Custom Search

Friday, June 10, 2005

தளராத துணிவோடு களமாடினாய்

சயந்தனின் பதிவொன்றில் கிட்டண்ணா பூங்காவைப் பற்றி வாசிச்சதிலிருந்து எனக்கு மாவீரர் நாளுக்கு நான் பள்ளிக்கூடத்தில பாடின இரண்டு புலி மாமாக்களின்ர பாட்டு ஞாபகம் வந்திடுச்சு.

-சினேகிதி-

தளராத துணிவோடு களமாடினாய்

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ இந்தி
அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது
தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது
தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்
தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது (2)
கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது (2)
இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது
உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

சிங்களத்துப் படைகளோடு போராடினாய் (2)
வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் (2)
பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் (2)
இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் (2)

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ
இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ


ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2)
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் - சாவை
எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்
பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்
பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு
கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு
அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்
அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

12 comments:

Muthu said...

சிநேகிதி,
நல்லா இருக்கு.

சினேகிதி said...

நன்றி முத்து.

வன்னியன் said...

தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது.

சினேகிதி said...

நன்றி வன்னியன். பதிவிலே திருத்தி விட்டேன்.

-/பெயரிலி. said...

"தளராத துணிவோடு களமாடினாய்"

சினேகிதி said...

பெயரிலி பாடலின் ஒலி வடிவத்திற்கு இணைப்புக் கொடுத்ததற்கு நன்றி.

ஜெயச்சந்திரன் said...
This comment has been removed by a blog administrator.
சினேகிதி said...

\\கன்நளைக்கு பிறகு பட்டு கெக்கெ கிடைச்சுது.//

என்ன குமிழி அந்த மாதிரி தமிழைக் கொலை பண்ணிறீங்க??

இளைஞன் said...

//தம்பி தானையிலே தளபதியாய் நீ முழங்கினாய்//

தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்

சினேகிதி said...

நன்றி இளைஞன் திருத்தி விட்டேன்.

ஜெயச்சந்திரன் said...

தப்பு தான் சினேகிதி. அது தங்கிலிஸ் விசைப்பலகை கொண்டு தட்டினோம். அது தான் சிக்கல்.
கன நாட்களின்பின் இப்பாடலை கேட்க வழி செய்த பெயரிலிக்கும் சினேகிதிக்கும் நன்றி

சினேகிதி said...

குமுழி நன்றியில் பாதியை வெட்டி எங்க வீட்டு லொக்கர்ல வைச்சிட்டேன் நாங்க தங்கிலிஸை தமிங்கிலிஸ் எண்டு சொல்றனாங்கள்.