Custom Search

Thursday, March 20, 2008

ஜீவீதா - அவளை இன்டைக்குப் பார்த்தனான்!


இப்ப என் மனசில ஏற்பட்டுக்கொண்டிருக்கிற உணர்ச்சிகளையும் ஞாபகங்களையும் இந்த ஒரு பதிவுக்குள்ள அடக்க முடியுமா என்று தெரியேல்ல இருந்தாலும் எழுதுறதுதான் மனசை லேசாக்கும் என்றதால எழுதத் தொடங்கிட்டன்.

அவளுக்கு பெயர் ஜீவிதா. முதலாம் வகுப்பில இருந்து 5ம் வகுப்பு வரைக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில படிச்சிட்டு பிறகு ஆறாம் வகுப்புக்கு இன்னொரு பெரிய பள்ளிக்கூடத்துக்கு போவமெல்லோ அப்பிடி நான் பருத்தித்துறை மெதடிஸ் மகளிர் கல்லூரிக்கு போய் ஒரு கிழமைல நேவி அடிக்குப் பயந்து பள்ளிக்கூடம் போமாட்டன் என்று வீட்டில நின்டிட்டன். அப்பா வேற அந்தநேரம் லண்டனால வந்து நிண்டவர் வீட்டுக்கு பக்கத்திலயே படிக்கட்டும் என்று செல்லையாக் கம்பஸ்ல கொண்டுபோய் சேர்த்து விட்டிட்டார். புதுப் பள்ளிக்கூடம் புது இடம் கொஞ்சம் பயம் வேற. முதல் கிழமைதான் பயமெல்லாம் பிறகு எங்களைப் பார்த்துத்தான் மற்றாக்கள் பயப்பட்டவை அது வேற கதை. செல்லையால அறிமுகமான என் நண்பிகள்தான் துசி கஸ்தூரி கார்த்திகா சோபர்ணா அகல்யா மந்தாகினி ஜீவிதா சோபியா மைத்திரேயி மேகலா சுனிதா இந்த பட்டியல் ரொம்ப நீளம். இப்ப ஏன் இதெல்லாம் சொல்றன் என்று யோசிக்கிறீங்கிளா?

முதல்ல சயந்தன் அண்ணாக்கு ஒரு பெரிய நன்றி. சயந்தன் அண்ணா மட்டும் "பூவைப் போல புன்னகை காட்டு " பாடலைத் தந்து என்னைப் பார்க்கச் சொல்லாட்டால் நான் ஜீவீதாவை எப்பிடிப் பார்த்திருப்பன். அந்தப் பாட்டை போட்டிட்டு வேற ஏதோ வேலை செய்துகொண்டிருந்தனான் தற்செயலா பாட்டு window வைப்பார்த்தால் ஒரு மரக்கிளைக்கு நடுவில தெரிஞ்சது ஜீவிதாட முகம். என்னால ஒரு நிமிசம் நம்ப முடியேல்ல. திரும்ப கொஞஞ்சம் பின்னால இழுத்துப்போட்டு அவளேதான். அந்தக் கண் காட்டிக்குடுத்ததிட்டு. கத்திட்டன் நான். பக்கத்தில இருந்த அம்மாவும் அக்காவும் பயந்திட்டினம்.அக்காக்கும் ஜீவிதாவைத் தெரியும். இங்க பார் அக்கா ஜீவிதா இந்தப்பாட்டில வாறாள் என்றன் . ஒரு நிமிசம் நான் பயந்திட்டன் அவச்சத்தம் மாதிரிக் கத்துது என்று அம்மா திட்டுறா எனக்குப் பயங்கர சந்தோசம் அவளைப் பார்த்தது.


ஊாரை விட்டு வந்து 10 வருசமாச்சு. 4-5 வருசத்துக்கு முதல் ஒரு நண்பியோடு ஊரிலுள்ள மற்ற நண்பிகளைளப்பற்றிக் கேட்கும்போது எல்லாற்ற காதல் கதை எல்லாம் சொன்னாள் ஜீவிதாவைப் பற்றி ஒன்றும் சொல்லே்ல.கடைசியா சொன்னாள் ஜீவிதா இயக்கத்துக்குப் போட்டாள் என்று, எனக்கு நம்பக் கஸ்டமா இருந்தது. இவை இவைதான் போராடப் போவினம் என்ற ஒரு நினைப்பு எனக்கிருந்தது இந்த நினைப்பின் படி ஜீவிதாவை என்னால போராளியாக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியேல்ல. ஆனால் நாங்கள் நினைச்சதுக்கு எதிர்மாறா நிறைய விசயங்கள் நடக்கேக்க அவள் மட்டும் விதிவிலக்கா என்ன. ஜீவிதான்ர நெருங்கிய நண்பி அனிதா. 6ம் வகுப்பில இருந்து 8ம் வகுப்பு வரைக்கும் நாங்கள் எல்லாரும் நண்பிகள்.ஜீவிதா, மந்தா, அனிதா, அகல்யா இவையெல்லாம் பக்கத்து வகுப்பு. அநேகமாக எங்களுக்குப் படிப்பிக்கிற ரீச்சர்தான் அவைக்கும் படிப்பிக்கிறது அதால பக்கத்து வகுப்பெண்டாலும் எங்களுக்கு ஒரு ஆரோக்கியமான போட்டி எப்பவுமே இருந்தது. முக்கியமா எனக்கு இப்ப ஞாபகம் வாறது கிருஸ்ணகுமார் சேர். எங்களுக்கு கணிதம் படிப்பிச்சவர் அவர். ஜீவிதா வாய்காரி எங்களோட மட்டுமில்ல கிருஸ்ணகுமார் சேரோடயும் நல்லாச் சண்டை பிடிப்பாள். ஜீவிதான்ர அக்காவும் எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிச்சவா அவா ஜீவிதாக்கு நேரெதிர்.

எனக்கு அவளை இந்தப் பாட்டில பார்த்த சந்தோசத்தில மூளை வேலை செய்யேல்ல. சயந்தனண்ணாட்ட ஜீவிதைப் பற்றி விளங்கப்படுத்துறன் அவர் யாரைச் சொல்றீங்கள் இந்தப்பாட்டின்ர முக்கிய பாத்திரமா என்று அப்பத்தான் முழுப்பாட்டையும் திரும்பப் பார்த்ததன் அதுவரைக்கும் எனக்கு அவளுக்காகத்தான் பாடினம் என்றது புரியவேயில்லை.

இந்தப் பாட்டைப் பார்க்க எனக்கு செல்லையாக் கம்பஸ் மாமரமும் தெய்வம் ரீச்சர் வீட்ட நாங்கள் எல்லாரும் சைக்கிள் park பண்றதும் செல்லையா கன்ரீனும் செல்வி ரீச்சரும் (எங்கட வாழ்க்கைத்திறன் ரீச்சர் - என்னைமாதிரி ஜீவிதா மாதிரி எதிர்த்துக் கதைக்கிற பெட்டையள அவாக்கு ரொம்பபபபப் பிடிக்கும்:-) இன்னும் என்னென்னவோ எல்லாம் ஞாபகம் வருது எழுதத்தான் பயமா இருக்கு. எங்களுக்கு ஆங்கிலம் படிப்பிக்கிறது ஒரு ரீச்சர். ஜீவிதாவைக்கு ஆங்கிலம் படிப்பிக்கிறது ஒரு மாஸ்டர். இரண்டு பேரும் வயசுபோன ஆக்கள். இரண்டு வகுப்புக்கும் ஒரே நேரத்திலதான் ஆங்கில வகுப்பு நடக்கும். அவை எங்களுக்குப் படிப்பிக்கிறத விட்டிட்டு பிஸியாயிருப்பினம்.அந்த நேரத்தில ஜீவிதா எங்கட வகுப்புக்கு ஓடி வந்து இரகசியம் சொல்றன் என்டுபோட்டு பிலத்த சத்தமா நளினத்தோட கதை சொல்லுவாள்.இப்பிடி நிறைய ஞாபகம் வருது. ஜீவிதா மட்டும் இதை வாசிச்சு என்னைத் தொடர்புகொண்டாள் என்டால் ஐயோ அதை விட சந்தோசம்... ஜீவிதாவைத் தெரிந்த 2 நண்பிகளுக்கு மெஸேஜ் பண்ணிட்டன் அவையும் பார்த்திட்டு கத்தி அம்மாட்ட பேச்சு வாங்கப்போயினம்.

திரும்பவும் சயந்தனண்ணாக்கு நன்றி.

25 comments:

U.P.Tharsan said...

டச்சிங்

கோபிநாத் said...

நெகிழ்ச்சியான பதிவுங்க..

பாடல், குரல், எடுத்த விதம் எல்லாமே அருமை...பகிர்ந்தமைக்கு நன்றி ;)

Dreamzz said...

nice :)

மு. மயூரன் said...

அட...

வசந்தன்(Vasanthan) said...

என்னத்தைச் சொல்லிறது???

Anonymous said...

உங்கள் சினேகிதி இந்த சினேகிதியை தொடர்பு கொள்ள வாழ்த்துக்கள்.

MyFriend said...

hope you meet Jeevitha soon. :-)

சுபானு said...

நெகிழ்ச்சியான பதிவு.. :)
உங்கள் நண்பி உங்களைத் தொடர்பு கொள்வதற்கு வாழ்த்துக்கள்....

King... said...

//ஜீவிதா இயக்கத்துக்குப் போட்டாள் என்று, எனக்கு நம்பக் கஸ்டமா இருந்தது. இவை இவைதான் போராடப் போவினம் என்ற ஒரு நினைப்பு எனக்கிருந்தது இந்த நினைப்பின் படி ஜீவிதாவை என்னால போராளியாக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியேல்ல. ஆனால் நாங்கள் நினைச்சதுக்கு எதிர்மாறா நிறைய விசயங்கள் நடக்கேக்க அவள் மட்டும் விதிவிலக்கா என்ன//

?????

King... said...

எங்கட ஊரில் பலருடைய வாழ்க்கை இப்படித்தான் திசைமாறி கேள்விக்குறியாகியிருக்கிறது...

King... said...

நீங்கள் உங்கள் நண்பியோடு மீண்டும் தொடர்பு கொள்ள பிரார்த்தனைகள்...

தமிழன்-கறுப்பி... said...

முதல் முறையாக பின்னூட்டம் இடுகிறேன் என்று நினைக்கிறேன் ஆனாலும் மிக நல்லதொரு பதிவில் ஆரம்பிக்கிற திருப்தி இருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

//இப்ப என் மனசில ஏற்பட்டுக்கொண்டிருக்கிற உணர்ச்சிகளையும் ஞாபகங்களையும் இந்த ஒரு பதிவுக்குள்ள அடக்க முடியுமா என்று தெரியேல்ல//

என்ன இருந்தாலும் பழைய நட்புகளின் நினைவுகள் எப்பொழுதும் சுகமும் சோகமுமாய் அது ஒரு கலவையான இசைபோல மனதில் நிறைவது உண்மைதானே...

நினைவுகளே சங்கீதம் எனும்போது நட்பின் நினைவுகள் சாதாரணமா...

Anonymous said...

சினேகிதி
இந்த இணைப்பில் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின்
ஆங்கில செய்தி இணைப்பு இருக்கு..
இதில் செய்தி வாசிப்பவர் உங்கள் நண்பியா என பார்க்கவும்...

http://www.youtube.com/watch?v=9RlVFnvBb40

சினேகிதி said...

anony yea that's her!

ஆதிரை said...

சினேகிதி,
ஜீவிதா.. எனக்கும் தெரிந்தவள். 2003 A/L கணித வகுப்பில் அறிமுகமாகிய ஒருத்தி. நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று என் மொழியில் சொல்வதென்றால், சரியான குழப்படிக்காரி. பின் வந்த ஒரு நாளில் பேசிக்கொண்டார்கள் தாயக மண் மீட்பு போரில் அவளும் ஒருத்தியாக இணைந்து விட்டதாக. சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளை மருத்துவப்பணி நிமித்தம் வன்னி பெருநிலப்பரப்புக்கு சென்ற என் நண்பன் போராளியான அவளுடன் சந்தித்ததை நினைவு படுத்தினான். காலங்கள் காத்திருக்காமல் உருண்டோடும் போது கனமாற்றங்களையும் நிகழ்த்திவிட்டல்லவா நகர்கின்றது.

ஆம்... இப்போது இந்த வீடியோவைப்பார்த்து உங்கள் நினைவுகளை மீட்டும் முன்னரே இவளின் நினைவுகள் எனது நெஞ்சை ஒருமுறை உலுப்பியிருக்கின்றன. கடந்த நவம்பர் இரண்டாம் நாள் யாரும் எதிர்பாத்திராத அந்தச் செய்தி வன்னி மண்ணிலிருந்து மெல்ல மெல்ல பேரிடியாக வெளிவரத்தொடங்கிய போது இவள் வாழ்விலும் பேரிடியொன்று வீழ்ந்தது. இவள் வீரமகளாக மட்டுமல்ல விதையாகிப்போன புலிவீரனின் வீரத்துணைவியாகவும்....

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவாக தமிழீழக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல் குறுந்தகடு "சிரிப்பின் சிறகு" வெளியீட்டு நிகழ்வில், லெப். கேணல் அலெக்சின் திருவுருப்படத்திற்கு சுடரேற்றி, மலர்மாலை அணிவிக்கும் துணைவி யாழ்மதியாக ஜீவிதா..

http://www.puthinam.com/full.php?2b1Vo6e0dUcYS0ecAA4S3b4C6D74d2f1e3cc2AmI3d424OO3a030Mt3e

ஜீவிதா, உனது வீரத்துக்கும் தியாகங்களுக்கும் தலை வணங்குகின்றோம்!

சினேகிதி said...

வணக்கம் ஆதிரை(?)
நீங்கள் சொன்ன விடயம் நான் ஏற்கனவே அறிந்ததுதான் இருந்தாலும் ஒவ்வொருமுறை கேட்கும்போதும் என்னவோ செய்கிறது. எனக்கும் அவளுக்கும் பொதுவான நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசும்போது அவர் சொன்னார் அவர்களுக்கு வயதுக்கு மீறிய மனமுதிர்ச்சி இருக்குதாம் ஆனால் தனக்குத்தனக்கு என்று வரும்போதுதான் அதை முழுதாக உணரமுடியும் என நினைக்கிறேன். அந்த நண்பர் மூலமாக ஜீவிதாவோட தொர்புகொள்ள முடிந்தால் உங்களுக்குச் சொல்கிறேன் ( இதுவரை நீங்கள் தொடர்பில் இல்லையென்றால்).

ஜீவிதாவைப்போல் எனது மற்றை நண்பர்களையும் தெரிந்திருக்கக்கூடும் உங்களுக்கு (பதிவில் சில பெயர்கள் குறிப்பிட்டிருக்கிறேன்.)

எனது மின்னஞ்சல் : snegethy@gmail.com

Anonymous said...

i am not ur batch.
but i know the Girls& the teachers u mentioned here.
Jeevitha Studied A/L Maths in Methodist Girls' High School So i knew her well A cute talkative & friendly girl. Mithiregy's sister is my class mate.
I can't believe this.

சினேகிதி said...

Hi thanu,
yea it's pleasantly surprising to meet you all here:-))) your friend must be Pooji..am I right??

Now i'm little scared of the things I wrote abt our teachers :-((

கானா பிரபா said...

ஆகா, ஒரு பாட்டு இவ்வளவும் செய்யுதா,

நான் தொலைத்த நண்பர்கள் பலர், செம்மணிப் புதைகுழியிலும் இருக்கலாம் அவர்கள்.

Anonymous said...

ya you are right.

"Now i'm little scared of the things I wrote abt our teachers "

you didn't write anything wrong.
so no need to worry.

Anonymous said...

I know something about Jeevitha

K.Nithy said...

வணக்கம் சகோதரி
உங்கள் ஆக்கங்கள் நன்று
ஆனாலும் கற்பித்த குருவை
இப்படியா எழுவது.
உங்கள் நண்பி திருமணம் செய்து
கணவர் அண்மையில் இறந்து விட்டார்
இது எல்லாருக்கும் சோகம்
(பூவைப் போல புன்னகை காட்டு
நண்பி).
நன்றி மீண்டும் சந்திப்போம்
உங்களை தெரிந்த ஒரு சகோதரி

nithy said...

வணக்கம் சிநேகிதி!
நலமாக உள்ளீர்களா?
ஏன் எனது விமர்சனத்தை பிரசுரிக்கவில்லை?
ஆசிரியை பற்றி எழுதியது யோசனையோ?
பயம் வேண்டாம், உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்.
ஒரு எழுத்தாளர் என்றால் எல்லா வித விமர்சனங்களையும்
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பூஜி ஐ கூட எனக்குத் தெரியும்.

நன்றி
அன்புடன்,
nithy

சினேகிதி said...

வணக்கம் நிதி...மன்னிக்கவும் உங்கள் பின்னோட்டங்களை இன்றுதான் பார்த்தேன். கனகாலமாக இந்தப்பக்கம் வரவில்லை. விமர்சனங்களை ஏற்றுக்கொள்றது கொஞ்சம் கஸ்டம்தான் ஆனால் அந்தப் பக்குவம் கொஞ்சமாவது இருக்கென்டு நினைக்கிறன் இப்ப.

என்னைத் தெரிந்த ஓரு சகோதரி ஒருவரை நான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறேனா?? ஜீவிதாவின் கணவர் இறந்த விடயம் கேள்விப்பட்டேன்...தெரிந் ஒருவர் மூலமாக அவளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முயற்சி கைகூடவில்லை. அது உங்கள் மூலமாகக் கூட நிறைவேறலாம். தொடர்புகொள்ளுங்கள். snegethy@gmail.com