Custom Search

Friday, December 22, 2006

அழைத்தால் மௌனம் அதுதான் தருணம்

கலாபக்காதலன் படத்திற்கு இசையமைத்த நிருவின் மூங்கில் நிலா (2003) என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற பல பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது “அழைத்தால் மௌனம்” என்ற பாடல்.உன்னி கிருஸ்ணனின் குரலா அறிவுமதியின் வரிகளா அல்லது நிருவின் இசையா எது என்னைக் கவர்ந்ததென்றறியேன்.ஒருவேளை மூன்றும் சேர்ந்து தந்த மயக்கமோ?

இந்தப்பாடல் தவிர மூங்கில் நிலாவில் இடம்பெற்ற இன்னும் ஐந்து பாடல்கள் எனக்குப்பிடித்தபாடல்களின் பட்டியலில் உள்ளன.அந்தப்பாடல்களையும அழைத்தால் மௌனம் பாடலின் வரிகளையும் இன்று தருகிறேன்.தொடர்ந்து ஏனைய பாடல் வரிகளையும் தருகிறேன். பல காலமாக எழுதவேண்டும் நினைத்த இந்தப்பதிவு இன்றுதான் சாத்தியமாகியுள்ளது.

பாடல்களைக் கேட்க : http://www.raaga.com/channels/tamil/movie/T0000956.html

(1) “திருடா திருடா என்னைத் திருடடா திருடா இதழால் விரல் நுனிகளால் என்னைச் சிற்பமாக்கடா அழகா” -சாரங்கன்

(2) “காதல் போர்க்களம்தானா பார்வை ஆயதம்தானா அழகே இதழ் கொண்டு யுத்தம் செய்வோமா” -சுதன்ராஜ்;

(3) “என் சுவாசம் சேரும் வழியால் புயலாய் வந்தவளே” -சதாபிரணவன்

(4) “பெண்ணே போகாதே இரவை எரிக்காதே நிலவைச் சாம்பலாக்காதே” -பழனிபாரதி ( தமிழ்மணத்தில் எழுதுகின்ற பழனிபாரதியா இவர்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

(5) “புல் நுனியில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளியில் கரைந்தேன்” -பாவனா


அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம்

திடும் திடும் திடுமென உயிர் விழிக்கும் - அது
கனவுக்குள் வானவில் தொட அழைக்கும்
திடும் திடும் திடுமென உயிர் விழிக்கும் - அது
கனவுக்குள் வானவில் தொட அழைக்கும்
இது முகங்களின்(?) சடுகுடு விளையாட்டு - இருகுயில்களின் மெல்லிய இசைப் பாட்டு
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)

விடும் விடும் விடுமென பயம் தடுக்கும் - அது
உயிருக்குள் மூழ்கிட சுழல் பிறக்கும் (3)
இது துணிகளின் கடலென்னும் பசி பாட்டு???
இனி மழையினில் நெருப்பினைக் குளிப்பாட்டு???

அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் .

2 comments:

U.P.Tharsan said...

வாவ்! இது எனக்கும் பிடித்த அல்பப்பாடல். ஆனால் ஒரு சின்னக்குறை. அந்த பெண்குரலை கொஞ்சம் தோர்வுசெய்து எடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம். எனினும் அருமையான பாடல்கள்.. பாட்டுவரிகளை சுட நான் ரெடி எழுத நீங்கள் ரெடியா?

சினேகிதி said...

பாடல்வரிகளைச் சுடுறதிலயே இருக்கிறீங்கிளே தர்சன் "அழைத்தால் மௌனம்" பாடல்வரிகளி சில தெளிவில்லாததால் கேள்விக்குறி போட்டிருந்தனே கவனிக்கவில்லையா? அதைத் திருத்திந் தந்தால்தான் பாடல்வரிகளைச் சுடமுடியும்.