்துக்கு மட்டும் தொண்ணூறு எடுப்பா என்ர பாட நேரம் தான் பேச்சுப் போட்டி வினாடி வினா அந்தப் பிறக்ரிஸ் இந்தப பிறக்ரிஸ் எல்லாம் வரும்'.அவாக்கு என்னக் கண்டாலே பிடிக்காது.நான் கஸ்தூரி சோபர்ணா மைத்திரேயி லிலாணி அனிதா துசி எல்லாரும் கூடி கூடி கதைக்கிறது. அவான்ர வீட்டுக்காரர் அவான்ர ஆக்கினை தாங்காம விட்டிட்டு போட்டாராம் அதான் அவாக்கு guilty நாங்கள் தன்னைப் பற்றித்தான் கதைக்கிறம் எண்டு.இப்பிடியே அவாவோட மல்லிக்கட்டினபடியே படிக்கும்போது எங்கட குடும்பம் மாத்தளைக்குப் போகவேண்டியதாயிற்று.

அங்க போய் எனக்கு ஒரு நண்பர் பட்டாளமே கிடைத்தார்கள்.போன புதுசில நான் கதைக்கிறது அவைக்கு விளங்காது.அவை சொல்லுவினம் பணிய(கீழே) அப்புறம் (அதுக்குப்பிறகு) கசால் (சண்டை) உக்காருங்க (இருங்க) அப்பிடியே உள்ளம் கேட்குமே லைலா மாதிரி ஏதாவது எக்குத்தப்பா பண்ணிறதால எனக்கு வசா லுசா யசி காத்தி லோஜி வித்யா வாசு கோதா மலர் அஸ்மின் இப்படி நிறைய நண்பர்கள்.அங்க நடந்த முக்கியமான விசயம் என்னெண்டால் நான் சயன்ஸ படிக்கப்போன ரீச்சரோட அரட்டை அடிக்கறதால அவா எங்கட கூட்டத்துக்கு தோழியாயிட்டா (அவான்ர வீட்டதான் நாங்கள் வெரலிக்காய் ஆம்பரலங்காய் எல்லாம் களவெடுக்கிறது) அப்ப ஒருநாள் அவான்ர அல்பம் பார்த்துக்கொண்டிருக்க அதில செல்வி ரீச்சரின்ர கல்யாணப்போட்டோ எனக்கு ஒரே ஆச்சர்யம்.நான் சொன்னன் மிஸ் இவாதான் எனக்கு ரொம்பபபபபபபபப பிடிச்ச செல்வி ரீச்சர் எண்டு.பக்கத்தில இருந்ததுகள் எல்லாம் சிரிக்கத்தொடங்கிட்டுதுகள்.மிஸ் சொன்னா ஓ இவாதான் என்ர மூத்தண்ணி ஆனால் அண்ணா இப்ப வேற கல்யாணம் செய்திட்டார்.எனக்கு ஒரே சந்தோசமாவும் இருந்திச்சு ஆனால் பிறகு கவலையாயும் இருந்திச்சு பாவம் அவாக்கு எங்கட வயசில இரண்டு பிள்ளையள்.அண்டைக்கு இரவே துசிக்கு கடிதம் போட்டனான் “உனக்குத் தெரியுமோ நான் செல்வி ரீச்சற்ற கல்யாணப் போட்டோ பார்த்தனான்” அது இது எண்டு ஒரே புழுகல் தான்.

மாத்தளையில ஞாயிற்றுக்கிழமையிலே அறநெறிப்பாடசாலைக்குப் போகவேணும்.அங்க இருந்து றம்பொட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகத்துக்கு தேசிக்காய் சாதமும் கொண்டு எல்லாரும் போனமா போற வழியில எல்லாரும் நல்ல நித்திரை எனக்குப் பின்னால கொஞ்ச் பெடியங்கள் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருந்தவங்கள்.எனக்கு “அவன் வட்ட வட்ட நிலவையும் அறிவான் ஆனால் பேதை நெஞ்சம் புரியல அவனா மேதை” என்றொரு 'தாளம்' பட பாட்டு விருப்பம்.அவை கேட்டுக் கொண்டிருந்தது அந்தப் பாட்டுத்தான் அப்ப நான் மெல்லமா அந்தப் பாட்டைப் பாடினான். றம்பொடக்கு போட்டு வந்ததிலிருந்து அந்தப் பொடியங்கள் எல்லாருக்கும் எனக்கும் திவாகர்(அந்தப் பாட்டுப் போட்ட பெடியன்) லவ் எண்டு சொல்லி ம் ம் மலரும் நினைவுகள்.பிறகு நாங்கள் கனடாவுக்கு வந்திட்டம்.

கனடாவிலயும் நிறைய நண்பர்கள் இருக்கினம் முக்கியமா சுதா கார்த்தியக்கா நித்தியா இவையைப் பற்றித் தனியா ஒரு பதிவு ஆறுதலா எழுதிறேன். இங்க வந்து ஸ்கூல் முடிச்சிட்டு இப்ப பகுதி நேர வேலை செய்கிறேன் இந்த செப்ரெம்பர் யுனிவர்சிற்றிக்குப் போகப்போறேன்.
யப்பா எழுதி முடிச்சிட்டன்.

15 comments:

கிஸோக்கண்ணன் said...

//செப்ரெம்பர் யுனிவர்சிற்றிக்குப் போகப்போறேன்\\
நல்வாழ்த்துக்கள்.

அல்வாயா? கொஞ்சம் பக்கத்தில்தான்.

சினேகிதி said...

வாழ்த்துக்கு நன்றி…கொஞ்சமா?? எவ்வளவு பக்கத்தில?

இளைஞன் said...

சிநேகிதி,
உங்கள மாதிரி நானும் என்ர பழைய பள்ளி அனுபவங்களை எழுதத்தான் ஆசை. பேருந்துல போகேக்கயோ இல்லாட்டி எங்கயும் தூர நடந்து போகேக்கயோ இல்லாட்டி படுத்திருக்கேக்கயோ என்ர பழைய நினைவுகள நினைச்சுப் பாக்கிறது. எழுதோணுமெண்டு நினைப்பன் - பிறகு வேற வேலைகளில இத மறந்திடுவன்.

கொழும்பில நான் படிச்ச நேரத்தில எங்கட சகமாணவியளோட ஒரே சண்டைதான். நான் யேர்மனிக்கு புலம்பெயரும் மட்டும் சண்டைதான். சண்டையெண்டா சண்டை பேய்ச்சண்டை. அதப்பற்றியும் எழுதோணும்.

சரி தொடர்ந்த நீங்கள் நினைவுகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இளங்கோ-டிசே said...

வளாக வாழ்வு சிறக்க வாழ்த்து சிநேகிதி. என்னை மாதிரி, 'கனக்க' படிக்காமல் கொஞ்சமாய் படியுங்கோ :-).
.....
//அல்வாவா? கொஞ்சம் பக்கத்தில்தான்.//
நான் அது சாப்பிடுகின்ற சமாச்சாரம் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் இரண்டு பேரும் வேறு எதுவோ என்றௌ நினைத்து அல்லவா கதைத்துக்கொண்டிருக்கின்றீர்கள் :-).

சினேகிதி said...

இளைஞன் உங்கட பதிவுக்குச் செல்ல முடியவில்லை ஏன்?
நீங்கள் பேய்ச்சண்டையைப் பற்றியெழுதுங்கோ நான் அடுத்த முறை பிசாசுச் சண்டை பற்றி எழுதிறன்.

DJ அல்வா சாப்பிடுற சமாச்சாரம் தான்.எங்கட ஊர் அல்வாய்.நான் எப்பவும் கொஞ்சம் தான் படிக்கிறனான் ஏனெண்டால் எங்கட ஊரில கனக்கப் படிச்ச ஒருத்தர் மூளை முழம்பி இருக்கிறார்.

இளங்கோ-டிசே said...

//எங்கட ஊரில கனக்கப் படிச்ச ஒருத்தர் மூளை முழம்பி இருக்கிறார்.//
யார் கிஸோவா :-)?

சினேகிதி said...

கடவுளே ஏன் என்னை வம்பில மாட்டி விடுவான் DJ?
நான் சொன்னவர் இன்னமும் ஊரிலதான் இருக்கிறார்.

சினேகிதி said...

நன்றி சக்தி. அல்வாதானே வேணும்னா சொல்லுங்க உங்களுக்கும் தாறன்… என்ன அல்வா வேணும்? கச்சான் அல்வாவா?கடலை அல்வாவா?

இளைஞன் said...

சிநேகிதி,
எனது வலைப்பதிவு இங்குள்ளது: http://kurumpoo.yarl.net

சினேகிதி said...
This comment has been removed by a blog administrator.
கிஸோக்கண்ணன் said...

//வாழ்த்துக்கு நன்றி…கொஞ்சமா?? எவ்வளவு பக்கத்தில?\\

யார்க்கரு என்ற இடம் தெரியுமா? அதற்கு முதல் வரும் தல்லையப்புலம் என்ற இடம்.

கிஸோக்கண்ணன் said...

//யார் கிஸோவா :-)?\\

அறவே இல்லாமல் இருப்பதைவிட குழம்பியாவது இருத்தால் மேலல்லவா டீசே.

சினேகிதி said...

யாக்கரை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

துளசி கோபால் said...

//செப்ரெம்பர் யுனிவர்சிற்றிக்குப் போகப்போறேன்\\

வாழ்த்துக்கள்!!!!

ந்ல்லா படிங்க!!!!!

சினேகிதி said...

Tx Thulashi akka