Custom Search

Monday, January 15, 2007

பொங்கலோ பொங்கல்

தாயகப்பறவைகள் பொங்கல் சிறப்பு மலருக்காக - சிநேகிதி-

தாயகத்திலிருந்த போது பொங்கல் எப்போது வரும் எத்தனை புத்தாடைகளணியலாம் எத்தனை வீட்டுப் பொங்கலை ருசி பார்க்கலாம் என்று எதிர்பார்ப்புகள் எத்தனை.அம்மாவோட பாட்டியோட பொங்கல் நாள் பார்த்து வாய்காட்டி ஏதாவது மண்டகப்படி வாங்கினாத்தான் அந்த வருசப் பொங்கலே கொண்டாடின மாதிரியிருக்கும்.

ஆனால் புலம் பெயர்ந்து வாழும் சூழலில் பொங்கல் அதுபாட்டுக்கு வந்த சுவடு தெரியாமல் வந்து போகுது.சாணி வாங்கிக்கொண்டு வந்து முத்தத்தை முதல் நாளே மெழுகி வைக்கத்தேவையில்லை.மெழுகி வைச்ச வட்டத்துக்குள் என்ன விளையாட்டு என்று பாட்டிமாரிட்ட திட்டுவாங்கத் தேவையில்லை.அதிகாலை எழும்பி கொஞ்சம் மஞ்சள்ல கொஞ்சம் அரிசிமாவில கோலம் போடத் தேவையில்லை.பொங்கல் பொதி என்று பொங்கலுக்குத் தேiவாயான எல்லாப் பொருட்களுமடங்கிய பொதியை வாங்கிக் கொண்டுவந்து நாங்களும் தமிழர்கள் பொங்கல் என்றொரு பண்டிகை எங்களுக்கு இருக்கு என்றதுக்காகத்தான் பொங்கல் பொங்கி சாப்பிட்டு விட்டு படிக்கச் செல்வோர் பாடசாலைக்கும் மற்றவர்கள் வேலைக்கும் சென்று வர நேரம் சரியாகயிருக்கும்.

நேரமும் வசதியும் இருப்போர்இ தங்கள் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களோடு இருப்பவர்கள் பொங்கல் என்றால் என்ன அதை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று தெரிந்து சந்தோசமாகக் கொண்டாடுகின்றார்கள்.

சங்க காலத்திலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது ஆனாலும் எப்போது இந்தப் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வழக்கம் எப்போது தொடங்கியதென்று எங்கும் அறுதியாகச் சொல்லப்படவில்லை.தைநீராடும் வழக்கம் சங்க காலத்திலிருந்து பின்பற்றப்படுவதால் பொங்கலும் சங்க காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சங்க காலத்தில் வாழ்ந்த கன்னிப் பெண்கள் மார்கழி தொடக்கம் அம்மனுக்கு விரதம் இருந்து தை மாதத்தில் விரதத்தை முடித்துக்கொள்வார்;கள்.இவ்வாறு கன்னிப் பெண்கள் மண்ணினால் செய்யப்பட்ட அம்மன் சிலையை வழிபட்டு வந்தால் தைமாதத்தில் விவசாயத்துக்குத் தேiவாயான மழையை அதிகமாகப் பொழியும் என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.

பல்லவர் காலத்தில் பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான தைநீராடுதல் முக்கியமாகக் கருதப்பட்டிருக்கின்றது.ஆண்டாள் பாடிய திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளின் திருவெம்பாவை போன்றவற்றில் தைநீராடுதல் பற்றிய பல குறிப்புக்களுண்டு.

வீரராகவர் கோயிலிலுள்ள ஏடொன்றில் குலொத்துங்க சோழ மன்னன் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கென தன் நிலங்களைக் கோயில்களுக்குப் பரிசாக வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் மூன்றுநாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது போகிப்பண்டிகையோடு ஆரம்பமாகிறது.அறுவடைக்கு முதல் நிகழும் சிறப்புப் ப+சை உழுவதற்கு அறுவடைக்குப் பயன்படுத்தும் கருவிகள் இயந்திரங்கள் போன்றவற்றைச் சுத்தம்செய்து சந்தனமிடல் மற்றும் தேவையற்ற பண்டங்களை சுற்றுப்புறச்சூழலிலிருந்து அப்புறப்படுத்துதல் போன்றன போகிப்பண்டிகையின் முக்கிய அம்சங்கள்.அடுத்த நாள் உழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.பொங்கல் பொங்கி விவசாயத்துக்கு உதவி செய்யும் சூரியனுக்குப் படைப்பதும் பின்னர் சூரியனுக்குப் படைத்த பொங்கலை அடுத்த நாள் மாட்டுப் பொங்கலன்று மாட்டுக்குக் கொடுப்பதும் வழக்கம்.

மாட்டுப்பொங்கலன்று அநேகமான கிராமங்களில் மணிகட்டப்பட்ட மாடுகள் குளிப்பாட்டப்பட்டு கொம்புகளுக்கு வர்ணம் பூசப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு ஜில் ஜில் என்று ஒலியெழுப்பிக்கொண்டு கம்பீரமாய்த் திரிவது கண்கொள்ளாக்காட்டிசிதான்.

இந்த மாடுகளைப்பற்றி ஒரு சுவாரிசயமான கதையுண்டு.ஓரு நாள் சிவபெருமான் தன் வாகனமாகிய எருமைக்கடாவிடம் ஒரு வேலை செய்யச் சொன்னாராம். “நீ ப+மிக்குச் சென்று அங்கு வாழும் மக்களை எண்ணெய் தேய்த்துத் தினமும் நீராடி மாதத்தில் ஒருமுறை உணவருந்தச் சொல்” என்று சொன்னாராம்.ப+மிக்கு வந்த எருமைக்கடா தவறுதலாகத் தினமும் உணவருந்தி மாதத்திலொருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்குமாறு சொல்லிவிட்டதாம்.இதனால் கோபம் கொண்ட சிவன் தினமும் உணவருந்துவதற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கு உதவியாக நீ ப+மியிலேயே தங்கி நிலங்களை உழுதுகொண்டு இருக்கக் கடவாய் என்று சபித்து விட்டாராம்.

நல்ல கதை என்ன? ம் வாசிச்சது காணும் போய் பொங்கல் வேலையைப் பாருங்கோ.

ம் ம் எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே.

-பொங்கல் வாழ்த்துக்களுடன் சிநேகிதி-

14 comments:

டிசே தமிழன் said...

பொங்கல் வாழ்த்து சிநேகிதி.
......
உங்களை வசந்தனும் சயந்தனும் - வசந்தனின் பதிவில் - கடித்துக்கொண்டிருக்கின்றார்கள். பதிலடி சுடச்சுடக் கொடுக்கவும். மேலதிக உதவி தேவையென்றால் நானும் வருகின்றேன் :-).

Anonymous said...

பொங்கலோ பொங்கல்!

இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

சினேகிதி!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
யோகன் பாரிஸ்

சினேகிதி said...

நன்றி டிசே ஆதிபகவன் யோகன் பாரிஸ்.உங்களுக்கும் மற்றும் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

டிசே பதிலடி சுடச்சுட கொடுத்திருக்கு. நீர் என்ர சார்பில போய் நல்லா நறுக்கென்று நாலு கேள்வி கேளும்.

மலைநாடான் said...

சிநேகிதி!

பொங்கல் வாழ்த்துக்கள். மேலதிகமாக உங்களுக்கு நான் நன்றியும் சொல்ல வேண்டும். ஏனெனில் உங்கள் தொடர்பாடலினால்,இராமேஸ்வரனுடன் தொடர்பு கிடைத்தது. மிக்க நன்றி.

சினேகிதி said...

நன்றி மலைநாடான் உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

வசந்தன்(Vasanthan) said...

டி.சே,
கோள்மூட்டி எண்ட பட்டத்தை ஆருக்குக் குடுக்கலாமெண்டு யோசிச்சுக்கொண்டிருந்தன்.
நீர் மாட்டினீர்.
இப்பொங்கல் திருநாளிலிருந்து நீர் கோள்மூட்டி என்று அழைக்கப்படுவீராக.

அடுத்த குரற்பதிவில் உம்மை இழுத்து நாலு சாத்துச்சாத்திறன் பாரும்.

சினேகிதி said...

பொங்கல் பதிவில வந்து சாத்துறன் கீத்திறன் என்று என்ன கதையிது ஆ ? பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்லுவம் என்றில்லை....சா சா என்ன பழக்கமோ தெரியேல்லை.

கானா பிரபா said...

காலம் கடந்த பொங்கல் வாழ்த்துக்கள் சினேகிதி ;-)
பொங்கல் பதிவும் இனித்தது. இடையே சில எழுத்துப் பிழைகள் உள்ளன. சரி பார்க்கவும்.

த.அகிலன் said...

ம் வணக்கம் அக்கா இன்றுதான் முதல் முதலாக உங்கள் வலைப்பக்கம் வந்தேன் அந்தப்பெருமை வசந்தனையும் சயந்தனையும் சாரும் நான் வலைபதிய மிகவும் பிந்தி வந்ததால எல்லாரையும் எனக்கு தெரியாது தானே.

ஊர்ப்பொங்கலைப் பற்றி எழுதியிருக்கிறியள் நல்லாயிருக்கு.
அன்புடன்
த.அகிலன்

டிசே தமிழன் said...

அண்ணை வசந்தன், நீர் வாலுள்ள பட்டமோ வாலில்லாது விண்ணில் ஏறும் பட்டமோ எதுவென்றாலும் தாரும்; ஆனால் எங்கடை ஊர்க்காரர்களை நாங்கள் எதற்கெண்டாலும் விட்டுக்கொடுக்கமாட்டோம் பாரும் :-).

U.P.Tharsan said...

//கானா பிரபா said...
காலம் கடந்த பொங்கல் வாழ்த்துக்கள் சினேகிதி ;-)
பொங்கல் பதிவும் இனித்தது. இடையே சில எழுத்துப் பிழைகள் உள்ளன. சரி பார்க்கவும்.//


அட இங்கையுமா!!! :-))

சினேகிதி said...

நன்றி பிரபாண்ணா.உங்களுக்கும் காலம் கடந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
பாமினில ரைப் பண்ணிட்டு யுனிகோட்டுக்கு மாத்தும்போது ஏற்பட்ட குழப்பங்கள்தான் இடையிடையே வந்தவர்கள் "இ" போன்றவர்கள். நீங்கள் சுட்டிக்காட்டியதில் தர்சன் என்றவர் பயங்கர சந்தோசத்தில இருக்கிறார்.

சினேகிதி said...

வணக்கம் அகிலன். நல்வரவு.அக்காவா??? அதுசரி நீங்கள் மட்டும் இருபதிகளின் தொடக்கத்தில் நான் மட்டும் என்ன இருபதின் முடிவிலா நிக்கிறன்?

நன்றி டிசே என்ர எதிரிகளை இனம் காட்டியதற்கு :-)