Custom Search

Tuesday, September 30, 2008

என்னை மட்டும் விட்டுவிட்டு பூமி சுத்துது

கவி : ஹலோ சுமி பிஸியா நீ?

சுமி : இல்ல இராமன் தேடிய சீதை படம் பார்த்துக்கொண்டிருக்கிறன்...சொல்லு.

க: எனக்கென்னவோ ஆயிட்டுது போல இருக்கு. சொறிடி நீ கன தரம் போன் பண்ணியிருக்கிறாய் நான் உன்ர போன் மட்டுமில்ல கொஞ்ச நாள ஒருதற்ற போனும் எடுக்கிறேல்ல.உலகத்திலயே தங்களுக்கு மட்டும்தான் கவலை தங்களுக்குமட்டும்தான் கஷ்டம் என்று நினைச்சுக்கொண்டிருக்கினம் நிறையப்பேர். சும்மா எல்லாரும் சந்தோசமா இருக்கினம் தங்களுக்கு மட்டும்தான் மாறி மாறி ஒரே பிரச்சனையென்ட நினப்பு.

சு: என்ன ஆகிட்டுது உனக்கு ? ஆரைத் திட்டுறாய் இப்ப?

க: ஒருதரையும் இல்ல..பொதுவா சொல்றன். யாரும் என்னட்ட வந்து சோகமாக் கதைச்சால் எனக்கு கோவம் வருது. எல்லாருக்கும் பிரச்சனை இருக்கெண்டு எப்பிடி விளங்கப்படுத்துறது மற்றாக்களுக்கு. ஆனால் இப்ப நான் நினைக்கிறன் கடவுளுக்கும் எனக்கும் தீர்க்கப்படாத கணக்கென்னவும் இருக்கோ தெரியா சும்மா ஒரே என்ர தலையெழுத்தையே அழிச்சு அழிச்சு எழுதிக்கொண்டிருக்கிறார் ..உந்தக் கடவுளுக்கு முதல் lay off குடுக்கோணும் அப்பதான் அவர் திருந்துவார்.

சு: அது சரி கடவுளுக்கேவா???? சரி என்னட்ட சொல்லன் என்னாச்சுனக்கு.

க: வேலைக்குப் போனால் ஒழுங்கா வேலை செய்யமுடியேல்ல மாறி மாறி ஈமெயில் பண்ணினம் அது பிழை இது பிழையென்று. வீட்ட வந்தா என்ன ஒரே labtopயோடயே இருக்கிறாய் முகம் தெரியாத ஆக்களோட மணித்தியாலக் கணக்கா கதையுங்கோ ஆனால் வீட்டில இருக்கிற மனிசரோட ஒரு வார்த்தை கதைக்க நேரமில்லை. பொம்பிளைப்பிள்ளைன்ர அறை மாதிரியே இருக்கு இது..மற்ற வீடுகளிலயும் போய் பாருங்கோ இப்பிடித்தான் வீடு வைச்சிருக்குதுகளே என்று அம்மா அப்பான்ர அர்ச்சனை தாங்க முடியேல்ல. மிச்சத்துக்கு என்ர வயசாக்கள் எல்லாரும் கல்யாணம் கட்டிட்டினமாம் என்ற நச்சரிப்பு வேற.முந்தியெல்லாம் படுத்த உடனே என்னமா நித்திரை வரும் இப்பெல்லாம் படுத்த 3-4 மணித்தியாலத்துக்குப் பிறகுதான் நித்திரை வருது. அம்மா கத்துறாவே என்டிட்டு கடமைக்கு சாப்பிடுறன் என்னத்த சாப்பிட்டாலும் ருசியும் தெரியுறேல்ல.ஒன்றிலயும் அக்கறையில்லை என்று அம்மா பேசுறா. ஜிம் பக்கமே போறேல்ல இப்ப. முகத்தில பருக்கள் வேற வரத்தொடங்கிட்டு. எனக்கே அசிங்கமா இருக்கு பார்க்க.



சுமி : ம்....

கவி : தொடர்ந்து படிக்கிறதா இல்லாட்டா இந்த வேலையையே தொடர்ந்து செய்யிறதா ஒன்றும் தெரியேல்ல. தனிய இருந்து எவ்வளவு யோசிச்சாலும் முடிவெடுக்கேலாம இருக்கு. எடுக்கிற முடிவுகள் தெளிவல்லாமலிருக்கு.என்ன செய்து கொண்டிருக்கிறன் என்ன செய்யப்போறன் ம்கும் எல்லாம் ஒரே சூனியமா இருக்கு.எதிர்காலத்த நினச்சா பயமா இருக்கு. பேசாம செத்துப்போய்டலாம் போல இருக்கு..

சுமி : இது எல்லாருக்கும் வாற குழப்பம்தானே. இதுக்குப் போய் சாகுற கதைச்சுக்கொண்டு லூசா நீ. ஏய் அழுறியா நீ..கவி சீ என்ன இது சின்னப்பிள்ளத்தனமா.

எனக்கும்தான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கேல்ல.நானும் தான் வீட்டயும் வேலைலயும் பேச்சு வாங்கிறன் ஒன்டிலயும் கவனமில்ல நிதானமில்ல என்று. தங்கச்சியே என்னைப் பேசுதென்றா யோசிச்சுப் பார்.

நேரத்துக்கு படுக்கிறேல்ல விடிய எழும்பு அறக்கப் பறக்க வேலைக்குப்போறது. ஒழுங்கா சாப்பிடுறேல்ல. வயசுக்கேற்ற முதிர்ச்சியில்லாம சின்னப்பிள்ளைக்கு நிக்கிறன்.. இப்பிடியான குற்றச்சாட்டுகள் எனக்கும் இருக்கு. இதெல்லாம் எல்லாருக்குமிருக்கிற பிரச்சனைதானே. நானும் அநேகமா அடுத்த வருசம் திரும்ப college க்குப்போவன். நீயும் வா தொடர்ந்து படிப்பம். அத விட்டிட்டு இப்பிடி அழாத. பிறகு நான் யாருக்கில்ல போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் என்டு பாடத்தொடங்கிடுவன் பிறகு நீ போனை வச்சிட்டு ஒட வேண்டியது தான்.

கவி : ம்.

சுமி : நான் ஒன்று சொல்லுவன் ஆனால் நீ பிறகு நீயும் உன்ர உளவியல் மண்ணாங்கட்டியும் என்டு திட்டக்கூடாது.

கவி : திட்டமாட்டன் சொல்லு.




சுமி: நீ சொன்ன கவலை நித்திரை பசியின்மை வாழ்க்கை குறித்த பயம் முடிவெடுக்க முடியாமத் தடுமாறுதல் மற்றாக்களிட்ட இருந்து விலகியிருக்கிறது மரணம் பற்றிய எண்ணங்கள் இதெல்லாம் மனவழுத்தம் (depression ) ன்ர அறிகுறிகள். ஆண்களை விட இளம்பெண்கள் தான் 2 மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எங்கள் எல்லாருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில மனவழுத்தத்தைச் சந்திக்கிறம். படிபு்பு காதல் வேலை இப்பிடி எவ்வளவோ விசயங்களை ஒன்றாக சிந்திக்கேக்க இப்பிடியான எண்ணங்கள் தோன்றுவது இயல்புதான். அதால சும்மா பெரிய அறிவாளி மாதிரி கனக்க யோசிக்காமல் நல்ல படமொன்றைப் போட்டு பார். இல்லாட்டா எங்கட வீட்ட வா எங்கயாவது வெளில போட்டு வரலாம். நான் ஏன் இப்பிடியிருக்கிறன் எனக்கென்ன நடந்தது என்று கேட்டால் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். உனக்கு இப்பவாவது போன் பண்ணனும் என்று தோணிச்சே அதே பெரிய விசயம்.

கவி : ம்..நானும் எனக்கு depression ஓ என்டு நினச்சனான் தான் ..அதான் சந்தேகத்தில உனக்கு போன் பண்ணினான். விசரா இருக்கு.. நானிப்பிடியிருக்கிறது எனக்கே பிடிக்கேல்ல..lake shore க்குப் போவமா..

சுமி. 10 நிமிசத்தில வா வீட்டடிக்கு..நிறைய விசயங்கள் சொல்லோணும் உன்னட்ட. depression லயும் chronic depression ( cyclothymic & dysthymic) , bipolar disorder , Seasonal affective disorder(SAD) எண்டெல்லாமிருக்கு. ஒருவிதத்தில பார்த்தால் எல்லாரும் மனவழுத்தத்தோடதான் இருக்கிறம் போல..சரி போனை வைக்கிறன். 10 நிமிசத்தில ரெடியாகிடுவன். நீ வா.

தொடரும்.......

11 comments:

MyFriend said...

சாப்பிட தோணல..
படுத்த தூக்கம் வரல..
வேலையில கவனம் இல்ல..

இதெல்லாம் பார்த்தா நீங்க என்னமோ காதல்ல சிக்கிட்டீங்களோன்னு தோணுது... depressionன்னு மனசை போட்டு கொளப்பிக்காதீங்க. :-P

பாருங்க.. நம்ம பிரபாண்ணாக்கும் இந்த மாதிரி தோணுதாம். கேட்டா ஸ்வாதி மேலே இஷ்டம், ப்ரேமம்ன்னு சொல்லிட்டு திரியிறாரு.

*நாராயணா*நாராயணா*

சோமி said...

இது எல்லாருகும் வார வருத்தம்தான்..... பழகப் பழக நோய் எரிர்ப்பு சக்தி தானாகவே வந்திடும்..கவலைப் படாதேங்கோ...அனுபவம் உள்ள அண்ணன் சொல்லுறன் :)
0

ஆயில்யன் said...

//சொன்ன கவலை நித்திரை பசியின்மை வாழ்க்கை குறித்த பயம் முடிவெடுக்க முடியாமத் தடுமாறுதல் மற்றாக்களிட்ட இருந்து விலகியிருக்கிறது மரணம் பற்றிய எண்ணங்கள் இதெல்லாம் மனவழுத்தம் (depression ) ன்ர அறிகுறிகள். ஆண்களை விட இளம்பெண்கள் தான் 2 மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எங்கள் எல்லாருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில மனவழுத்தத்தைச் சந்திக்கிறம். படிபு்பு காதல் வேலை இப்பிடி எவ்வளவோ விசயங்களை ஒன்றாக சிந்திக்கேக்க இப்பிடியான எண்ணங்கள் தோன்றுவது இயல்புதான். அதால சும்மா பெரிய அறிவாளி மாதிரி கனக்க யோசிக்காமல் நல்ல படமொன்றைப் போட்டு பார். இல்லாட்டா எங்கட வீட்ட வா எங்கயாவது வெளில போட்டு வரலாம். நான் ஏன் இப்பிடியிருக்கிறன் எனக்கென்ன நடந்தது என்று கேட்டால் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். உனக்கு இப்பவாவது போன் பண்ணனும் என்று தோணிச்சே அதே பெரிய விசயம்.
///

தோழியின் அட்வைஸ் அருமை :)

தொடருங்கள்...!

ஆயில்யன் said...

//மை ஃபிரண்ட் ::. said...
சாப்பிட தோணல..
படுத்த தூக்கம் வரல..
வேலையில கவனம் இல்ல..

இதெல்லாம் பார்த்தா நீங்க என்னமோ காதல்ல சிக்கிட்டீங்களோன்னு தோணுது... depressionன்னு மனசை போட்டு கொளப்பிக்காதீங்க. :-P

பாருங்க.. நம்ம பிரபாண்ணாக்கும் இந்த மாதிரி தோணுதாம். கேட்டா ஸ்வாதி மேலே இஷ்டம், ப்ரேமம்ன்னு சொல்லிட்டு திரியிறாரு.

*நாராயணா*நாராயணா*

//

ஆஹா எனக்கு முன்னமே வந்து விட்டீர்களா!

சரி நான் நாராயணா நாராயணா மட்டும் ரிப்பிட்டிக்கிறேன் :))))

ஆயில்யன் said...

//நம்ம பிரபாண்ணாக்கும் இந்த மாதிரி தோணுதாம். கேட்டா ஸ்வாதி மேலே இஷ்டம், ப்ரேமம்ன்னு///



எந்த பிரபான்னு ஒரு சம்ஷியும் வந்து!!!????


”பாடி” அழைத்தேன்

நீயும் வந்து சொல்லு ப்ரெண்டு!!!!

கோபிநாத் said...

\\\தொடரும்.......\\

ம்ம்...நல்ல பதிவு..தொடருங்கள் ;)

சினேகிதி said...

பிரபாண்ணாக்கு ஸ்வாதி மேல பிரேமமா? அழகருக்குத் தெரியுமா இந்த விசயம்?

மங்களூர் சிவா said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...

பாருங்க.. நம்ம பிரபாண்ணாக்கும் இந்த மாதிரி தோணுதாம். கேட்டா ஸ்வாதி மேலே இஷ்டம், ப்ரேமம்ன்னு சொல்லிட்டு திரியிறாரு.

*நாராயணா*நாராயணா*
//

ஆஹா எனக்கு எதிரிங்க ஜாஸ்தியாகீட்டே போறாங்களே!!
:)))))))))))))))

மங்களூர் சிவா said...

//
சாப்பிட தோணல..
படுத்த தூக்கம் வரல..
வேலையில கவனம் இல்ல..
//

bad cholesterol ஜாஸ்தியாயிட்டா இப்பிடி எல்லாம் ஆகுமாம் சாக்கிரதை!!

:))))))))))

கொழுவி said...

சாப்பிட தோணல..
படுத்த தூக்கம் வரல..
வேலையில கவனம் இல்ல..//

என்னத்த சொல்றது - சோமி சொல்ற மாதிரி ரண்டாம்மூண்டாம் வாட்டிகளில இதெல்லாம் சகஜமாயிடும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடிடும்ணேன்.

Anonymous said...

Dysthymic Disorder is characterized by chronic depression, but with less severity than a major depression. The essential symptom for dysthymic disorder is an almost daily depressed mood for at least two years, but without the necessary criteria for a major depression. Low energy, sleep or appetite disturbances and low self-esteem are usually part of the clinical picture as well. http://www.xanax-effects.com/