Custom Search

Saturday, March 10, 2007

பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் என்ன சிறுவர்கள் கூட...

இப்பத்தான் பெட்டையின் வலைப்பதிவில் அமௌனன் எழுதிய " வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…"படிக்க வேண்டியதாயிற்று..ஏன்டா வாசிச்சம் என்றாயிற்று ஆனால் என்ன மதி அக்கா சொல்றமாதிரி கோவத்தையும் ஆத்திரத்தையும் வச்சு என்னத்த செய்யிறது. இதைப்போன்றதொரு இன்னொரு அவலம் தான் நான் இப்ப சொல்லப்போறதும்.இதுகளை எல்லாம் மற்றாக்களுக்குச் சொல்றதால பெரிசா ஒன்றும் நடக்கப்போறேல்லத்தான் இருந்தாலும் மனசுக்குள்ள இருக்கிறதை யாரிட்டாயவது சொன்னால் ஏதோ ஒரு சுமை குறைஞ்ச மாதிரித்தானே.

மிருனாக்கு இப்பத்தான் 13 வயது ஆனால் அதுக்குள்ள அவளுடைய வாழ்க்கையைச் சீரழிக்க சில ஆமிக்காரர்களும் ஒரு தமிழ்த்துரொகியும் கங்கணம் கட்டிக்கொண்டு திரியுறாங்கள். வெளிநாட்டில இருக்கிற பிள்ளையள் தான் வயதுக்கு மீறிய வளர்ச்சியில் 12 வயதிலயே இருபது வயது மாதிரித் தோற்றமளிக்கிறார்கள் என்றால் ஊரிலுள்ள பிள்ளைகளிலும் சிலருக்கு வயதுக்கு மீறிய வளர்ச்சியிருக்கும்.மிருனாவும் அப்படித்தான் துறுதுறு என்று எப்பவும் வாயடிச்சுக்கொண்டு திரிவாள் அந்தத்துடுக்குத்தனம் தான் ஒரு துரொகியை ஈர்த்திருக்கிறது.

அந்தத்துரொகி சும்மா லேசுப்பட்டவனல்ல.ஏற்கனவே எங்கள் குடும்பத்திலுள்ள ஒருவரைக் கேவலம் பத்தாயிரம் ரூபாவுக்காகக் காட்டிக்கொடுத்து எமனானவன். ஆமிக்காரருடைய சப்போட் இருக்கிற ஒரே காரணத்தால மிருனா பாடசாலை செல்லும் நேரம் ரியூசனுக்குச் செல்லும் நேரம் என அவளைப் பின் தொடர்ந்தான்.ஆக்கினை தாங்காமல் மிருனா தந்தையிடம் சொல்லிவிட்டது அந்தத் துரோகிக்கு வசதியாகப் போய்விட்டது.ஆமிக்காரர் கேட்டுக்கேள்வியின்றி எங்களுடைய வளவுக்குள் இருக்கிற கிணத்தடியில் வந்து குளிக்கத்தொடங்கினாங்கள் கூடவே அந்தத் துரோகியும்.எப்படியோ யாரோ சின்னப்பிள்ளைகளிடம் கேட்டு மிருனாவின் பிறந்தநாளை அறிந்துகொண்டு கேக் ம் வாங்கிக்கொண்டு தைரியமாக வீடுவரைக்கும் வந்து பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னான்.

ஊர்ப்பெரயவர்கள் சிலரின் ஆலோசனைப்படி அந்தத்துரோகியின் பெற்றோரிடம் முறையிட்டும் எந்தப்பலனுமில்லை.தூரத்துறவினர் ஒருவரையும் அந்தத்துரொகி காட்டிக்கொடுத்ததுதான் மிச்சம்.

மிருனாவைக் கண்ணும் கருத்துமாகக் காப்பதே பெற்றோருக்கும் உற்றோருக்கும் தலையாய கடமையாகப் போக அவர்களுடைய அன்றாட வாழ்க்கையே ஆட்டம் காணத்தொடங்கியதால் இனிமேலும் அங்கிருப்பது நல்லதல்ல என்பதால் தற்போது மிருனாவும் குடும்பத்தினரும் ஊரைவிட்டுப் போய்விட்டார்கள்.ஓரளவு பணவசதியுள்ளவர்களுக்குத் தம்மை பாதுகாக்கும் வல்லமை கொஞ்சம் அதிகமாகவேயுண்டு மற்றவர்களுக்கு??????

இதுதான் எங்களுக்குச் சொல்லப்பட்ட உண்மை இதில் எதைக் குறைத்துச் சொன்னார்களோ நானறியேன். தெரிந்தது இந்தப்பிரச்சனை தெரியாமல் எத்தனையோ???? இன்று பொடிச்சியின் பதிவைப் படித்ததும் தான் தெரிந்துகொண்டேன் பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் என்ன சிறுவர்கள் கூட இந்த வெறியர்களின் பிடியில் விதி விலக்கல்ல என்று.

5 comments:

தமிழ்நதி said...

இதே போன்ற சாயலுடைய கதை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததாம். அதாவது 13 வயதேயான ஒரு சிறுமியில் ராஜா ஆசைப்பட்டு அவளைத் தனது வீட்டுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டாராம். அந்த ஏழைக்குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இரவிரவாக அமர்ந்து அழுதுவிட்டு ஒரு பெரிய கிடங்கு வெட்டி அந்தச் சிறுபெண்ணை உயிரோடு புதைத்துவிட்டு விடிவதற்கிடையில் அந்த ஊரைவிட்டே புறப்பட்டுப் போய்விட்டார்களாம். பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிவந்து அவளைப் புதைத்த இடத்தில் கோயில் கட்டி வணங்கினார்களாம். இது அண்மையில் எனது வீட்டிற்கு வந்திருந்த நண்பர்களில் ஒருவர் சொன்ன கதை. இதே கதையை எங்கோ வாசித்த ஞாபகமும்.

ஆதிக்க சக்திகளுக்கு சிறு பெண்ணென்ன... சிறுவன் என்ன எல்லோரையும் உடலாகப் பார்த்துப் பழகிப்போய்விட்டது சிநேகிதி.

கானா பிரபா said...

சுடுகின்ற நிஜம்

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இத மாதிரி கிளற கிளற பல கதைகள் வந்து கொண்டே இருக்கும். யாழ்குடா நாடு இரணுவ கட்டுபாட்டுக்குள் வந்த பின் சின்னபின்னமாய் போனது தான் மிச்சம்.

நீங்கள் சொன்ன கதை ஒரு சிறுமி பற்றியது. காட்டி கொடுத்தல், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு பயந்த்து எத்தனை குடும்பங்கள் வெளியேறின :(

Jeyapalan said...

// ஓரளவு பணவசதியுள்ளவர்களுக்குத் தம்மை பாதுகாக்கும் வல்லமை கொஞ்சம் அதிகமாகவேயுண்டு மற்றவர்களுக்கு??????
//
வலிக்கும் வார்த்தைகள்.

தமிழ்நதி சொல்வது போல் ஒரு தமிழ்ப் படத்திலும் வந்தது. ஐந்து அண்ணன்களும் தங்கையும், வெள்ளைக்காரக் கலக்டரும்.

சினேகிதி said...

\\4 Comments - Show Original Post
Collapse comments


தமிழ்நதி said...
இதே போன்ற சாயலுடைய கதை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததாம். அதாவது 13 வயதேயான ஒரு சிறுமியில் ராஜா ஆசைப்பட்டு அவளைத் தனது வீட்டுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டாராம்.
\\

ம் ஜெயபால் சொன்னது போல நானும் படத்தில்தான் அந்தக்கதையப் பார்த்தேன். விசில் படத்தில் நாகம்மா என்ற அந்தப்பெண்ணை அண்ணன்மார்கள் உயிருடன் புதைப்பார்கள்.