Malingering and Factitious Disorder
Malingering ,Factitious Disorder இரண்டுமே கொஞ்சம் விசித்திரமான மனநோய்கள். உங்களுக்குத் தெரிஞ்ச நிறைய பேருக்கு இந்நோயின் சில அறிகுறிகள் இருக்கலாம் ஏன் உங்களுக்குக் கூட இருக்கலாம் (எனக்கும்தான்). எனவே இதை வாசித்துவிட்டு உங்களுக்கும் இந்த நோய் இருக்கா என்று சந்தேகப்பட வேண்டாம் ஏனென்றால் இந்நோய்களில் எத்தனை அறிகுறிகள் இருந்தால் diagnostic criteria க்குள் வருவீர்கள் என்று வரையறுத்துச் சொல்வது கடினம்.
இந்நோயுள்ளவர்கள் பொய்யாக ஒரு இயலாமையை உருவாக்கி அதன்மூலம் தங்கள் பொறுப்புகளில் இருந்து ஒதுங்குவார்கள். உதாரணமாக அடிக்கடி sick அடிக்கிறது. வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோர்களுக்கு இந்த "sick அடித்தல்" நல்லாவே தெரியும். சில வேலைத்தளங்களில் லீவு எடுப்பது கடினம் உடன நம்மவர்கள் sick அடிப்பார்கள். வேலைத்தளத்தைத் தொடர்புகொண்டு எனக்கு இன்று திடீரென்று தாங்கமுடியாத தலைவலி காய்ச்சல் தடிமன் இப்பிடி என்னென்னெல்லாம் அழையாத விருந்தாளியா வருமோ அதெல்லாம் தனக்கு வந்திட்டுது என்று சொல்லி வேலைக்கு கள்ளம் போடுறது.அது பெரியாக்களின் விளையாட்டு.
பாடசாலைக்குச் செல்வோரும் இதே விளையாட்டு விடுவினம் ஆனால் அம்மா அப்பாவை கண்டு பிடிச்சிடுவினம். ஆனால் பிள்ளையள் தங்களிட்ட இருந்துதான் பழகினவையெண்டதை ஒத்துக்கொள்ளவே மாட்டினம்.சிலருக்கு பெளதீகப் பரீட்சை நடக்கிற நேரமெல்லாம் வயிற்றுவலி வரும் இன்னும் சிலருக்கு தமிழ்ப் பரீட்சை நேரம் புதுசா புதுசா எல்லாம் வருத்தம் வரும்.
இன்னும் சிலர் ஒரு படி மேல போய் மண்டை உடைச்சுப்போட்டு வாறது கிணத்துக்க விழுறது காய்ச்சல் வரோணும் என்று கோயில் கிணத்தில போய்க் குளிச்சிட்டு நிறைய ஐஸ்கிறீம் சாப்பிடுறது இப்பிடி நிறையச் சொல்லலாம். மனசைத் தொட்டு சொல்லுங்கோ நீங்களும் இப்பிடி எல்லாம் பம்மாத்து விட்டனீங்கள் தானே ?
சில நாடுகளில் இராணுவ சேவை செய்யவேண்டியது கட்டாயம். அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வேலையிடத்திலிருந்து அதிகளவிலான காப்புறுதி பெறுவதற்காகவும் தங்களுக்கு பெரிய பெரிய வருத்தங்கள் இருப்பதாக சொல்பவர்களுண்டு.இப்பிடி ஒரு பொறுப்பிலிருந்து விடுபட பொய்யாக வருத்தம் இருப்பதாக பொய் சொல்வது அல்லது வருத்தத்தை வருவிப்பது இந்நோயின் ஒரு அறிகுறி.
இது தவிர தன்னை வீட்டிலுள்ள எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் சிலர் வருந்தி நோயை வரவழைத்துக்கொள்வதுண்டு. வீட்டில ஒரு சகோதரருக்கு வருத்தம் என்றால் விசேட கவனிப்புக் கிடைக்கும் அதைப்பார்க்கிற மற்ற பிள்ளைகளுக்கு சா இந்த வருத்தம் நமக்கு வந்திருக்கக் கூடாதா ? அம்மம்மான்ர மடில படுக்கலாம் நெஸ்ரோமோல்ட் குடிக்கலாம் 3 நேரமும் பிஸ்கட் சாப்பிடலாம் சோறு சாப்பிடத்தேவையில்ல என்று மனசுக்குள்ள கணக்குப் போடுறது அடுத்த நாள் தானாவே காய்ச்சல் வந்திடும் மற்றாளுக்கு. இது அநேகமா சின்னப்பிள்ளைகள்தான் இப்பிடி நடிக்கிறது ஆனால் பெரியவர்களும் சளைத்தவர்களல்ல. மனைவி பிள்ளைல அல்லது பேரப்பிள்ளைல பாசத்தைப் பொழிஞ்சால் பொறுக்கேலாமல் வருத்தம் என்று படுக்கிற அப்பாக்கள் தாத்தாக்களும் உண்டு.
இப்பிடி பொய் சொல்லிக்கொண்டு பொய் றிப்போர்ட் கேட்டு வாறாக்களால கன நேரம் நடிக்க முடியாது தானே.சில நேரம் தாங்களே மாட்டுப்பட்டிடுவினம். சாதாரணமா ஒரு குறிப்பிட்ட வருத்தம் இருக்கிறாக்கள் எப்பிடி நடந்துகொள்ளுவினமோ அதையே மிகைப்படுத்துவதுபோல இவர்களின் நடிப்பிருக்கும். நெஞ்சு வலியென்டு வருவினம். எந்தப்பக்க நெஞ்சு வலியென்டு கேட்டால் இடப்பக்க வலியெண்டு சொல்லிக்கொண்டு வலப்பக்கத்த இறுக்கிப்பிடிச்சிருப்பினம். இதைத்தான் la belle indifference என்று சொல்றது. உதாரணத்துக்கு ஒருவர் அதிகளவிலான காப்புறுதிப்பணம் எடுப்பதற்காக தனக்கு ஞாபக சக்தி இல்லாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் என்று வைப்பமே அதை நிரூபிப்பதற்காக அவருக்குக் கொடுக்கப்படும் வினாக்கொத்தில் தெரிந்த கேள்விகளுக்கெல்லாம் தாறுமாறாகப் பிழை பிழையாக் பதிலளிப்பார். ஒரு குறிப்பிட்ட border line இருக்கும்தானே எதற்கும். இப்படி பொய் சொல்பவர்களின் அதீத நடிப்பால் இவர்கள் அந்த வினாக்கொத்தில் மிக மிக குறைவான மதிப்பெண் பெற்றால் clinical assessment செய்பவர்களுக்கு விளங்கிவிடும் இவர் நடிக்கிறார் என்று. கண்ணை மூடிக்கொண்டு விடையளித்தால் கூட 10 % புள்ளிகள் வரும் ஆனால் இவர்கள் அதற்கும் குறைவாக எடுப்பார்கள்.
இந்த வருத்தம் மருத்துவம் படிப்பவர்களுக்கும் மருத்துவத்துறையில் வேலை செய்பவர்களுக்கும் அதிகமா வருதாம். ஏனென்றால் மற்றவர்களை விட இவர்களுக்கு அநேகமான வருத்தங்களின் அறிகுறிகள் பற்றித் தெரிந்திருக்கும்தானே அதனால் பொய் சொல்வதும் நடிப்பதும் அவ்வளவு கடினமில்லை :-)
இந்த Malingering உடன் தொடர்புடைய இன்னொரு மனநோய்தான் Factitious Disorder.இது இன்னும் விசித்திரமானது. இந்த வருத்தம் உள்ளவர்கள் தங்களுக்கு காயம் ஏற்படுத்திக்கொள்றது மட்டுமில்லாமல் தங்கட பிள்ளையையும் காயப்படுத்துவினம். அப்பிடி பிள்ளைக்கு காயம் ஏற்படுத்தினால் அதை Factitious Disorder by proxy அல்லது Munchausen Syndrome by proxy என்று சொல்றது.
Rapper Eminem ஐ உங்கள் எல்லாருக்கும் தெரியும்தானே? Eminem ன் பிரபலமான ஒரு பாடல்தான் "Cleaning out my closet ''. அந்தப்பாடலில் வரும் பின்வரும் வரிகளில் தன் தாய்க்கு Munchausen Syndrome இருந்ததாகவும் அதனால் தான் தாயார் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் சொல்கிறார். தன் மனதில் தேங்கியிருந்தவற்றை தான் வெளியில் சொல்வதைத்தான் (அதாவது மனதைச் சுத்தப்படுத்துவதைத்தான் ) cleaning out my closet என்று குறிப்பிடுகிறார்.
" Witnessing your mama popping prescription pills in the kitchen
Bitching that someone's always going through her purse and shit missing
Going through public housing systems, victim of Munchausen syndrome
My whole life I was made to believe I was sick when I wasn't
' Till I grew up, now I blew up it makes you sick to ya stomach, doesn't it ".
கனடாவில் சில வருடங்களுக்கு முதல் இரண்டு தாதிமார்களுக்கு Munchausen syndrome இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தங்களுக்கு Urinary tracy infection, flank pain ( அடிவயிற்றிலும் அதனை அண்டிய பாகங்களிலும் வலி ) மற்றும் gross hematuria ( urine ல் இரத்தம் கலந்திருப்பது) இருப்பதாக தொடர்ந்து முறையிட்டுள்ளார்கள். நாளடைவில் தாங்களே தங்கள் bladder ( பித்தப்பை??)) இரத்தத்தைச் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது ( Chew ,Pace & Honey , 2002).
இப்படியான மனநோய்களுக்கு சிறுவயதில் உரிய பராமரிப்பு கவனிப்பு கிடைக்காதது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கென்று தனியான சிகிச்சைமுறைகளில்லை. பலர் தங்களுக்கு இந்த வருத்தம் இருப்பதாக ஒத்துக்கொள்வதில்லை. அப்படி அவர்களாக ஒத்துக்கொண்டு தெரப்பி எடுத்துக்கொள்வது தவிர வேறு வழிகளில் இவர்களைக் குணப்படுத்தமுடியாது.
14 comments:
ஒவ்வொரு வருத்தங்களின் அறிகுறியைப் படிச்சால் எங்களுக்கு உடம்பு முழுக்க வருத்தம் எண்டு எங்கட சயன்ஸ் மாஸ்டர் சொல்லுவார், நான் படிக்கக் கள்ளம்படுத்திறேல்லை, அதுக்காக ஐஸ்கிறீமை தியாகம் பண்ணமுடியாது.
நீங்கள் உங்கட லெக்சர் நோட்சை பாடமாக்கிறதுக்கு இப்படியெல்லாம் ஐடியாவா ;-)
உபயோகமான பதிவு.
ஒவ்வொரு வருத்தங்களின் அறிகுறியைப் படிச்சால் எங்களுக்கு உடம்பு முழுக்க வருத்தம் எண்டு எங்கட சயன்ஸ் மாஸ்டர் சொல்லுவார், நான் படிக்கக் கள்ளம்படுத்திறேல்லை, அதுக்காக ஐஸ்கிறீமை தியாகம் பண்ணமுடியாது.
நீங்கள் உங்கட லெக்சர் நோட்சை பாடமாக்கிறதுக்கு இப்படியெல்லாம் ஐடியாவா ;-)
உபயோகமான பதிவு.
Malingering - தனக்கு நோய் இல்லை என்று தெரிந்தாலும் தான் நோய் வாய் பட்டிருப்பதாக கூறுவார்
Factitious Disorder - தனக்கு நோய் இருப்பதாக நினைத்துக்கொள்வார்
நல்லதொரு தகவல்..;)
ஹ்ம்ம், நல்ல தகவலுடன் கூடிய பதிவு. நன்றி.
மிகவும் பிரயோசனம் உள்ள பதிவு.
நல்ல தகவல்.. சினேகிதி, உண்மையை சொல்லுங்க.. இது உங்க பாட புத்தகத்துல இருந்து காப்பியடிச்சதுதானே? :-P
எல்லாரும் தங்களை கவனிக்க வேண்டும்ன்னு ,பாசத்துக்காக/கவனிப்புக்காக ஏங்குறவங்க மத்தவங்க கவனத்தை கவருவதற்க்காக செய்யறது.
மாறிவர்ர காலகட்டத்துல நம்மவீட்டுல இருக்குற பெரியவங்க மேல கவனம் செலுத்தாம இருந்தா,தன்னை யாருமே கவனிக்கலையேங்கற தனிமை வருத்தத்துல ,சோர்வா தோனுர அவங்களை விசாரிக்கும்போது ,இயல்பாவே அவங்க மனம் அந்த ஆறுதலை விரும்ப ஆரம்பிச்சுருது.
எல்லாமே நடிப்புன்னு சொல்லிற முடியாது.
அந்த வயசுல அவங்க பிளான் போட்டு பொய் சொல்லறாங்கன்னு சொல்ல முடியாது.இயல்பாவே தான் நோயாளியா உணரராங்க./உணர விரும்பராங்க.. :)
இன்னும் மனசுல சிலபேருக்கு சந்தேகப் பேய் இருக்கும் .
எனக்கு தெரிந்த ஒருவர் ,எல்லா மருத்துவ இதழ்களையும் படிப்பார். அதுல கொடுத்திருக்குற ஏதாவது நோயின் அறிகுறிகளை பார்த்து தனக்கும் அந்த அறிகுறிகள் இருக்கறதா எண்ணி பயப்படுவார்.சும்மா இரும்பினாக்கூட.., அசதியும் ,இரும்பலும் இருந்தா காசநோய்ன்னு புத்தகத்துல போட்டிருந்துச்சுன்னு ஓடிப்போய் மெடிக்கல் டெஸ்ட் எடுப்பார்.இப்படி அடிக்கடி எடுத்த மெடிக்கல் டெஸ்ட் ரிப்போர்ட்களை ஒரு தலையணை சைஸ் கோப்பாக சீரியஸ்ஸா எங்கிட்ட காட்டிய போது ,வாய்வரை வந்த சிரிப்பை அடக்க முடியாம நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தானே தெரியும்:))))
உங்க அலசல் பதிவு அருமையா இருக்கு சினேகிதி..:)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
நல்ல தகவல்.. சினேகிதி, உண்மையை சொல்லுங்க.. இது உங்க பாட புத்தகத்துல இருந்து காப்பியடிச்சதுதானே? :-P/'/
ஹா..ஹா..:)))
இதையெல்லாம் இப்டி பப்ளிக்கா கேக்கப்டது அனு..:)))))))))
//ஆனால் பிள்ளையள் தங்களிட்ட இருந்துதான் பழகினவையெண்டதை ஒத்துக்கொள்ளவே மாட்டினம்.சிலருக்கு பெளதீகப் பரீட்சை நடக்கிற நேரமெல்லாம் வயிற்றுவலி வரும் இன்னும் சிலருக்கு தமிழ்ப் பரீட்சை நேரம் புதுசா புதுசா எல்லாம் வருத்தம் வரும்.
இன்னும் சிலர் ஒரு படி மேல போய் மண்டை உடைச்சுப்போட்டு வாறது கிணத்துக்க விழுறது காய்ச்சல் வரோணும் என்று கோயில் கிணத்தில போய்க் குளிச்சிட்டு நிறைய ஐஸ்கிறீம் சாப்பிடுறது இப்பிடி நிறையச் சொல்லலாம். ம//
//. மனசைத் தொட்டு சொல்லுங்கோ நீங்களும் இப்பிடி எல்லாம் பம்மாத்து விட்டனீங்கள் தானே ?//
உங்க அனுபவங்களை சொல்லிட்டு எங்களையும் கூட்டு சேக்கறிங்களே :P:)))))))
ஆனாலும் ரொம்ப சின்ன வயசுல ஒருமுறை இங்கிலிஸ் டியுசனுக்கு வீட்டுபாடம் செய்யாம,போக பயந்துக்கிட்டு ,வீட்டுல இருந்த மீதி டானிக்கெல்லாம் குடிச்சு வைக்க..(அப்போ,ஏதோ கதாநாயகன் விஷம் குடிச்ச பாடாவதி படத்தை பார்த்ததால வந்த இம்பிரஷன்னு நெனைக்கிறேன்.)
அப்பா பாத்துட்டு ,”குட்பாய் கசக்குதுன்னு சொல்லாம புரோடின் டானிக் நீயே குடிச்சிட்டியே.ஆனா இப்டி முழுசாலாம் குடிக்கப்டாது”ன்னு சொல்லி டியுஷனுக்கு கிளப்பி விட்டுடாரு:(
ஏனுங்க சினேகிதி.. பரிட்சைக்கு அப்புறம் பதிவு பக்கம் ஆளையே காணோமே..:P
அப்பவே சொன்னேன், நல்லா படிச்சுட்டு வந்தவங்க பக்கத்துல ஒக்காந்து பரிட்சை எழுதுங்கன்னு:P
ஓ..விடுமுறையா? வாழ்த்துக்கள்:))
//அப்பவே சொன்னேன், நல்லா படிச்சுட்டு வந்தவங்க பக்கத்துல ஒக்காந்து பரிட்சை எழுதுங்கன்னு:P//
:-) :-)
நிறையப் பின்னோட்டங்களுக்குப் பதில் சொல்லாமல் விட்டிருக்கிறன் போல இருக்கே..ம் இருக்கட்டும் இருக்கட்டும் வாறன்.
Post a Comment