Custom Search

Tuesday, August 01, 2006

இணையத்தள அறிமுகம் - "தாயகப்பறைவைகள்"

இன்றைய இணையில்லா இணைய தொழில் நுட்ப இயக்கத்திற்கு ஏற்றவகையில் உலகின் மற்றைய மொழிகளுக்கும் சமமாய் சற்றும் குறைவில்லாவகையில் எம் தாய் மொழியாம் தமிழில் பெண்களின் உரிமைக்கான குரலை உரத்து சொல்லும் "தாயகப்பறைவைகள்" என்னும் மாத இதழாக இந்த இணைய இதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பெண்களின் பிரச்சனை மட்டுமா?? ஆண்களின் பிரச்சனைகளையும் அம்பலப்படுத்தத்தவும் தயங்க மாட்டோம். அவர்களிற்குமாய் எங்கள் குரல் ஓங்கியே ஒலிக்கும். பலநாட் கனவு சிலநாள் முயற்சி கண்முன்னே தாயகப்பறவைகளாக இணையவானில் பறக்க தாயாரான வண்ணம் இருக்கிறது.

வாசகரின் தேவையறிந்து, ஒரு செய்தி ஊடகம் என்ற கோட்டுக்குள் மட்டும் இன்றி உலக நடப்புகள், விளையாட்டுகள், கலாசாரம், விஞ்ஞான தொழிநுட்பம், என பல்வேறு பரிமாணங்களை எமது மாத இதழ் தாங்கி வருகிறது. அதுமட்டுமல்லாது தமிழ் தெரியாதோரும் பயன்படுத்தும் வகையில் காலப்போக்கில் பல்வேறு மொழிகளிலும் எமது தாயகப்பறவைகள் பறந்து வர உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள வண்ணம் உள்ளன.

இணைய உலகம் ஒரு சமுத்திரம் அதில் சிறு துளியாய் இணைகிறது எங்கள் தாயகப்பறவைகள். எங்கெங்கோ வெவ்வேறு கண்டங்களில் வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு பறவைக்கூட்டம் தாயகப்பறவைகள். கனவுகளைய்க் களைந்து கற்பனைகள் கலைத்து நியம் தேடும் எங்களோடு கூட பயணிக்கவும் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவும். இளைய முதிய எழுத்தாளப் பெருமக்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம்.

இணையத்தள முகவரி:- www.thayakaparavaikal.com

6 comments:

U.P.Tharsan said...

தாயகப்பறவை இணையத்தை நீங்களும் நெறிப்படுத்துகிறீரா தங்கையே? பல பயனுள்ள விடயங்களை காணக்கூடியதாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

Chandravathanaa said...

சினேகிதி.
உங்கள் முயற்சி நல்ல பலனையும் வெற்றியையும் தர வாழ்த்துக்கள்.

வணக்கத்துடன் said...

//பெண்களின் பிரச்சனை மட்டுமா?? ஆண்களின் பிரச்சனைகளையும் அம்பலப்படுத்தத்தவும் தயங்க மாட்டோம். //

வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்!

சோழியான் said...

தாயகப்பறவைகள் உலகெங்கும் இறக்கை கட்டிப் பறக்க வாழ்த்துக்கள். :))

கானா பிரபா said...

அருமையான முயற்சி, சிறு துளி பெருவெள்ளம். வாழ்த்துக்கள் என்றென்றும்.

மலைநாடான் said...

சிநேகிதி!

உங்களதும், உங்களோடினைந்தவர்களினதும், முயற்சிக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.