Saturday, February 14, 2009

அவுஸ்ரேலிய குழந்தை வைத்திய நிபுணரின் கிளிநொச்சி அனுபவம்

SBS க்கு Dr Whitehall வழங்கிய செவ்வி : போர் நிறுத்தக் காலத்தில் கிளிநொச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தான் சென்றிருந்ததாகவும் 2-3 வாரங்களின் பின்னர் அம்மாணவர்கள் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவினர் என்று தெரிய வந்ததாகவும் இருந்தாலும் தன் பணியை தான் செய்து முடித்துவிட்டுத்தான் அவுஸ்ரேலியா திரும்பியிருக்கிறார். செவ்வியைக் கேட்க.

ஈழத்து மண்ணில் இந்திய சாத்தான் படை

தற்போது இலங்கையில் நடந்துவரும் திட்டமிட்ட இன அழிப்புப் போரில் தினமும் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி மக்கள் கொத்துக் கொத்தாக கொத்தணிக்குண்டுகளாலும் பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் தடுப்பு முகாம்களில் வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். புதிய ஆண்டு பிறந்து 2 மாத காலத்தில் 1500 வரையிலான மக்கள் அநிநாயமாகக் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே கை கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தில் தமிழகத்திலிருந்து எழும் ஆதரவுக் குரல்கள் புலம்பெயர் மக்களாகிய எங்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆனால் அதே அளவுக்கு ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட நிகழ்வு தொடர்பாக ஈழத்தமிழ் மக்கள் ஒருவித வெறுப்பையும் நீங்கள் (ஒரு பகுதியினர்) காட்டத் தவறியதில்லை. தினம் தினம் எம்மக்கள் கொல்லப்பட்டு வன்புணரப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்திய மக்களிடமிருந்து ஒரு சிறிய மாற்றமாவது ஏற்படாத என்ற நப்பாசையில் உங்களனைவரையும் இந்தப் புத்தகத்தைச் சற்றே புரட்டிப் பார்க்குமாறு கேக்கிறேன்.

அமைதிப்படை என்ற பேரில் இலங்கைக்கு வந்த இந்திய சாத்தான் படைகள் செய்த அட்டூழியங்களைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். ராஜீவ் காந்தியை யார் கொலை செய்தார்கள்? யார் யாருக்கு அதில் பங்குள்ளது? அக் கொலை சரியா பிழையா? - இந்தக் கேள்விகள் எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, எங்கள் மக்கள் இந்திய சாத்தான் படையினரால் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தார்கள் என்று பாருங்கள். தற்போது மீண்டும் அந்தக்கொடுமைகளை செய்த இலங்கை அரசுக்கு உதவி புரிகிறது இந்திய அரசாங்கம். ஈழத்தமிழர் பிரச்சனையை எடுத்தாலே உடனே ராஜீவ்காந்தி கொலையை முன்னிறுத்துகிறார்கள். இதை தொடர்ந்து கவனிக்கிற போது, ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் பேசப்படக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் உதவக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படுகிறபோது ராஜீவ்காந்தி கொலை கண்ணுக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவும் - யாரோ திட்டமிட்டு நீண்டகால அரசியல் இலாபத்தோடு இதைச் செய்திருக்கிறார்கள் என்றே உணர முடிகிறது.

அது ஒரு புறமிருக்கட்டும்.

ஆனால், அன்று அமைதிப்படை என்கிற பேரில் ஈழத்தமிழர் மண்ணில் கால் பதித்து,
அப்பாவி மக்களைப் படுகொலை செய்தும்,பெண்களை பாலியல்வன்னுமுறைக்குள்ளாக்கியும் பல்வேறு பாதகச் செயல்களைச் செய்த இந்திய சாத்தான் படை, இன்று இலங்கை இராணுவத்தின் பின்னாலிருந்து மறுபடியும் தனது சாத்தான் குணத்தைக் காட்டுகிறது. இந்திய/தமிழக நண்பர்களே, உறவுகளே, ஊடகங்களே நாம் பழையதை நினைவுபடுத்தி மீண்டும் மீண்டும் எமக்குள் உள்ள உறவைக் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். நாம் மீண்டும் மீண்டும் எல்லோராலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


* flash:
http://ebook.yarl.com/ipkf/

* pdf zipped:
Part 1
http://www.mediafire.com/?emj0zigyjyu

Part 2
http://www.mediafire.com/?i5tzkzyjfny

Part 3
http://www.mediafire.com/?tz1mvzdgggz

* pdf:
Part 1
http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf

Part 2
http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf

Part 3
http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf

Wednesday, February 04, 2009

இலங்கைப் பிரச்சனை பற்றி கனடியப் பாராளுமன்றத்தில் அவசர விவாதம்

இன்று ரொரன்டோ ஒட்டாவா போன்ற நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்து முடிந்து நான் வீட்டுக்கு வந்து சேரும் முன்னர் "பாராளுமன்றத்தில் எங்கட பிரச்சனை பற்றி அவசர விவாதம் நடந்துகொண்டிருக்கிறது ரீவியைப் போடு "என்ற மாதிரியான தொலைபேசி அழைப்புகள் வந்தன. நான் வீட்ட வந்து விவாதத்தின் கடைசி 45 நிமிடங்களைத்தான் பாரக்க முடிந்தது. அதை ஒலிப்பதிவு செய்திருக்கிறேன் நீங்களும் கேளுங்கள்.

* ஆரம்பத்தில் சத்தம் கொஞ்சம் குறைவா இருக்கம். மடிக்கணனியில் அவ்வளவுதான் சத்தம். பின்னர் portable speaker போட்டு ஒலிப்பதிவு செய்தேன் அதால கேப்பது தெளிவா இருக்கும். இடையில் நான் அப்பா கதைக்கிறது வந்தால் தயவுசெய்து பொறுத்தருளவும்.


eelam in parliment.mp3 -