Custom Search

Thursday, October 09, 2008

என்னைத் தெரியுமா - Alzheimer's disease

நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில்

'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'.

என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன்.

பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்ததற்கான விருந்துபசாரம் நடந்து கொண்டிருக்கிறது. பியா மொட்டைமாடியில் தீவிரமா எதையோ யோசிச்சுக்கொண்டிருக்கிறா.

அஜய் : பியா உள்ள வா பனி கொட்டுது பார்.
பியா : இல்ல அஜய் நம்ம பிள்ளை எப்பிடி நான் பெத்தெடுக்கப்போறனோ தெரியல. பயமா இருக்கு.


மகனைக் குளிக்க வாக்க பாத்ரப்ல தண்ணியைத் திறந்துவிட்டிட்டு குழந்தையையும் அதுக்குள்ள விட்டிட்டு அறைக்குள்ள ஏதோ எடுக்க வந்த பியாவின் கண்ணில் ஒரு பல்லி படுகிறது. அந்தப் பல்லியையே பார்த்துக்கொண்டிருக்கும் பியாவுக்கு மகனின் ஞாபகம் இல்லை. தண்ணியி நிரம்பி மூர்ச்சையாகும் மகன் எப்படியோ காப்பாற்றப்படுகிறான்.


இப்ப நான் சொன்னதெல்லாம் U, Me aur Hum என்ற திரைப்படத்தில் வந்த காட்சிகள். படத்தில் பியா (கஜோல்)க்கு Alzheimer's disease என்று சொல்லப்படுகிறது. அஜய் ஒரு மனோதத்துவ வைத்தியர். இருவரும் காதலிக்கிறார்கள். அஜய் தன்னிடம் பொய் சொன்னது தெரிந்து பிரிந்து பிறகு சேர்கிறார்கள். திருமணம் செய்துகொள்கிறார்கள். ஒரு நாள் கடைக்குப்போகும் பியாவுக்குத் திரும்ப வீட்டுக்கு வர வழி தெரியவில்லை. தன்ர பெயர் அஜயின் தொலைபேசி இலக்கம் வீட்டு முகவரி என எல்லாம் மறந்துபோய் விடுகிறது பியாவுக்கு.பிறகொருநாள் திருமணநாளையும் மறந்து முழிக்கிறார் பியா. அப்போதுதான் மருத்துவரிடம் செல்கிறார்கள்.அந்த மருத்துவ நண்பரும் பியாவுக்கு Alzheimer's disease ன் ஆரம்ப கட்டம் என்கிறார்.

65 வயதுக்கு கூடிய கனடிய முதியோர்களில் 7.69% இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதன் முதலாக 1906 ம் ஆண்டு ஜேர்மன் வைத்தியரான Alois Alzeimer ல்தான் இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகங்களை மங்கச் செய்து உணர்வுகளை அங்க அசைவுகளைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்வது இந்நோய். cerebral cortex , entorhinal cortex , hippocampus , பின்னர் frontal , partial & temporal என மூளையின் எல்லாப் பாகங்களும் படிப்படியாக தம் தொழிற்பாடுகளை நிறுத்திக்கொள்ளும்.

அண்மையில் ரொரன்டோவில் இந்நோயுள்ள 3411 பேரின் மூளைகளின் உருவ அமைப்புகளை ஒப்பீடு செய்து பார்த்ததி்ல் `ஹிப்போகம்பஸின் கனவளவு குறைந்து போனால் அது அல்சைமரின் ஆரம்ப கட்டம் எனவும் medial temporal lobe ன் கனவளவு குறைவா இருந்தால் அவர்களை இந்நோய் தாக்கி 4-5 வருடங்கள் ஆகியிருக்கலாம் என்று சொல்லலாமாம். நோயின் ஆரம்ப கட்டத்தில் cerebellum முதுகெலும்பு மற்றும் உடல்பாகங்களை அசைக்கச் செய்யும் பாகங்கள் போன்றவை பெரிதாக பாதிப்படைவதில்லை அதனால்தான் இந்நோய் தாக்கியிருப்பவர்களால் ஆரம்பகட்டத்தில் நடக்கலாம் கதைக்கலாம். வெளியாட்களிடையே இவர்கள் நோயாளிகளாக அடையாளம் காணப்படமாட்டார்கள். ஆனால் நாளடைவில் அத்தியாவசிய தேவைகளையே இவர்களால் கவனிக்க முடியாது. நெருப்பில கை வைச்சால் சுடும் என்றோ பேனையால் எழுதலாம் என்றோ தெரியாது.கிட்டத்தட்ட குழந்தையைப்போல் ஆகிவிடுவார்கள்.

நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல தான் தாயாகப்போறன் என்பதை மறந்து பியா ஸ்கிப்பிங் ஆடுறா. பின்னர் குழந்தை பிறந்ததை மறந்து எப்படிக் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறோனோ என்று கவலைப்படுகிறாள்.பியாவுக்கு நான் அவளுடைய கணவன் என்ற ஞாபகம் வரும் நாட்கள் என்னுடைய அதிஸ்டமான நாட்கள் என்று சொல்வார் அஜய்.இந்தப்படமே அஜய் ஒரு அந்நியனாக பியாவிடம் அறிமுகமாகி தங்கள் கதையைச் சொல்வதுபோல எடுக்கப்பட்டிருக்கும். கதை சொல்லி முடிய பியாவுக்கு அஜய் தன் கணவர் என்ற ஞாபகம் வரும். கிட்டத்தட்ட 50 First Dates மாதிரி. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் எப்ப கோபப்படுவார்கள் எப்ப உணர்ச்சிவசப்படுவார்கள் என்று தெரியாததால் அநேகமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர்தான் கூடவிருந்து இவர்களைப் பார்த்துக்கொள்ள முடியும். மற்ற யாருக்கும் அந்தளவுக்கு பொறுமையோ விருப்பமோ தேவையோ இருக்கப்போவதில்லை.

ரத்த உறவுகளுக்கு அதாவது உங்கள் பெற்றோருக்கு அல்லது சகோதரர்களுக்கு Alzheimer's disease இருந்தால் உங்களுக்கும் வரக்கூடிய சந்தர்ப்பமுள்ளது. அதுவும் ஒரு கருமுட்டையிலிருந்து பிறந்த ஒருவருக்கு இந்நோய் இருக்குமானால் மற்றவருக்கு வரக்கூடிய சாத்தியக்கூறு 40%.அம்மா அப்பா இருவருக்கும் இந்நோய் இருந்தால் அவர்களுக்கு 80 வயது வரமுதல் அவர்களுடைய பிள்ளைகளுக்கு இந்நோய் வரக்கூடிய சாத்தியக்கூறு 54%.

அஸ்பிறின் நிக்கற்றின் போன்றவை இந்நோய் வருவதற்கான காரணிகளைக்குறைப்பதாகச் சொல்லப்படுகிறது இருந்தாலும் அஸ்பிறின் போன்றவற்றால் ஈரல் பாதிப்படைவதும் நிக்கற்றினால் நுரையீரல் பாதிப்படைவதும் தெரிந்ததே.ம் ஏறச்சொன்னால் எருதுக்கு கோவம் இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோவமாம்.

யோர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இரண்டு மொழிகள் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்நோயால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் சற்றுக்குறைவாகவுள்ளதாம் ஏனென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பேசுபவர்களின் working memory அதிகமான வேலையைச் செய்கின்றதாம் அதனால் அது தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருப்பதால் இப்டித் திடீர் மறதி வருவது குறைவாம்.

4 comments:

சந்தனமுல்லை said...

உங்க பதிவுகள் எல்லாம் ரொம்ப இன்பர்மேட்டிவ்!!

Anonymous said...

நல்லது சிநேகிதி. பொதுவாக தமிழ் சினிமாவில் பல்வேறுபட்ட உளவியல் பிரச்சனைகள் தொடப்பட்டிருக்கு. உதாரணமாக சத்தம் போடாதே, ராமன் தேடிய சீதை, அந்நியன், கஜினி, பிரிவோம் சந்திப்போம் போன்றவற்றை சொல்லலாம். இப்படி சினிமாவில் கையாளப்பட்ட உளவியல் பிரச்சனைகள் பற்றி தொடர்ந்து கட்டுரைகளை எழுதலாமே. அவை பற்றிய அறிவியல் ரீதியான தரவுகளோடும் விளக்கங்களோடும் கட்டுரையை எழுதினால் சிறப்பாக இருக்கும்.

அதேபோல குழந்தைகள், சிறுவர்களின் உளவியல் பிரச்சனைகள் பற்றியும் தொடர்ந்தும் எழுதுங்கள். புலம்பெயர்ந்து வாழ்கிற நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்குள்ள உளவியல் சிக்கல்கள் பற்றி நீங்கள் எழுதினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

சினேகிதி said...

நன்றி சந்தனமுல்லை...நல்ல பெயர் உங்கட.

அநானி நீங்கள் சொன்ன எல்லாப்படங்களைப் பற்றியும் எழுதவேண்டும்.

கோபிநாத் said...

\\சந்தனமுல்லை said...
உங்க பதிவுகள் எல்லாம் ரொம்ப இன்பர்மேட்டிவ்!!\\

வழிமொழிகிறேன்!

நிறைய எழுதுங்கள் ;)