Genital Wart
போன இதழில் Bartholin gland cyst பற்றி பார்த்தோம். இந்த இதழில் ஜெனிற்றல் வார்ட் அல்லது condyloma என்று அழைக்கப்படுகின்ற தகாத உடலுறவினால் ஏற்படும் தொற்றுநோய் பற்றி பார்ப்போம்.
பல விநோதங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நம்முடலில் நூற்றுக்கும் அதிகமான பாப்பிலோமாவைரஸ்கள் (papillomavirus) உள்ளன. தோல் சம்பந்தமான நோய்களோடு தொடர்புடைய இந்த வைரஸ்களில் கிட்டத்தட்ட 30 வைரஸ்கள் உடலுறவின்போதே பரப்பப்படுகின்றன. 90 % கருப்பைப் புற்றுநோய்க்குக் கூட இந்த பாப்பிலோமாவைரஸ்களே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது Oral, Genital மற்றும் Anal செக்ஸ் இன் போது பரவும் papillomavirus(6, 11, 30, 42, 43, 44, 45, 51, 52, & 54) உருவாக்கும் வீக்கம் அல்லது அழற்சியே ஜெனிற்றல் வாட்.
பெண்ணின் பிறப்புறுப்பின் வாசலில் நுண்ணிய வீக்கமாகத் தொடங்கிப் பின்பு பிறப்புறுப்பைச் சுற்றியும் குதத்திலும் மிகப்பெரிய திரட்சியாகப் பரவத்தொடங்கும். ஆண்களுக்கும் பிறப்புறுப்பின் நுனியில் தொடங்கிப் பின்னர் பீனஸ் சுவர்களிலும் குதத்தைச் சுற்றியும் பரவும் ஆனால் ஜெனிற்றல் வார்ட்டின் அறிகுறிகள் ஆண்களில் குறைவாகவே காணப்படும். Oral செக்ஸ் இல் ஈடுபடுவோருக்கு இந்த ஜெனிற்றல் வார்ட் வாயில் கூட வரலாம். Condom அணிந்த பாதுகாப்பான உடலுறவினில் கூட இந்த papillomavirus தொற்றக்கூடும். இந்த ஜெனிற்றல் வார்ட்டை உருவாக்கும் வைரஸ்கள் ஊடுருவிப் பல மாதங்கள் வருடங்களுக்குப் பிறகு கூட திரட்சிகளை உருவாக்கக்கூடும்.........
தொடர்ந்து வாசிக்க தாயகப்பறவைகள் சரணாலயத்துக்கு வாருங்கள்... :-)
http://www.thayakaparavaikal.com/nalamnadi.php
1 comments:
கட்டுப்பாடு இல்லையென்றால்
கட்டாயம் வரும் என்கிறீகள் சரியா!
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை condyloma கொடுக்கும்!
மனிதன் நன்றியுள்ளவனாக இருக்கவேண்டும் என்பதற்காக
'நாய்' கள் போன்றா நடப்பது!
வருமுன் காக்க வேண்டும், வந்துவிட்டால் எங்கே பார்ப்பது! சகிக்காது....அய்யே...
நல்ல தகவல் சினேகிதியே...நன்றி!
Post a Comment