Custom Search
Showing posts with label என் பார்வையில். Show all posts
Showing posts with label என் பார்வையில். Show all posts

Sunday, September 13, 2009

விரதம், நோன்பு , பசி , சாப்பாடு

கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுண்ட கஞ்சி,சுட்ட வாழை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரித்தண்ணி, இளநீ, இராத்தொக்கு, உப்புகண்டம், பழைய சோறு, டிகிரி காப்பி, இஞ்சி மரப்பா, கடலை முட்டாய், கமர்கட்டு, வெள்ளரிக்காய், எலந்தப்பழம், குச்சி ஐசு, கோலி சோடா, முறுக்கு, பஞ்சு முட்டாய், கரும்பு சாறு, மொளகா பஜ்ஜி, எள்ளு வடை, பொரி உருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத் தண்ணி, ஜவ்வு மிட்டாய், கீர வடை, கிர்ணிபழம், அவிச்ச முட்டை, ஆஃபாயில்,பள்ளிமுட்டாய், பப்பாளி, பொகையில, போதைபாக்கு, புண்ணாக்கு..இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ :)

இதெல்லாத்தையும் விட மக்டோனல்ட்ஸ் KFC , Taco , Wendy's , Arby's ,Harvey's , Mr Sub , Subway தவிர Pizza Pizza , Piza Nova , Piza Hut , Dominos இப்பிடி 1008 சாப்பாட்டுக்கடைகள் போற வழியெல்லாம் இருக்கேக்க ஒரு மனுசரால எப்பிடி விடிய 5 மணில இருந்து பின்னேரம் 7.40 வரைக்கும் சாப்பிடாம இருக்கலாம்??

வேலையால ஒரு பயிற்சிப் பட்டறைக்குப் போயிருந்தோம் ஒரு இடத்துக்கு. காலைல 9 மணில இருந்து பின்னேரம் 6 மணி வரைக்கும் 3 பட்டறைகள். அவர்கள் கொண்டு வந்து வைத்திருந்த சாப்பாட்டை நாங்கள் வெள்ளனவே சாப்பிட்டு முடிச்சிட்டம். பசியெடுத்த கொஞ்சாக்கள் மதிய இடைவேளைக்கு வெளில சாப்பிடுவம் என்று வெளிக்கிட்டம். எங்களுடன் ஒரு பெங்காலிப் பெடியனும் வந்திருந்தான். அவன் தான் நோன்பிருக்கிறன் சாப்பிட மாட்டன் என்டான். சாப்பிடாட்ட அப்ப ஏதும் வேண்டிக் குடியெண்டால் அதுவும் கூடாதெண்டான். எங்களுக்கு சங்கடமாப்போச்சு. நோன்பு இருக்கிற ஒராளை வைச்சுக் கொண்டு எப்பிடிச் சாப்பிடுறதெண்டு. அவன் சொன்னான் நாங்கள் சூரியன் உதிக்கிற நேரம் அதாவது காலைல 5 மணியில இருந்து சூரியன் மறையிற நேரம் மாலை 7.40 வரைக்கும் சாப்பிடக்கூடாதெண்டு. அதும் இப்ப இங்க கோடை காலம் அதால சூரியன் மறைய நேரமெடுக்கும் அதால அவர்களின் மதகுருக்கள் கணிப்பிட்ட நேரத்தின் படி 7.40 வரை சாப்பிட முடியாதாம். அவன்ர அம்மா விடுமுறைக்கு வந்து நிண்டவா அப்பா நல்லாச் சமைச்சுக்குடுத்திருப்பா போல. அவா போனதும் சும்மாவே பெடியன் சோர்ந்து போயிருந்தான். இதில நோன்பு வேற. அவன்ர துரதிஸ்டம் அந்த ஏரியால Bangladesh கடைகளும் இருந்தன. அவனுக்கு நல்ல பசி போல. இந்த Bangladesh கடையில சாப்பாடு நல்லா இருக்குமெண்டு வேற சொன்னான்.

நான் கேட்டன் இப்படி உங்களை வருத்தி கட்டாயம் நோன்பிருக்கோணும் என்டு கடவுள் சொன்னவரா? அதுவும் ஒரு மாசம் எப்பிடி முடியுமென்டு. ஒருதரும் கட்டாயப்படுத்திறேல்ல ஆனால் ஒருமுறை நோன்பிருக்கத் தொடங்கினால் தொடர்ந்து நோன்பிருக்கத்தான் மனசு சொல்லுமாம். இது மனக்கட்டுப்பாடு சம்மந்தப்பட்டது. நான் ஆரம்பித்தில என்னால என்னுடைய நாவை உடம்பை மனசை் கட்டுப்படுத்த முடியுமா என்று சோதிக்கத்தான் நோன்பிருக்கத் தொடங்கினான். இன்டைக்கு இந்த பட்டறையில கேட்ட விசயத்தையே கேட்டு வெறுத்திட்டு அதான் நானிப்பிடி இருக்கிறன். நான் வீட்ட போய் கொஞ்சமா தண்ணியடிச்சிட்டு சாப்பிட்டால் ஓகே என்டான். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி.

நான் சொன்ன் எங்கட மதப்படி விரதம் பிடிச்சால் தண்ணியடிக்கிறேல்ல என்டு. அவன் சொன்னான் ஓம் தெரியும் நீங்கள் மச்சமும் சாப்பிட மாட்டிங்கள் என்டு. பிறகு சொன்னான் நாங்கள் நோன்பு முடிய நல்லா மச்சம் சாப்பிடுவம். கொஞ்சம் தண்ணியடிப்பம்.

என்ர அம்மா என்னோட கோவிச்சுக்கொள்றது இந்த விசயத்திலதான். எனக்கு விரதம் சரிப்பட்டு வாறேல்ல. நான் நினைக்கிறன் ஒரு 10 வருசத்துக்கு முதல் சரஸ்வதிபூசை நேரம் கடைசி 3 நாளும் விரதம் பிடிச்சனான் என்று. கடவுள் பல சந்தர்ப்பத்தில காலை வாரி விட்டதால எனக்கு கடவுளுக்கும் பெருசா ஒத்து வாறேல்ல. முடியாக்கட்டத்தில கோயிலுக்குப்போனாலும் எரிச்சலோட திரும்பி வாறது என்னமோ போங்கோ கடவுளுக்குத்தான் தெரியும் உண்மை.கிட்டடியில Rogester க்கும் Pittsburgh வெங்கடேஸ்வரா கோயிலுக்கும் போனம். கோயிலுக்குள்ள போறதுக்கு ஒரு பெரிய கியு. அதில நிண்டு உள்ளுக்கு போனா சாமிக்கு முன்னால ஒரு நிமிசம் கூட நிக்கேலாது. பொலிஸ் மாதிரி நீட்டுக்கு ஆக்கள் நிண்டுகொண்டு காணும் சாமியைப் பார்த்தது போங்கோ அங்கால துரத்திக்கொண்டு நிக்கினம். ஒரு 5 நிமிசம் கோயிலுக்குள்ள போய் வெளில வாறதுக்கு 8 மணித்தியாலப் பிரயாணம். மியுசியத்தில கூட இத விட வடிவாப் பார்க்கலாம் சாமி சிலையை.

கிட்டடில இங்க ரொரன்டோவில ஐயப்பன் கோயியல்ல எண்ணெய்க்காப்பு சாத்தினவை. ஒராளுக்கு $5 கொடுக்கோணுமாம். அம்மா சொன்னா லட்சக்கணக்கில சனம் வந்ததெண்டு. காலம 8 மணிக்கு போய் கியுல நிண்டு பின்னேரம் 3மணிக்குத்தான் எண்ணெய்க்காப்புச் சாத்தினவையைாம். கனடா கந்தசாமி கோயில் , நயினை நாகபூசணி அம்மன் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், நல்லூர்க்கந்தன் , வரசித்தி விநாயகர், சிறீ துர்க்கா, சந்நிதி முருகன் ,சந்திரமெளலீஸ்வரர் ,ஐயப்பன் கோயில் இதத்தவிர இன்னும் ஒரு புதுக்கோயில் வரப்போவுது.

மில்லியன் கணக்கில காசைக்கொட்டி இப்பிடிச் சந்திக்கொரு கோயில் திறக்கிறத விட இருக்கிற கோயில்கள்ல பூசையோடு சேர்த்து வேற நல்ல காரியங்களையும் செய்தா நல்லம்.

பசிக்குது சாப்பிட்டு வாறன்.

Tuesday, November 04, 2008

அல்லலுறும் மக்களுக்காக உங்கள் கண்களைத் திறவுங்கள்

தாயகத்தில் தொடர்ந்தும் எம் உறவுகள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு வருகிறார்கள்.ஏறத்தாழ 300,000 மக்கள் சாதாரண அடிப்படை வசதிகளான உணவு, உடை உறையுள் போன்றவை இல்லாமல் அல்லற்படுகிறார்கள்.

பருவகால மழையிலும் சிக்கி அவதியுறுகிறார்கள். இந்த நிலை தொடரக்கூடாதெனில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நாங்கள் எம் மக்களுக்கான நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை திரும்ப இலங்கைக்கு அனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் இதுவரை காலமும் அளித்து வந்த ஆதரவை விட இன்னும் பல மடங்கு அதிகமாக 100% முயற்சி செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

Canadian Humanitarian Appeal for the Relief of Tamils (CanadianHART) என்ற இளையவர்கள் பலரின் ஒன்றிணைந்த திட்டத்தினால் "Open Your Eyes for HART" என்ற கவனயீர்ப்பு வார நிகழ்வு ரொறன்ரோ கனடா கந்தசாமி கோவிலில் ஒன்ராரியோ மற்றும் ஏனைய மாகாணங்களிலுமுள்ள அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஊடகங்களையும் உள்ளடக்கி கனடாத் தமிழ்ச் சமூகத்தால் 1.11.08 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை (31.10.08) கனடா கந்தசாமி கோயில் மண்டபத்தில் தமிழ் இளையோர்களைச் சந்தித்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் இளையவர்கள் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்யலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டதோடு முதற்கட்டச் செயற்பாடுகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



நேற்று சனிக்கிழமை (01.11.08) பொதுமக்களையும் தமிழ் ஊடகங்களையும் சந்தித்து ஒரு வார காலம் நடைபெறவுள்ள இந்தக் கவனயீர்ப்பு வாரத்தில் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்த முழுமையான பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது, ஆளணி தேவைப்படுகின்றது போன்ற விடயங்கள் விளங்கப்படுத்தப்பட்டது.

வரும் திங்களிலிருந்து, வீட்டில் வேலைத்தளத்தில் பேருந்தில் என எல்லா இடங்களிலும் உங்கள் அயலவரிடம் எங்கள் நாட்டில் மக்கள் படும் இன்னல்களைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல 10,000 ரொறன்ரோ வாழ் மக்கள் தங்கள் அயலவர் இருவருக்கு எங்கள் தாயக உறவுகள் படும் அல்லல்களை எடுத்துச் சொன்னால் 20,000 மக்களால் எங்கள் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். அப்படியே படிப்படியாக எல்லாச் சமூகத்தினரையும் எங்கள் குரல்கள் சென்றடையும் என விளக்கப்பட்டது.

மக்களின் வசிப்பிடங்கள் வேலைத்தளங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் போன்றவற்றில் இடம்பெயர்ந்த மக்களின் நிலையை எடுத்துச் சொல்லும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் கவனயீர்ப்பு நிகழ்வினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

செவ்வாய் ஆரம்பித்து பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களுக்குச் சென்று ஆதரவுக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுதல் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களைச் சந்தித்து தாயகத்தில் மக்கள் படும் இன்னல்களையும் தற்போதைய நிலவரங்களையும் அவர்களுக்கு எடுத்தியம்புதல் மற்றும் ஆதரவுக் கடிதம் பெறுதல் போன்றன இடம்பெறும் என்று கூறப்பட்டது.

புதன் முதல் வெள்ளி வரை 72 மணித்தியால கண்காட்சியும் காட்சிப்படுத்தலும் இடம்பெறும். இது வன்னியில் மக்கள் இடம்பெயர்ந்து எப்படியான ஒரு சூழலில் வாழ்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதாகக் காட்டி உண்மையான இடப்பெயர்வை ஏனைய சமூகத்தினருக்கு காட்டுவதாக அமையவிருப்பதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து 72 மணித்தியாலம் இடம்பெறவுள்ள இந்த மாதிரி இடப்பெயர்வின் போது பொது மக்களின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுவதாக விளக்கப்பட்டது.

www.tamilidpcrisis.org என்ற இணையத்தளத்தினை மற்ற சமூக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த இணையத்தளத்திலுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு இளையவர்களின் இந்த முன்னெடுப்பினை வெகுவாகப்பாராட்டினர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு இளையவர்களும் பொதுமக்களும் எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்ற அறிவுறுத்தல்களையடுத்து 'நாம் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து இன்று எமது நாட்டில் புலம்பெயர்ந்த எமது உறவுகள் இன்னல் துடைக்கும் இப்பரப்புரையில் எம்மையும் இணைத்துக்கொள்கிறோம்; காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது எனும் வாக்கிற்கமைய செயற்படுவோம் என்றும் எம்மோடு எம்முறவுகளையும் இணைத்து எம்மாலான உதவிகளைச் செய்வோம் என்றும் குரல்வளை நெரிக்கப்படும் எம்முறவுகளின் குரலாக நாம் குரலெழுப்புவோம் என்றும் உறுதி கூறுகிறோம்" என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உலகின் பல பாகத்திலும் செறிந்து வாழும் உறவுகளே அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதிற்கிணங்க நாமனைவரும் ஒன்றுகூடி உலக மக்களுக்கு எம்மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் எடுத்தியம்புவோம். அல்லலுறும் எம்முறவுகளின் குரலாக நாமிருப்போம். ஒன்றுபடுவோம். செயற்படுவோம்.

www.tamilidpcrisis.org
info@tamilidpcrisis.org
416-838-9637

Sunday, November 02, 2008

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலமும்

கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness
" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனித்தில் எடுக்க வேண்டுமா? ஆட்டிசம் போன்ற உளநலக்குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , புலம்பெயர்ந்து கனடா போன்ற நாடுகளில் வாழும் லற்றின் அமெரிக்க ,சோமாலிய ,சூாடானிய மற்றும் தமிழ் மக்கள் உளநலக்குறைகளை எவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறார்கள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்தது இம்மாநாடு.

Centre for Addiction and Mental Health ஐச் சேர்ந்த Dr.Laura Simich பேசும்போது ஆண்டுக்கு 220 000 வரையான மக்கள் கனடாவில் குடியேறுகிறார்கள். இவர்களில் 50% மக்கள் ஒன்ராரியோ மாகாணத்தில் குடியேறுகிறார்கள். ரொரன்டோ போன்ற மக்கள் செறிந்து வாழும் நகரங்களில் வாழும் மக்களில் தாய் நாட்டில் நடைபெறும் போர் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றைய மக்களோடு ஒப்பிடும்போது அதிகளவான மனவழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் ஆனால் ஏனையவர்களோடு ஒப்பிடுகையில் உளநலம் தொடர்பான பிரச்சனைகளுக்காக ஆலோசனை பெறுவதிலும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் இவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே உள்நாட்டு போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலோடு சொந்த நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் புலம்பெயர்ந்து தாம் குடியேறும் நாடுகளில் தொடர்ந்தும் மனவுளைச்சலுக்குள்ளாக வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வரும் இவர்களில் 33.3% மக்கள் Post Traumatic Stress Disorder (PTSD)க்குள்ளாகிறார்கள். 5%மக்கள் (Major Depression) மனவழுத்தத்துக்குள்ளாகிறார்கள்.புலம்பெயர் நாட்டில் நிச்சமற்ற ஒரு வாழ்க்கையைத் தொடங்கும் இவர்கள் சமூக ரீதியில் கலாச்சார ரீதியில் பொருளாதார ரீதியில் புதிய சூழலில் பல இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். உதாரணமாக புதிய மொழியைப்பயில ஒரு வேலையைத் தேடிக்கொள்ள தகவல்களை அறிந்துகொள்ள தனிமைப்படுத்தப்படுதலில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள சொந்தநாட்டில் விட்டு வந்த உறவுகளைப் பற்றி கவலையைப்போக்க இங்குள்ள சமூகத்தினரோடு தம்மை இணைத்துக்கொள்ள இவர்கள் போராட வேண்டியுள்ளது.குறிப்பாக ஏற்கனவே பொருளாதார வசதியோடு சொந்தநாட்டில் வாழ்ந்த உயர்கல்வி கற்றவர்கள் மற்றும் பெண்கள் முதியோர்களுக்கு புதிதாக இன்னொரு நாட்டில் குடியேறி அந்த நாட்டுச் சூழலுக்கு தம்மை இவைவாக்கப் படுத்துதல் கூடுதல் சவாலாக இருப்பதாக Dr.Laura Simich குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்து வரும்போது அவர்கள் சுமந்து வந்த எதிர்பார்ப்புகள் முற்றுமுழுதாக நிறைவேறாது போகும்போதும் குடியேறிய நாட்டில் வாழும் பல்கலாச்சாரமக்களோடு தாமும் இருகலாச்சாரத்தையும் பின்பற்றும் மக்களாக வாழவேண்டி இருப்பதாலும் இனவாதத்தை எதிர்கொள்ளவேண்டியிருப்பதாலும் அவர்கள் தொடர்ந்தும் மனவுளைச்சலோடு வாழ்கிறார்கள். அதனால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உடல் உள நல சேவைகளைப் புரிய முன்வந்தாலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் மனநிலையை ஏனையோரிடம் பகிர்ந்துகொள்ளவோ உதவிகோரவோ முன்வராமல் ஒருவித (resilient) எதிர்ப்பபையே காட்டுகிறார்கள் என்றார்.

20 வருடமாக சூடான் நாட்டில் நடந்துவரும் போர் காரணமாக ரொரன்ரோ போன்ற நகரங்களில் வாழும் மக்களில் அரசாங்க சமூக நல உதவிப்பணம் பெற்று வாழும் மக்களில் 77% ஆனோர் அந்தப் பணம் தங்களுக்குப் போதவில்லை என்று கூறியிருக்கிறார்கள் ஏனெனில் அந்தப் பணத்தில் தங்கள் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்து சூடான் நாட்டில் இன்னலுறும் தங்கங் மக்களுக்குத் தேவைாயான பண உதவிகளைத் தங்களால் செய்ய முடியாதுள்ளதென்று தெரிவித்துள்ளார்கள். இனபேதம் பார்க்கும் வேலைத்தளங்களில் தங்களுக்கு வேலை கிடைக்காதால் தங்கள் வாழ்க்கையே பெரும்பாடாய் இருக்கிறது. அதனால் தங்களைப்ற்றி மட்டும் சிந்திக்கும் சொந்த நாட்டிலுள்ளவர்களை மறக்கச் செய்யுமளவுக்கு கனடா தங்களைச் சுயநலவாதிகளாக்குகிறதென்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழர்களைப் பற்றிக் குறிப்பிட்டவை : 1983 முதல் போராட்டம் நடைபெறுகிறது. போரால் மக்கள் உள்நாட்டிலேயே பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளார்கள். 1980 தொடக்கம் தமிழ் மக்கள் கனடாவுக்கு அகதிகளாக வருகிறார்கள். ரொரன்டோவில் மட்டும் 200 000 தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 61% மக்கள் கனடாவுக்கு வரமுதல் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் அல்லது வாழ்வில் ஒருமுறையாவது அகதிமுகாமில் வாழ்ந்திருக்கிறார்கள்.32% மக்கள் மிகவும் குறைந்தளவு ஆங்கிலம் பேசுபவர்கள்.33% மக்கள் மனவுளைச்சலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களைச் சந்தித்திருக்கிறார்கள். 36%மக்கள் PTSD ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்(PTSD யால் பாதிக்கப்பட்ட பெண்களின் % இன்னும் அதிகம்).இவர்களில் 3% மக்களே PTSD யிலிருந்து மீள்வதற்கான ஆலோசனையைப் பெற்றிருக்கிறார்கள்.2004 ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்துக்குப் பின் ரொரன்டோ வாழ் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உளநோய்கள் அதிகமாயிருப்பதாக Dr.Laura குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டைப்பற்றிய ஏனைய தகவல்களை தொடர்ந்தும் எழுதுவேன்.ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்லி இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.இன்று Canadian Multicultural Radio (CMR) ல் சமூக நிகழ்வுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஒரு உடல் உள நல ஆய்வு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார் :

ஒருவர் : நீங்களா இப்ப CMR ல் உளநல ஆய்வு பற்றி கதைச்சனீங்கள்
நான் : ஓம் சொல்லுங்கோ.

ஒருவர் : கனடாக்கு பிள்ளையளைக் கூப்பிடத் தெரிஞ்ச எங்களுக்கு எங்கட பிள்ளையயளை எப்பிடி வளர்க்கிறதென்டும் தெரியும். எங்கட பிள்ளையை எப்பிடி வளர்க்கிறதென்டு நீங்கள் எங்களுக்குச் சொல்லித்தரவேண்டாம் சரியோ. உங்கட உளநலத்தை எப்பிடிப் பாதுகாக்கிறதென்டதைப் பற்றி மட்டும் நீங்கள் கவலைப்படுங்கோ.

என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டார். அவர் சொன்னதற்குப் பதில் சொல்லும் வாய்ப்பும் இல்லையெனக்கு.நான் சொன்ன உடல் உள நல ஆய்வுக்கும் பிள்ளை வளர்ப்புக்கு துளியளவும் தொடர்பில்லை அப்பிடியிருந்தும் அவர் என்ன விளங்கி அவர் அப்படிச் சொன்னாரோ அது அவருக்கு மட்டும்தான் வெளிச்சம்.

Dr.Laura சொன்னதுபோல இவர்கள் ஏன் இவ்வளவு resilient ஆக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.முந்தின காலத்திலதான் மனோ தத்துவம் பேசியவர்களை உயிரோடு எரித்தார்களாம். இந்தக்காலத்திலும் மக்கள் இப்படி எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டுக்கொண்டும் உதவி கோரவும் ஆலோசனைகள் பெறவும் பின் நிற்பதால் யாருக்கென்ன லாபம் என்று யோசித்துப் பார்த்தால் ------------.

Thursday, October 23, 2008

காவோலை விழுந்தால் குருத்தோலை :-) ம்கும்

என்ர அப்பம்மா 78 வயசில 2 மாசத்துக்கு முதல்தான் ஏஜன்சி மூலம் கனடாவுக்கு வந்தவா.ஏஜன்சி மூலம் வாறதெண்டால் சும்மா லேசுப்பட்ட விசயமில்லையென்டு உங்களுக்குத் தெரியும்தானே.இலங்கைக்காசுக்கு 36லட்சம் குடுத்துக் கூப்பிட்டவை மோன்மார்.இந்த மாதிரிக் காசு விசயங்களில மட்டும் பொம்பிளைப்பிள்ளையள் ஒதுங்கிடுவினம் இந்த சித்தாந்தம் மட்டும் எனக்கு விளங்கேல்லப் பாருங்கோ....எல்லாருக்கும்தானே அவா அம்மா அதெப்பிடி ஆம்பிளைப்பிள்ளையள் மட்டும் செலவேற்கவேணும்.அப்பிடிப் பார்த்தால் என்ர அப்பா பெத்து வைச்சிருக்கிறதுகள் மூன்றும் பெட்டையள் ம் ம் இருக்கட்டும் இருக்கட்டும்..ஆனைக்கொரு காலம் வந்தால் பூஸ்குட்டிக்கும் ஒரு காலம் வரும்தானே.

எங்கட அப்பம்மா இருக்கிறாவெல்லோ அவா 12 (அதான் டசின்) பிள்ளையள பெத்தவா.அப்ப அவாக்கு என்ன குறையிருக்கப்போதென்று கேக்கிறியளா?? அவாக்கு ஒரு குறையுமில்லை.இதில ஒருவிசயத்தை நான் கட்டாயம் சொல்லோணும் அப்பிடிச் சொல்லாட்டா அந்தக்குமரின்ர மனம் குளிராது :-) அந்தக் குமரி வேற யாருமில்ல அப்பம்மான்ர தோழி. அப்பம்மாவை கனடாக்கு கூப்பிட மாறி மாறி அப்பா அத்தை சித்தப்பாவை என்று எல்லாரும் ஸ்பொன்ஸர் செய்திச்சினம் அனால் அவான்ர வயசுக்கு வாற வருத்தங்களால மெடிக்கல் சரிவரேல்ல அதால 5 வருசமா கொழும்பில நிண்டு கடைசியா ஏஜென்சி மூலம் மலேசியாவில வந்து 5 மாசம் நிண்டுதான் கனடாக்கு வந்து சேர்ந்தவா. அப்ப மலேசியால அப்பம்மான்ர அறைத்தோழிதான் அந்த நான் சொன்ன குமரி. குமரிக்கு 80 வயசாம். ஒரு நாள் அப்பா அப்பம்மாக்கு போன் பண்ண அப்பம்மா போனில அழுதிட்டா...நாங்களும் ஏதோ பயத்தில அழுறாவாக்கும் என்று அப்பம்மா கவலைப்படாதயுங்கோ நீங்கள் இந்த முறை என்ர பிறந்தநாளுக்கு வந்திடுவீங்கள் அக்கான்ர கல்யாண நாளுக்கு வந்திடுவீங்கள் என்று சமாதானம் சொல்றம் அப்பத்தான் அவா சொன்னா நான் அதுக்கு அழேல்லப் பிள்ளையள் இவ்வளவு காசு குடுத்திருக்கு இந்த ஏஜென்சி நல்ல பிள்ளை எனக்குச் சீலையெல்லாம் வேண்டி தந்திருக்கு.

பின்ன என்னத்துக்கு அழுறீங்கள்?

கூட இருக்கிற மனுசிக்கு பொறாமை போல சும்மா கறுவிக் கொண்டிருக்கு. எப்ப பார் ஏதும் குறை சொல்லிக்கொண்டு எப்படா அங்க வருவன் எப்ப உங்களையெல்லாம் பார்ப்பன் என்டிருக்கு.

எங்களுக்கும் அப்பிடித்தானிருக்கு. டக்கெண்டு வந்திடுவீங்கள்.

இல்ல மோன நேற்றும் இப்பிடித்தான் அந்த மனுசி என்ன உங்களுக்கு ஒரே போன் வந்து கொண்டிருக்கு என்டு புறுபுறுத்திச்சு பின்ன நான் சொன்னன் எனக்கு கனடால 5 பிள்ளையள் இருக்கினம் அப்ப பிள்ளையள் மருமக்கள் பேரப்பிள்ளையள் எனக்கு எடுப்பினம் தானே என்று சொன்னன். மனுசி கேட்டிச்சு கனடால 5 அப்ப எத்தின பிள்ளையள் என்று. 12 ல இளையவனும் மூத்தவனும் இப்ப இல்ல. நான் அப்பிடிச் சொன்னதுதான் தாமதம் மனுசி சொல்லுது நீயும் என்னைப்போல 2 பிள்ளையோட நிப்பாட்டியிருக்கலாம். உத்தின பிள்ளையள் பெத்ததாலதான் நீ இப்பிடி இருக்கிறாய் என்னைப் பார் 80 லயும் சும்மா எப்பிடி ஜம்மென்று குமரியா இருக்கிறனென்டு.

என்று சொல்லிட்டு அப்பம்மா அழுதிட்டா...அப்பாக்கு தாங்க முடியல சும்மா இரண உதெல்லாம் ஒரு கதையென்டு...அந்த மனுசிக்கு தன்ர பிள்ளையள் போன் பண்ணிக் கதைக்கிறேல்ல என்று கவலையாக்கும்...நீ உதுகளை விட்டிட்டு கெரியெண வாற வழியைப் பார்.

இன்டைக்கு ஏத்துறன் நேற்று ஏத்துறன் என்று ஏஜென்சி ஏத்தி இறக்கி ஒரு மாதிரி அப்பம்மா வாற நாளும் வந்திச்சு. மோன்மாருக்கு இருப்புக்கொள்ளுமே வீட்டில..எல்லாரும் குடும்பம் குடும்பமா Airport க்குப் போனாச்சு அதுவும் 2 மணித்தியாலத்துக்கு முதலே. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் லேற்றா வந்தா அப்பம்மா. 11 வருசத்துக்கு முதல் நாங்கள் பாரத்ததை விட நல்ல வாய்க்கெட்டுப்போய்த்தான் இருந்தா அப்பம்மா. எங்களைக் கண்ட உடன அழுதிட்டா. வன்கூவர்ல இறங்கேக்க கனடாக்கு வந்தாச்சென்டு சொன்னத கேட்டிட்டு அங்க எங்களை எதிர்பார்த்திருக்கிறா எங்கள் ஒருதரையும் காணேல்ல என்டதும் தன்னை எங்கயோ கொண்டுபோய் அடைக்கப்போறாங்கள் என்று நினைச்சிட்டாவாம். எங்கள் எல்லாரையும் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினா.மருமகள்மாரில சும்மா சொல்லக்கூடாது பாசம் அந்த மாதிர ஒவ்வொருதரையும் தேடி தேடிக் கொஞ்சினா. உங்களையெல்லாம் பார்தாப்பிறகுதான் நிம்மதி. இப்ப கூட உதில பாஸ்போர்ட்டையும் பார்த்து என்னையும் பார்த்திட்டு பாஸ்போர்ட் படத்தில பல்லுக் கிடக்கு உனக்குப் பல்லில்லை என்று துருவி துருவிக் கேட்டாங்கள்...எனக்குப் பயம்தான் இருந்தாலும் பல் செற்றைத் தூக்கிக் காட்டினன் விட்டிட்டாங்கள் என்டா.


பரிவாரங்கள் புடைசூழ அப்பம்மா parking lot க்கு வந்தாச்சு இப்ப அவா ஆற்ற ஜீப்ல ஏறுவா என்டது பேரப்பிள்ளையளான எங்களின் மிக முக்கியமா மில்லியன் டொலர் கேள்வி...ஆனால் நான் உங்களுக்குச் சொல்ல மாட்டன் அவா ஆற்ற ஜீப்ல எறினவா என்டு.

Airport ல flight arrival நேரத்துக்கு முதலே போய் காவல் நிக்கிற மண்டைக்காயளுக்கு ஒரு எச்சரிக்கை. parking fee எவ்வளவு என்று முதலே பார்த்து வையுங்கோ ஏன் சொல்றன் என்டால் ஒரு வாகனத்துக்கு 21 டொலர்படி 5 வாகனத்துக்கும் 105 டொலர் parking fee மட்டும் கட்டினாங்கள் .

அப்பம்மா வந்தாச்சு ..ஆற்ற வீட்ட முதல் போவா? ஆற்ற வீட்ட இன்டைக்கு இரவுக்கு நிப்பா....இந்த விசயத்தில அம்மாக்கள் மகள் பக்கம்...என்னை விடுங்கோ இதப்பற்றி நான் ஒன்டுமெ சொல்லப்போறதில்ல.

அப்பம்மா வந்து 3 நாளாச்சு. எல்லாப்பிள்ளை வீட்டயும் போய் வந்தாச்சு.

அம்மா இந்தாண...இது நான் உனக்கெண்டு செய்து வைச்சதிருக்கிற சங்கிலி.

அம்மா இது நான் உனக்கெண்டு வாங்கின காப்பு.

என்ன கொடுமை சரவணா.

ம் இப்பிடித்தான் எல்லாம் ஆரம்பிக்கும். இனித்தானே இருக்கு விளையாட்டு.

அட்டவணை போட்டாச்சு. வார இறுதி நாட்கள்ல மகள் வீட்ட. மற்ற நாட்கள்ல மகன்கள் வீட்ட அம்மா நிக்கலாம்.

மற்ற எல்லா மருமகள்களும் வேலைக்குப் போறாக்கள் என்ர அம்மாவைத் தவிர.அதனால கிட்டத்தட்ட எல்லா நாளும் அப்பம்மா எங்கட வீட்ட நிக்கிறளவில இருக்கு இப்ப நிலமை.

வயசு போனால் வாற மறதி...கண் பார்வை இப்பிடியான பிரச்சனைகள் இல்லை. இருமல் சளி காலுளைவு நாரிப்பிடிப்பு இதெல்லாமிருக்கு.எத்தின பேரப்பிள்ளை இருக்கினமோ அத்தினபேரும் காலமுக்கி விட்டால் அவாக்கு நல்ல சந்தோசம். ஒருநாள் அண்ணா வீட்ட வர காலை நீட்டிச்சொன்னா ஒரே காலுளைவா இருக்கு மோனை என்று அவன் சும்மா பக்கத்தில இருக்கிற மாதிரி இருந்திட்டு ஒடிட்டான் கள்ளன் நாங்கள் போய்ச் சொன்னம் அவாக்கு பேரன் மாரிலதான் கரிசனம் கூட போ போ போய் கால் பிடிச்சு விடென்டு.

பிள்ளையள்ல பொம்பிளையப்பிள்ளைல பாசம் கூட என்டால் பேரப்பிள்ளைலயும் அப்பிடித்தானே இருக்கோணும்..ஏனப்பிடியில்லை?

அப்பம்மா சாப்பிட வாங்கோ...இங்க வா மேன இந்தப்படியால இறங்கேலதாம் என்னைக் கொஞ்சம் பிடிச்சு இறக்கிவிடு.

பிள்ளை எனக்கு வெண்டிக்காய் கறி போட வேண்டாம். நான் தோஞ்சனான் வெண்டிக்காய் குளிர். இது சூடு. இப்பிடியெல்லாம் தவிர்த்து சொதியோட சாப்பிட்டா. இது தொடர்ந்திச்சு கொஞ்ச நாளைக்கு.பிறகு சளியா இருக்கு முட்டா இருக்கு சோறு சாப்பிட என்டால் நல்ல உறைப்பான சம்பலும் ரசமும் வைமேனை.

மூன்று நேரமும் fresh சமைக்கத் தொடங்கினா அம்மா. பிரிட்ஜ் ல வைச்சு சாப்பிடுறது இல்லாமல் போச்சு.நினைச்ச நேரம் சூப் ரசம் சாம்பார் சம்பல் நண்டுக்கறி கணவாய்க்கறி நெத்தலிச்சொதி...விதம் விதமா சாப்பாடு அப்பம்மாக்கு எங்களுக்கும்தான். வந்த புதுசிலதான் அம்மா செய்தவா. இப்ப அப்பம்மாவும் நல்லாச் சமைப்பா...இப்ப அவாக்கு கனடா பழகிட்டுது. தானா நடப்பா தானே வோஸ்றூமுக்குப் போவா ஆனால் என்ன வோஸ்றூம் போன கிளீன் பண்ணத் தெரியேல்ல இன்னும் அதும் பழகிடுவா கெரில.

இப்ப குளிர் தொடங்கிட்டு..அப்பா ஒரு ஜக்கற் வேண்டிக்கொண்டு வந்தார் அப்பம்மாக்கு. நானுது போட மாட்டன்..நான் சிவப்புக்கலரில உடுப்பே போடுறதில்லை ஜக்கற்ற வேண்டியந்திருக்கிறாய் சிவப்பில...என்னட்ட பறையாமல் உன்னையார் போய் வாங்கச் சொன்னது.

அப்பா சிலநேரம் எங்களையே தான் வேண்டிக்கொண்டு வாறதைப் போட வைக்கிறவர் இப்ப அவற்ற அம்மாக்கு முன்னால மண்டிக்கொண்டு நிக்கிறவரைப் பார்க்க எனக்கும் தங்கச்சிக்கு சிரிப்படக்க முடியல்ல.

அப்பம்மா நல்லா நாடகம் பார்ப்பா அதுவும் கஸ்தூரில ஒரு தனிப்பாசம் அவாக்கு.இதாலயே தங்கச்சியும் அப்பம்மாவும் சிலநேரம் முண்டுப்படுவினம். அப்பம்மா நாடகம் பார்க்கிற நேரம் தங்கச்சி ஆங்கிலத் தொடர்கள் எதுவும் பார்க்க வெளிக்கிட்டால் காணும் அப்பம்மா சொல்லுவா உதென்ன உவளுகள் ஒழுங்கான உடும்பும் போடுறேல்ல எல்லாப்பக்கமும் கிழிஞ்சு தொங்குது காதில வயித்தில மூக்கில எல்லாம் தொங்குது. என்ன அருமந்த முகம் ..தலைமயிரைப் பின்னிக் கட்டினா என்னமா இருக்கும்..உதுகள ஏன் பார்க்கிறியள் இது கஸ்தூரி தொடங்கப்போகுது மாத்தடி. ராம் பாவம் எங்கட அப்பம்மாட்ட அந்தாள் வேண்டுற அர்ச்சனையிருக்கே. ஒரு எபிசோட்ல கஸ்தூரிக்கு அசிட் ஊத்திட்டினம் முகத்தில...அப்பம்மா திட்டத்தொடங்கிட்டா. அப்பா சொன்னார் ஏனண கத்திறாய் உது நாடகம்தானே..

ஓமடா எனக்குத் தெரியாதே நாடகமெண்டு அப்பிடியென்டாலும் அவளுக்குக் கொஞ்சமெண்டாலும் பட்டிருக்கும்தானே முகத்தில

இல்லையெண அது தண்ணிதான் உண்மையா ஊத்துறது.

சீ சீ ஆர் சொன்னதுனக்கு...இப்பிடிப்போகும் அப்பம்மாவும் நாடகங்களும்.

மகளின் ஒரு காதல் பிரச்சனையால சொந்தக்காரர் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து இப்ப சுகம். அங்க போட்டு வந்ததில இருந்து அப்பம்மா எங்கள் எல்லாரும்கும் ஒரே அட்வைஸ் மழை. இங்கத்த பிள்ளையளுக்கு ஒன்றும் தெரியுறேல்ல. பெத்ததுகளை அழ வைச்சுப் பார்க்குதுகள். எங்கட காலத்திலயென்டால் கல்யாணத்தன்னிக்குதான் மாப்பிள்ளையைப் பார்க்கிறது. அதும் ஒன்றும் விளங்காத வயசில கட்டி வைச்சிடுவினம்..எண்டா.
எனக்குப் பொறுக்க முடியேல்ல கேட்டிட்டன் அப்ப நீங்கள் தாத்தாவை லவ் பண்ணேல்லயே.

நாங்கள் எங்க லவ் பண்ணினம்...

அப்ப எப்பிடியப்பம்மா இவ்வளவு பிள்ளையளையும் பெத்தனீங்கள்.

இதென்ன கேள்வி..கல்யாணத்துக்குப் பிறகு ஆர்தான் லவ் பண்ணாமலிருக்கினம் கல்யாணம் கட்டினாப்பிறகு லவ் பண்ணினதுதான். அதுக்கு முதல் உங்களைப் போல லவ் பண்ணவெல்லாம் எங்களை யார் விட்டது.

ஹா ஹா அப்பிடி வாங்கோ வழி்க்கு அப்ப நீங்கள் தாத்தாவை லவ் பண்ணினீங்கள்.

இவளின்ர கதையைப் பாருங்கோ என்று சிரிச்சுக்கொண்டு நல்லா வெக்கப்பட்டா அப்பம்மா ..அதோட எனக்கு நுள்ளிப்போட்டா...நான் அதுக்குப்பிறகு இடம் மாறி இருந்திட்டன்.

தங்கச்சி கேட்டாள் தாத்தாக்கு உங்கள விட 23 வயசு கூடவெல்லோ..ஏன் நீங்கள் அவரை கல்யாணம் கட்டினீங்கள்..ஏன் லவ் பண்ணினீங்கள்.

உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கென்ன...இப்பிடி பக்கத்தில இருந்துகொண்டு கேள்வி கேக்கிறீங்கள் சிரிக்கிறீங்கள். எங்களையார் கேள்வி கேக்க விட்டவை பதில் யார் சொல்லுவினம்.பெரியாக்கள் கதைக்கிற பக்கமே நாங்கள் போகேலாது. அம்மா 6 வயசிலயே செத்திட்டா என்று கண் கலங்கினா. சொந்தக்காரர் சொல்லிச்சினம் நானும் கழுத்தை நீட்டிட்டன். மனுசன் என்னை நல்லாத்தானே வச்சிருந்தது. பரியாரின்ர மனிசி என்று ஊரிலயும் எனக்கு நல்ல மரியாதை. சொத்து சுகம் பூமி நிலம் என்று நல்லாத்தானே இருந்தம். இப்பத்தான் எல்லாம் யார் யாரோ அனுபவிக்குதுகள்.

அப்பம்மா அப்ப தாத்தா நல்லவர்தானே பின்ன ஏன் நீங்கள் 10 வருசமா கதைக்காமல் இருந்தனீங்கள்.

அவற்ற குசும்புக் கதையள் வர வரக்கூடிட்டுது. அவர் கதைச்சிருக்கலாம்.

ஆகா அப்பவே ஈகோப் பிரச்சனையா..ம்.

இப்பிடிச்சும்மா பம்பலாப் போகுது பொழுது. அவாக்கு சில விசயங்கள் தெரியாதென்டு விளங்கப்படுத்தப்போய் மூக்குடைபட்டிருக்கினம் சிலர்.

ஒருநாள் வெளில போன ஒரு இடத்தில இருந்த வோஸ்றூம்ல இருந்த கொமட்ல flush பண்றது கொஞ்சம் வித்தியாசம்..பொதுவா ஒரு பிடியிருக்கும் இது ஓரு குட்டி button இருக்கும் கருஞ்சிவப்பா.. பெருசா தெரியாது கண்ணுக்கு. அத்தை போட்டுவந்து சொன்னா எப்பிடி flush பண்றதென்று முதல் தெரியேல்ல ..தேடிப்பார்த்தனான் வித்தியாசமா இருக்கெண்டு சொன்னா. உடன அப்பம்மா சொன்னா என்ன உனக்கு அந்த button தெரியேல்லயே.எனக்கே வடிவாத் தெரியுது..மலேசியாலயும் இப்பிடித்தான்.

இன்னொருநாள் அப்பம்மா ஒரே இருமிக்கொண்டிருந்தா. வேற ஆக்களின்ர வீட்டில நிண்டனாங்கள் பின்ன நடுக இருமுறா என்டிட்டு அத்தை gum குடுத்திட்டுச் சொன்னா அம்மா இது விழுங்கக் கூடாது..சுவை போன பிறகு வெளில துப்பிடணும். அப்பம்மா வேண்டி வாய்ல போட்டிட்டு அட இது சுவிங்கம்..இதை எப்பிடிச் சாப்பிடணும் என்று எனக்குத் தெரியாதே..இதையேன் நான் விழுங்கப் போறன்.நீங்கள் எல்லாம் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள் ஹா? தெரியாமல்தான் கேக்கிறன் ஊரில நீ சுவிங்கம் சாப்பிட்டதில்லையே?
அத்தையைப் பார்க்ப பாவமாய் இருந்திச்சு..அத்தை சொன்னா பிறகு நீங்கள் விழுங்கிப்போட்டு முதல்லயே நீ சொல்லியிருக்கலாம் என்டுவீங்கள் அதான் சொன்னனாண.
அந்த வீட்ட விட்டு வரேக்க அத்தை கேட்டா அம்மா gum துப்பிட்டியே..இல்ல கொடுப்புக்குள்ள ஒட்டி வைச்சிருக்கிறன். இருமலோட விழுங்கிடப்போறாய் துப்பண..அடி விசரி நான் எப்பவோ வோஸ்றூம்ல துப்பிட்டன.

அப்புறம் ஒரு விசயம் சொல்ல மறந்திட்டன் அந்தக் குமரி தோழி இருக்கிறா தானே அவா கனடாக்கு வாறா என்டு தெரியும். ஆனால் அப்பம்மான்ர அதிஸ்டம் அவா சித்தப்பா வீட்டுக்கு பக்கத்து வீட்டு அன்ரின்ர மாமி :-) அப்பம்மாவும் அவாவும் கனடால சந்திக்கேக்க ஒரு சிற்றுவேஸன் ஸோங் போடட்டே " என்னம்மா கண்ணு செளக்யமா"

Friday, October 03, 2008

எதை நீ தொலைத்தாலும் மனதை....




மீள்பதிவு - நட்சத்திர வாரத்திலிருந்து

Thursday, April 03, 2008

Malingering and Factitious Disorder

Malingering ,Factitious Disorder இரண்டுமே கொஞ்சம் விசித்திரமான மனநோய்கள். உங்களுக்குத் தெரிஞ்ச நிறைய பேருக்கு இந்நோயின் சில அறிகுறிகள் இருக்கலாம் ஏன் உங்களுக்குக் கூட இருக்கலாம் (எனக்கும்தான்). எனவே இதை வாசித்துவிட்டு உங்களுக்கும் இந்த நோய் இருக்கா என்று சந்தேகப்பட வேண்டாம் ஏனென்றால் இந்நோய்களில் எத்தனை அறிகுறிகள் இருந்தால் diagnostic criteria க்குள் வருவீர்கள் என்று வரையறுத்துச் சொல்வது கடினம்.

இந்நோயுள்ளவர்கள் பொய்யாக ஒரு இயலாமையை உருவாக்கி அதன்மூலம் தங்கள் பொறுப்புகளில் இருந்து ஒதுங்குவார்கள். உதாரணமாக அடிக்கடி sick அடிக்கிறது. வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோர்களுக்கு இந்த "sick அடித்தல்" நல்லாவே தெரியும். சில வேலைத்தளங்களில் லீவு எடுப்பது கடினம் உடன நம்மவர்கள் sick அடிப்பார்கள். வேலைத்தளத்தைத் தொடர்புகொண்டு எனக்கு இன்று திடீரென்று தாங்கமுடியாத தலைவலி காய்ச்சல் தடிமன் இப்பிடி என்னென்னெல்லாம் அழையாத விருந்தாளியா வருமோ அதெல்லாம் தனக்கு வந்திட்டுது என்று சொல்லி வேலைக்கு கள்ளம் போடுறது.அது பெரியாக்களின் விளையாட்டு.

பாடசாலைக்குச் செல்வோரும் இதே விளையாட்டு விடுவினம் ஆனால் அம்மா அப்பாவை கண்டு பிடிச்சிடுவினம். ஆனால் பிள்ளையள் தங்களிட்ட இருந்துதான் பழகினவையெண்டதை ஒத்துக்கொள்ளவே மாட்டினம்.சிலருக்கு பெளதீகப் பரீட்சை நடக்கிற நேரமெல்லாம் வயிற்றுவலி வரும் இன்னும் சிலருக்கு தமிழ்ப் பரீட்சை நேரம் புதுசா புதுசா எல்லாம் வருத்தம் வரும்.
இன்னும் சிலர் ஒரு படி மேல போய் மண்டை உடைச்சுப்போட்டு வாறது கிணத்துக்க விழுறது காய்ச்சல் வரோணும் என்று கோயில் கிணத்தில போய்க் குளிச்சிட்டு நிறைய ஐஸ்கிறீம் சாப்பிடுறது இப்பிடி நிறையச் சொல்லலாம். மனசைத் தொட்டு சொல்லுங்கோ நீங்களும் இப்பிடி எல்லாம் பம்மாத்து விட்டனீங்கள் தானே ?

சில நாடுகளில் இராணுவ சேவை செய்யவேண்டியது கட்டாயம். அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வேலையிடத்திலிருந்து அதிகளவிலான காப்புறுதி பெறுவதற்காகவும் தங்களுக்கு பெரிய பெரிய வருத்தங்கள் இருப்பதாக சொல்பவர்களுண்டு.இப்பிடி ஒரு பொறுப்பிலிருந்து விடுபட பொய்யாக வருத்தம் இருப்பதாக பொய் சொல்வது அல்லது வருத்தத்தை வருவிப்பது இந்நோயின் ஒரு அறிகுறி.
இது தவிர தன்னை வீட்டிலுள்ள எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் சிலர் வருந்தி நோயை வரவழைத்துக்கொள்வதுண்டு. வீட்டில ஒரு சகோதரருக்கு வருத்தம் என்றால் விசேட கவனிப்புக் கிடைக்கும் அதைப்பார்க்கிற மற்ற பிள்ளைகளுக்கு சா இந்த வருத்தம் நமக்கு வந்திருக்கக் கூடாதா ? அம்மம்மான்ர மடில படுக்கலாம் நெஸ்ரோமோல்ட் குடிக்கலாம் 3 நேரமும் பிஸ்கட் சாப்பிடலாம் சோறு சாப்பிடத்தேவையில்ல என்று மனசுக்குள்ள கணக்குப் போடுறது அடுத்த நாள் தானாவே காய்ச்சல் வந்திடும் மற்றாளுக்கு. இது அநேகமா சின்னப்பிள்ளைகள்தான் இப்பிடி நடிக்கிறது ஆனால் பெரியவர்களும் சளைத்தவர்களல்ல. மனைவி பிள்ளைல அல்லது பேரப்பிள்ளைல பாசத்தைப் பொழிஞ்சால் பொறுக்கேலாமல் வருத்தம் என்று படுக்கிற அப்பாக்கள் தாத்தாக்களும் உண்டு.
இப்பிடி பொய் சொல்லிக்கொண்டு பொய் றிப்போர்ட் கேட்டு வாறாக்களால கன நேரம் நடிக்க முடியாது தானே.சில நேரம் தாங்களே மாட்டுப்பட்டிடுவினம். சாதாரணமா ஒரு குறிப்பிட்ட வருத்தம் இருக்கிறாக்கள் எப்பிடி நடந்துகொள்ளுவினமோ அதையே மிகைப்படுத்துவதுபோல இவர்களின் நடிப்பிருக்கும். நெஞ்சு வலியென்டு வருவினம். எந்தப்பக்க நெஞ்சு வலியென்டு கேட்டால் இடப்பக்க வலியெண்டு சொல்லிக்கொண்டு வலப்பக்கத்த இறுக்கிப்பிடிச்சிருப்பினம். இதைத்தான் la belle indifference என்று சொல்றது. உதாரணத்துக்கு ஒருவர் அதிகளவிலான காப்புறுதிப்பணம் எடுப்பதற்காக தனக்கு ஞாபக சக்தி இல்லாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் என்று வைப்பமே அதை நிரூபிப்பதற்காக அவருக்குக் கொடுக்கப்படும் வினாக்கொத்தில் தெரிந்த கேள்விகளுக்கெல்லாம் தாறுமாறாகப் பிழை பிழையாக் பதிலளிப்பார். ஒரு குறிப்பிட்ட border line இருக்கும்தானே எதற்கும். இப்படி பொய் சொல்பவர்களின் அதீத நடிப்பால் இவர்கள் அந்த வினாக்கொத்தில் மிக மிக குறைவான மதிப்பெண் பெற்றால் clinical assessment செய்பவர்களுக்கு விளங்கிவிடும் இவர் நடிக்கிறார் என்று. கண்ணை மூடிக்கொண்டு விடையளித்தால் கூட 10 % புள்ளிகள் வரும் ஆனால் இவர்கள் அதற்கும் குறைவாக எடுப்பார்கள்.

இந்த வருத்தம் மருத்துவம் படிப்பவர்களுக்கும் மருத்துவத்துறையில் வேலை செய்பவர்களுக்கும் அதிகமா வருதாம். ஏனென்றால் மற்றவர்களை விட இவர்களுக்கு அநேகமான வருத்தங்களின் அறிகுறிகள் பற்றித் தெரிந்திருக்கும்தானே அதனால் பொய் சொல்வதும் நடிப்பதும் அவ்வளவு கடினமில்லை :-)

இந்த Malingering உடன் தொடர்புடைய இன்னொரு மனநோய்தான் Factitious Disorder.இது இன்னும் விசித்திரமானது. இந்த வருத்தம் உள்ளவர்கள் தங்களுக்கு காயம் ஏற்படுத்திக்கொள்றது மட்டுமில்லாமல் தங்கட பிள்ளையையும் காயப்படுத்துவினம். அப்பிடி பிள்ளைக்கு காயம் ஏற்படுத்தினால் அதை Factitious Disorder by proxy அல்லது Munchausen Syndrome by proxy என்று சொல்றது.
Rapper Eminem ஐ உங்கள் எல்லாருக்கும் தெரியும்தானே? Eminem ன் பிரபலமான ஒரு பாடல்தான் "Cleaning out my closet ''. அந்தப்பாடலில் வரும் பின்வரும் வரிகளில் தன் தாய்க்கு Munchausen Syndrome இருந்ததாகவும் அதனால் தான் தாயார் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் சொல்கிறார். தன் மனதில் தேங்கியிருந்தவற்றை தான் வெளியில் சொல்வதைத்தான் (அதாவது மனதைச் சுத்தப்படுத்துவதைத்தான் ) cleaning out my closet என்று குறிப்பிடுகிறார்.

" Witnessing your mama popping prescription pills in the kitchen
Bitching that someone's always going through her purse and shit missing
Going through public housing systems, victim of Munchausen syndrome
My whole life I was made to believe I was sick when I wasn't
' Till I grew up, now I blew up it makes you sick to ya stomach, doesn't it ".

கனடாவில் சில வருடங்களுக்கு முதல் இரண்டு தாதிமார்களுக்கு Munchausen syndrome இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தங்களுக்கு Urinary tracy infection, flank pain ( அடிவயிற்றிலும் அதனை அண்டிய பாகங்களிலும் வலி ) மற்றும் gross hematuria ( urine ல் இரத்தம் கலந்திருப்பது) இருப்பதாக தொடர்ந்து முறையிட்டுள்ளார்கள். நாளடைவில் தாங்களே தங்கள் bladder ( பித்தப்பை??)) இரத்தத்தைச் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது ( Chew ,Pace & Honey , 2002).
இப்படியான மனநோய்களுக்கு சிறுவயதில் உரிய பராமரிப்பு கவனிப்பு கிடைக்காதது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கென்று தனியான சிகிச்சைமுறைகளில்லை. பலர் தங்களுக்கு இந்த வருத்தம் இருப்பதாக ஒத்துக்கொள்வதில்லை. அப்படி அவர்களாக ஒத்துக்கொண்டு தெரப்பி எடுத்துக்கொள்வது தவிர வேறு வழிகளில் இவர்களைக் குணப்படுத்தமுடியாது.

Monday, December 03, 2007

நெசமாத்தான் சொல்றியா?

தாயகப்பறவைகள் மார்கழி இதழுக்கு எழுதியது:

You faget! இதை நீங்களும் பல இடங்களில பல இளமாக்களிட்ட இருந்து கேட்டிருப்பீங்கள். சில பேருக்கு மட்டும் அதின்ர உண்மையான அர்த்தம் விளங்கியிருக்கும். ஆனால், மற்றவை ஏதோ சின்னப்பிள்ளையள் கெட்ட வார்த்தையில திட்டுதுகள் எண்டு நினைச்சிருப்பீங்கள். இன்னும் சில பேர் அதை கண்டுகொள்ளாமலே விட்டிருப்பீங்கள். சிலபேர் மனசுக்குள்ள திட்டினாலும், சின்னப்பிள்ளையள் விளையாட்டுத்தனமாச் சொல்லிட்டுதுகள் எண்டு நினைப்பீங்கள். என்ன அர்த்தம் எண்டு சொல்லாமலே கனக்க கதைக்கிறன் என்ன?

faget மற்றும் cocho போன்ற வார்த்தைகள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஒரு ஆணைக் குறிக்கும் சொற்களாகும். இந்த சமூகமானது சொற்களால் வன்முறை செய்யக் கற்றுக் கொண்டுள்ள சமூகமாகும். நம்மில் பலர், கோபத்தின் உச்சத்தில் நாம் உதிர்க்கும் சொற்கள், சக மனிதரை எந்தளவு பாதிக்கிறது என்பதை அறிவதில்லை. சிலர், பிறர் மனதைத் துன்புறுத்திப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, தமிழில் தூசணச் சொற்களை சிறுவர்கள் உச்சரிக்கும் போது அது பாரதூரமாகக் கருதப்படுகிறது. அதே, ஆங்கிலத்திலோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் அந்நாட்டு மொழிகளிலோ சொல்லும் போது அது கவனிக்கப்படுவதில்லை. சிலவேளை அவற்றின் அர்த்தம் புரியாததால் கூட இருக்கலாம். அல்லது, வேற்றுமொழிகளில் சொல்கிற போது அச்சொற்களின் தாக்கத்தை உணராததால் கூட இருக்கலாம்.

தாயால், தந்தையால், சகோதரர்களால் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால், அதாவது யார் யாரையெல்லாம் ஒருவன் அதிகமாக நேசித்தானோ, நம்பினானோ, தான் யார் அருகாமையில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தானோ - அவர்களே அவனைப் பாலியல் துஷ்பிரயோகத்துக் குள்ளாக்கி - அவனுக்கு அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை மட்டுமன்றி மானுட சமூகத்தின் மீதான நம்பிக்கையையே தகர்த்தெறியும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டவனைக் குறிக்கும் ஒரு சொல்லை, நாம் எவ்வளவு சாதாரணமாக எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி உடனே சொல்லிவிடுகின்றோம். பாலியல் துஷ்பிரயோகத்திக்கு உள்ளானவனைப் பார்த்து இந்தச் சொல்லை யாரும் சொன்னால், அவனுக்கு எவ்வளவு வலியேற்படுமோ - அதேயளவு அல்லது அதை விட அதிகமான வலியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படாதவனைப் பார்த்துச் சொல்லும்போது நாம் ஏற்படுத்துகின்றோம். தமிழில் இதனை "தீயால் சுட்ட புண் ஆறும் ஆறாது நாவால் சுட்ட புண்" என்று மிகப்பொருத்தமாக முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். இச் சொற்களின் பொருள் புரியாதவர்கள் என்றால், என்றோ ஒருநாள் faget என்ற சொல்லின் அர்த்தம் தெரியவரும்போது அவர்களின் நெஞ்சில் எங்கேயோ முள் தைக்கும். அர்த்தம் புரியாமல் பயன்படுத்துபவர்கள், ஆண்களை மட்டுமே குறிக்கும் இச்சொல்லை பெண்களைக் குறிக்கவும் பயன்படுத்துவதைக் காணலாம்.



என்னிலும் இளைய என் சகோதரர்களுடன் கதைக்கும்போது அல்லது விளையாடும்போது, சர்வசாதாரணமாக "you faget", "cocho head" போன்ற வார்த்தைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிலர் உண்மையான அர்த்தத்தைச் சொன்னதும் அப்படிச் சொல்வதை நிறுத்திக்கொள்வார்கள். சிலரைப் பொறுத்தவரையில், உரையாடலினிடையே அப்படிச் சொல்வது ஒரு நாகரீகம். இளையோர் பேச்சு வழக்கில் கலந்துபோய்விட்ட ஒன்று. இதற்கு அவர்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. இன்றைய ஊடகங்களும் ஒரு காரணம். இது தான் இளையோர் மொழி என்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி / பரப்பி வைத்துள்ளன. இந்த விம்பம் உடையுமட்டும் இளையோரும் அதனை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இந்நேரத்தில், ஏனோ எனக்கு "ஜோடி நம்பர் 1" நடுவர்களின் "சான்ஸே இல்ல பிச்சிட்டிங்க", "கிழிச்சிட்டிங்க" போன்ற சொற்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.

இப்படி நம்பிக்கைக்குரியவர்களால் சிறுவயதில் பாலியல் ரீதியில் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு, பதின்மவயதிலிருந்தே ஆண் பெண் என்ற பாகுபாடின்றி யாரையுமே நம்ப முடிவதில்லை. எவருடனும் நெருங்கிப்பழக முயற்சி செய்வதில்லை. அவர்களுடைய ஒதுக்கத்தை புரிந்துகொண்டு யாராவது தாங்களாக முன்வந்து அவர்களுடன் நெருங்கிப் பழகத்தொடங்கினால், அதை அவர்களால் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. "ஏன் என்னிடம் நெருங்கிப் பழக முயற்சி செய்கிறார்கள்" என்று யோசித்து யோசித்து, ஒருவேளை தன்னுடைய abuser போலவே தன்னுடலைத்தான் விரும்புகிறார்களோ என்றெண்ணுவார்கள். யாரும் அவர்களிடத்தில் அன்பாயிருந்தால், அதற்குப் பதிலாக தன்னிடம் அவர்கள் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று சிந்திப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் பாலியல் ரீதியானதாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்து, எவரையும் அவ்வளவு சீக்கிரத்தில் தம்மை நெருங்க விடமாட்டார்கள். விதிவிலக்காக, இப்படி பாதிக்கப்பட்டவர்களை ஒருவர் உண்மையாக நேசித்து, அவர்களிருவரும் ஒன்றுகூட முயற்சிக்கும்போது பழைய நினைவுகள் எல்லாம் வந்து நர்த்தனமாடும். மனதைக் குழப்பும். உளவியல் குழறுபடிகளை உண்டுபண்ணும். குறிப்பாக, உடலுறவின் போது பெண் ஆளுமைமிக்கவளாகச் செயற்படின், அது அவர்கள் மனதை உறுத்தும். பழைய சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, பயத்துடனான எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி மனதில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும்.

8 -10 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் முதல் பதின்ம வயதில் பாதிக்கப்பட்டவர்கள் வரை அவர்களுடைய abuser இன் தாக்கம் மிகவும் அழுத்தமானதாக இருக்கும். அந்த ஆழமான மனப்பதிவு, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் நினைவுக்கு வந்து தொல்லைகொடுக்கும். அந்த மனப் பாதிப்பிலிருந்து மீள முடியாதவர்களாக உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக தம்மை உருவகித்துக் கொள்வார்கள். அதைச் சமநிலைப்படுத்திக் கொள்ள நடக்கும் மனப்போராட்டத்தின் வெளிப்பாடு, சமூகத்தளத்தில் அவர்களை வேறுபடுத்திக் காட்டும்.

இப்படி நடந்துகொள்பவரை சமூகத்திலிருந்து புறக்கணித்து ஒதுக்கி வைக்காமல், அவர்களின் சூழலை, மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும். அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை, உளவியல் ரீதியாக அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதன்மூலம் அவர்களை இயல்புநிலைக்கு மீட்டெடுக்க முடியும். எனவே, ஒவ்வொரு இயல்புநிலை மீறிய செயற்பாட்டுக்குப் பின்னாலும், ஏதோ ஒரு உளவியல் தாக்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். அதேபோல், நமது ஒவ்வொரு செயற்பாட்டின் மூலமும், நம்மிடமும் பிறரிடமும் நாம் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதையும், சில சந்தர்ப்பங்களில் அது மிக மிக அழுத்தமாக அவர்கள் மனதில் பதிவாகிவிடும் என்பதையும் உணர்ந்துகொள்வது அவசியம்.

Tuesday, September 11, 2007

Paul ன்ர கதை II

8 அல்லது 9 வயதிலேயே தனக்கு மற்றவர்கள் மீது ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேணும் என்ற எண்ணம் வந்ததாம்.மற்றவர்களால் தன்மீது ஆதிக்கம் செலுத்தமுடியுமென்றால் தன்னாலும் அது முடியுமென்று தன் குடும்பத்தினரை கஸ்டப்படுத்துவதற்காகவே தான் ஒழுங்காகப் பாடசாலைக்குச் செல்லாமல் தீய நட்புகளைத் தேடினானாம்.கடைகளில் சிறிய திருட்டில் ஆரம்பித்துப் பின்னர் 12 வயதில் கார் றேடியோ போன்றவற்றை திருடி ஒரு கூட்டத்துடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியில் தங்க வெளிக்கிட்டானாம்.15 வயதில் மீண்டும் foster home வாழ்க்கை ஆரம்பமானது.அன்றிரவு தன் காதலியுடன் ஒரு சின்ன விசயத்துக்காகச் சண்டை போட்டுத் தோற்றுப்போன ஆத்திரத்தில் போதைமருந்து உட்கொண்டுவிட்டு foster home க்கு வந்தபோது அங்கே வசித்த ஒரு 6 வயதுச் சிறுமியைத் தான் sexual abuse க்குள்ளாக்கியதையும் தானா அப்படி நடந்துகொண்டேன் என்று தன்னால் நம்பமுடியவில்லையென்கிறான்.

சரியான சாட்சியங்களில்லாததாலும் தான் அப்படி அந்தச் சிறுமியிடம் நடந்துகொண்டதற்கு தான் சிறுவயதில் sexual abuse க்குள்ளாக்கப்பட்டது ஓரு காரணமாக இருக்கலாம் என்று தான் foster home mother க்குச் சொன்னதாலும் தன்னை அவர்கள் counselling க்கு அனுப்பினார்களாம்.தான் counselling க்குச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் கூட கனவில் வன்மமான எண்ணங்கள் வந்ததாம்.சிறுவர்களையும் சிறுமிகளையும் தன்னால் கனவில் கூட அப்பிடி நினைத்துப்பார்க்க முடியவில்லையாம் அத்தோடு கனவில் நடப்பது போல நிஜத்திலும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சியாக தன் நாளங்களை அறுத்துக்கொண்டானாம்.

தெரப்பிக்குச் சென்று வந்ததால் தான் இப்போது தன் இறந்தகாலத்தை மறந்து நிம்மதியாக இருக்கிறானாம்.தனக்கு ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் இருக்கிறார்களாம்.வளர்ந்த ஆண்கள் அதாவது X ன் வயதையொத்த (>30) ஆண்களைத் தன்னைச் சாதாரணமாகத் தீண்டினால் கூட தனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்து தொல்லைப்படுத்துவதால் இயன்றளவு அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்த்து வருகிறானாம். பெண்களுடன் டேற்றிங் செல்லும்போது தன்னைப் பற்றித் தான் அதிகம் சொல்வதில்லையாம்.Foster home ல் வாழும் தன்னைப் போலவே மற்றவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டானாம்.தாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்களாம்.

இரவில் தூங்கும்போது யன்னல்கள் எல்லாம் மூடியுள்ளதா என்று பார்த்துவிட்டுத்தான் தன்னால் தூங்க முடிகிறதாம். முன்பு sirens ஒலி கூடத் தன் தூக்கத்தை கெடுப்பதில்லையாம் ஆனால் இப்பொழுதெல்லாம் ஒருவர் மூச்சு விடும் ஒலிகூடத் தன்னை டிஸ்ரப் பண்ணுதாம்.அதனால் தான் ஒரு பெண்ணோடு பழகி உடலுறவு வரை செல்ல தனக்குக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் தேவைப்படுகிறதாம்.அதனாலோ என்னவோ தற்போது தனக்கு காதலி என்று யாரும் இல்லையாம்.

தெரப்பிக்குச் சென்றதால் தான் தற்போது normal ஆக இருக்கிறானாம்.தனது social worker உடன் தன்னால் மனம்விட்டுப் பேச முடிகிறதாம்.ஒரு snowball போல தன்னுள் வளர்ந்துவந்த வன்மக் குணம் இல்லாது போய் தன்னால் தன் நிகழ்காலத்தையம் எதிர்காலத்தை நேசிக்கக் கூடியதாக உள்ளதாம். சில வருடங்களில் தான் ஒரு truck driver ஆக இருப்பானாம். ஒரு இரவுப்பறவையாக நீண்ட பெருந்தெருக்களில் தனியாகச் சுதந்திரமாக ஒரு truck driver ஆகப் பயணம் செய்தாலும் தனக்கென்று குடும்பம் அமைத்துக்கொள்ள ஆவலாக இருக்கிறானாம்.தன்னைப் போன்றவர்களுக்கு குடும்பம் மிகவும் அவசியமாம் அதுவும் முக்கியமாகத் தன் தாய்க்கு குடும்பம் என்றால் என்னவென்று உணர்த்தும் அவசியம் தனக்குண்டாம்.


குறிப்பு : Dón't Tell - The Sexual Abuse of Boys என்ற புத்தகத்திலுள்ள பல உண்மைக் கதைகளில் ஒன்றே Paul ன் கதை.Michel Dorais ஆல் French ல் எழுதப்பட்ட இந்தப் புத்தம் Isabel Denholm Meyer ஆல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Monday, September 10, 2007

Paul ன்ர கதையை எப்பிடிச் சொல்றது?

Sexual abuse ஆ ? ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்று நானும் நினச்சதில்ல உங்களில் சிலரைப் போல. ஆனால் Paul ன் கதையை வாசிச்ச பிறகு என்னால அதை உங்களுக்குச் சொல்லாமலிருக்க முடியேல்ல. இதையெல்லாம் ஏன் எழுதுவான்? என்ன லாபம் என்று கேக்க வேண்டாம். இதைத்தான் இதை வாசிக்கிறது மூலம் உங்களால யாராவது ஒருவர் abuse பண்ணுப்படாமல் போகலாம் அல்லது ஏற்கனவே பாதிக்கப்ட்ட ஒருவருடன் மனம் விட்டுப் பேச இந்தப் பதிவு உங்களுக்கு உதவலாம்.

அவனைப் பார்த்தால் வெகு சாதாரணமாத்தானிருப்பான். ஆனால் அவனுக்குள் பல போராட்டங்கள், பல விடை தேடிச் சலித்துப்போன கேள்விகள், குழப்பங்கள் என்று கிட்டத்தட்ட தன்னையே வெறுத்து துன்புறுத்திப் பார்க்கும் ஒரு மனநிலை.தன்னைத்தானே பச்சோந்தி என்று குறிப்பிடுகிறான் அவன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ தன்னைத் தன் பலவீனங்களோடும் இயலாமைகளுடனும் ஏற்றுக்கொள்வார்களோ என்ற குழப்பத்தில் தன்னுடைய உண்மைத் தன்மையை வெளிக்காட்டாமல் தன்னை ஒரு சாதாரணனாகத் தான் மற்றவரிடத்தில் காட்டிக்கொள்வதாகச் சொல்கிறான்.



பிறந்தது முதல் 2 ஆண்டுகள் அம்மம்மாவுடனும் பின்னர் 7 வயது வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு உறவினர்களுடனும் வளர்ந்தான்.அதாவது வளர்ந்துவரும் ஒரு செடியை இடம் மாற்றி மாற்றி நட்டால் என்ன நடக்கும்?? அத்திவாரம் அடிக்கடி ஆட்டம் காணுமில்லைாயா? அவன் பந்தாடப்பட்டான்.இறுதியில் 7 வயதில் foster home ல் சேர்க்கப்பட்டான்.அங்கு போனதும் அவன் இவ்வளவு நாளாக யாரை அம்மா என்று நினைத்தானோ அது தன் உண்மையான அம்மா இல்லையென்ற உண்மை அவனுக்குத் தெரிய வருகின்றது.அப்பா யாரென்று ஆரம்பித்திலிருந்து அவனுக்குத் தெரியாது தற்போது அம்மா என்ற உறவும் பொய்த்துப்போக தன்னை தன் உறவினர்கள் எல்லாம் ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவர்களை வெறுக்கத் தொடங்குகிறான்.அம்மாவாக நினைத்தவர் அன்ரியாகிவிட அன்ரியாக இருந்தவர் அம்மா என்றாக அவனுக்கு உறவுகள் புரிபடவில்லை.

இந்நேரத்தில் அம்மாவின் நண்பராக அறிமுகமாகிறார் X. பழைய உறவுகள் பொய்த்துப்போக புதிதாக வந்த X ஐ ஏனோ Paul க்குப் பிடித்துப்போய்விட X அவனுடைய நண்பனாக ஆசானாக Mentor ஆக தன்மேல் அக்கறை காட்டும் ஒரோயொரு ஜீவனாக நினைக்கிறான் Paul.X Paul ஐ விளையாட அழைத்துச்செல்வது வழக்கம்.அப்படிச் சென்றபொழுது ஒரு பூங்காவில் வைத்துத்தான் முதன்முறையாக Paul ஐ கிச்சு கிச்சு மூட்டுவது போல தொடங்கிப் பின்னர் எல்லை மீறியுள்ளது.Paul க்கு ஓரளவுக்கு நடப்பது என்னென்று விளங்கினாலும் தனக்கு நெருக்கமாகவுள்ள ஒரேயுறவையும் இழக்க விரும்பாமல் வெறும் விளையாட்டுப் போல என்று ஆரம்பத்தில் சகித்திருக்கிறான். தனக்கது violent touching ஆகத் தெரியாததாலும் X தானாகவே ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவார் என்று நினைத்தும் அவர் மது அல்லது போதை வஸ்துவின் வேலையால் தன் கட்டுப்பாட்டை இழந்து நடந்துகொள்கிறார் போல என்று பல காரணங்களைத் தனக்குத்தானே அறிவுறுத்தியாகச் சொல்கிறான் ஏனென்றால் அவனிருந்த சூழ்நிலையில் X உடன் வெளியில் போய் வருவதுதான் அவனுக்கு இருந்த ஒரு பொழுதுபோக்கு.



முதல் தடவை நடந்தபோது காரணங்களைத் தேடியவனுக்கு 2ம் முறையும் X நடந்துகொண்ட விதம் அப்படி நினைக்க விடவில்லை.X வேணுமென்றே அப்படிச் செய்கிறார் என்பதை அவன் புரிந்துகொண்டான்.இருந்தாலும் Paul X ன் மீது கொண்டிருந்த பாசம் அவனைக்கட்டிப் போட்டது.இப்போதும் கூட அவனால் X ஐக் குற்றம் சொல்ல முடியவில்லை.அவனைப் பொறுத்தவரைக்கும் X தன் மீது அளவு கடந்த பாசம் செலுத்தியவர்.மீண்டும் சில நாட்கள் இது தொடர Paul தன் மறுப்பை மெல்ல வெளிப்படுத்தினான்.அதன் பிறகு X அவனை வெளியே அழைத்துச்செல்வதில்லை அதனால் Paul மிகவும் கவலைப்பட்டான்.தன்னை X ஓதுக்குவதையும் தன்னோடு கதைக்காமலிருப்தையும் அவனால் தாங்க முடியவில்லை.ஒரு பக்கம் தனக்கு sexual abuse லிருந்து விடுதலை என்று மகிழ்ச்சியாகவும் X ஐப் பார்க்க முடியாது போனது கவலையாகவும் இருந்ததாம்.

X foster home க்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.Paul அவனை நேசித்ததாலும் தன் குடும்பத்தின் முன்னிலையில் அவன் அவமானப்படக்கூடதென்றும் அவன் ஜெயிலுக்குப் போகக்கூடாதென்றும் நினைத்து Paul தனக்கு நடந்ததை யாரிடமும் சொல்ல முற்படவில்லை.கொஞ்சம் வளர்ந்தபின் பாடசாலையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் குழந்தைகளோடு உறவு வைத்துக்கொள்ள விரும்புவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது தன்னால் அங்கு இருக்க முடியாது போனதால் தான் பாத்றூமில் போய் நின்றுவிட்டு வந்தானாம்.அவனுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் உருவாகிய பொழுதுதான் அவன் புரிந்து கொண்டான் தான் மட்டுமல்ல தன் நண்பர்களும் நெருங்கிய உறவினர்களாலயே sexual abuse க்குள்ளாக்கப்பட்டிருப்பதை. இதை விட ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அவனுக்கு. தன்னுடைய தாத்தாவே ஒரு sexual abuser என்றதும் அவர் தன் மகள்களையே sexual abuse க்குள்ளாக்கியதையும் அவர்தான் தன் தந்தை என்பதைத் தெரிந்துகொண்டதிலிருந்து அவன் போக்கே மாறிவிட்டது.


-இப்போதைக்கு முடியாது..தொடரும்-

Sunday, September 02, 2007

திருவடியார்களுக்குத் திருவணக்கம்!!!

தாயகப்பறவைகள் ஐப்பசி இதழ் சமுதாயக் கண்ணோட்டத்துக்கு எழுதியது.

"திருவடியார்களே, இன்றைய திருநாளில் நாமனைவரும் ஆண்டவன் சந்நிதானத்தில் கூடியிருக்கிறோம். ஒரு திருப்பணிக்காக அதிஸ்டலாபச்சீட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குப் பிரியமானவர்களின் பெயர்களில் அதிஸ்டலாபச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் அவர்கள் அதிஸ்டசாலிகளாயின் ஒரு camry அவர்கள் வசமாகும் . திருப்பணிக்காக ஒவ்வொருவரும் 10 டொலர்களை அளித்து அதிஸ்டலாபச்சீட்டை வாங்கிக்கொள்ளுங்கள்"

அப்பா : அறிவிப்பாளர் சரியில்லை.

அம்மா : பின்ன நான் போய்ச் சொல்றன் ஒலிபெருக்கியை உங்களிட்டத் தரச்சொல்லி

அப்பா : ஓ பின்ன நானிவரை விட வடிவாக் கதைப்பன்

அம்மா : சுமி அர்ச்சனை ரிக்கற் வாங்கிக்கொண்டு வாங்கோ .அப்பா 10 டொலர் குடுத்துவிடுங்கோ.சகானா அக்காவோட கூடப்போய் ரிக்கற் எடுத்துக்கொண்டு வாங்கோ.

சகானா : அப்பா 15டொலர் தாங்கோ 5 டொலர் ஐஸ்கிறீம் வாங்க.

அப்பா : வந்த உடனயா முதல் ரிக்கற்றை வேண்டிக்கொண்டு வாங்கோ இரண்டு பேரும். வீட்டில ஒரு துரும்பை எடுத்து அங்கால போடச்சொன்னா காய்ச்சல் தடிமன் எல்லாம் வரும்.ஐஸ்கிறீம் ஐ கண்டால் அதெல்லாம் எங்க போகுதோ தெரியேல்ல.

சகானா: ம்.

நான் : ஒரு அர்ச்சனை ரிக்கற் தாங்கோ. (10 டொலர் ஐ குடுக்கிறன்)

ரிக்கற் விற்பவர் : இன்றைக்கு ரிக்கற் 11 டொலர்.

நான் : வழமையா 10 டொலர்தானே?

ரி.வி. திருவிழா நேரம் ரிக்கற் விலை கூட.

நான் : அப்ப ஏன் ரிக்கற்ல 10 டொலர் என்று போட்டிருக்கு.

(கோயிலுக்கு 1 டொலர் கூடக்குடுக்க யோசிக்குதுகள் என்ற தோரணையில் முகத்தை உர் என்று வைச்சிருக்கிறார்)

நானும் மனசுக்குள்ள கோயிலும் சந்தையாப் போச்சு.என்று நினைச்சுக்கொண்டு சகானா கொண்டுவந்த 1 டொலரைக்குடுத்திட்டு ரிக்கற்றை வாங்கிக்கொண்டு பெயரை எழுதுவம் என்று குனிய ரிக்கற் வித்தவருக்கு நான் கேள்வி கேட்டிட்டன் என்று கோவம் அதால என்னைத்தள்ளி நின்று எழுதச் சொன்னார் பெயரை.(ரிக்கற் வாங்க பின்னால ஒருதரும் லைன்ல இல்லை).நானும் கோயிலாச்சே என்று வாயை மூடிக்கொண்டு ரிக்கற்றை கொண்டே அம்மாட்ட குடுக்க அம்மான்ர பிரண்ட் கேட்டா:

அ.பி. : என்ன சுமி அர்ச்சனைத்தட்டு எங்க?

நான் : என்ன தட்டு? எனக்குத்தெரியா அவை ஒன்றும் தரேல்ல.

அம்மா : எல்லாத்திலயும் அவசரம். அவை தந்திருப்பினம் நீங்கள் கவனிக்காமல் வந்திருப்பீங்கள் போய் கேட்டு வாங்கிக்கொண்டு வாங்கோ

(கொர்ர்ர்ர்ர் திரும்பவும் அந்த உர் பார்ட்டின்ர போகணுமா நான் )

நான் : நீங்கள் அர்ச்சனை தட்டுத் தரேல்ல.

ர.வி : நீங்கள் கேக்கவேயில்லையே.

நான் 10 டொலர் ரிக்கற்றை 11 டொலருக்கு விற்கத்தெரியும். ஆனால் சின்னப்பிள்ளையள் 10 டொலர் ரிக்கற்றுக்கு அர்ச்சனைத்தட்டும் வருமென்று தெரியாமலிருக்கலாம் என்று குடுக்கவெல்லோ வேணும் என்று மனசுக்குள்ள திட்டிக்கொண்டே ஒரு அர்ச்சனைத் தட்டை எடுத்துக்கொண்டு போய் கோவத்தோட குடுத்தன் அம்மாட்ட.

நான் : இதுக்குத்தான் நான் கோயிலுக்கு வரமாட்டன் என்று சொல்றனான். இங்க வந்தால் எனக்கு கோயிலுக்கு வந்திருக்கிறம் என்ற நினைப்பே வாறேல்ல.

அம்மா : இப்ப ஏன் கத்துவான்? உங்களுக்கு கோயில் வேண்டாம் கடவுள் வேண்டாம் சொந்தக்காரர் வேண்டாம். ஒரு செல்போனும் லாப்ராப் ம் பிரண்ட்ஸ் மட்டும் காணும். வேற ஒன்றும் (ஒருதரும்) தேவையில்லை.நீங்கள் எல்லாம் நாங்கள் இல்லாத நேரத்தில என்ன செய்யப்போறீங்கிளோ தெரியேல்ல.

நான் : காணும் தொடங்காதயுங்கோ இப்ப. நான் சொல்றதில என்ன பிழை? யாரிட்டாவது கேட்டுப்பாருங்கோ இது கோயிலே?. அன்டைக்கு இப்பிடித்தான் உங்கட கல்யாண நாளுக்குக் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்யேக்க அர்ச்சனை செய்து முடிக்க முதல் அந்த ஐயா எத்தின தரம் அங்கால டான்ஸ் பிறக்ரிஸ் பண்ணின ஆக்களைத் திரும்பி திரும்பி பார்த்தவர் என்றும் விளக்கை விழுத்தினவர் என்றும் பார்த்தனீங்கள்தானே. பிறகும் சுருதி தாளம் ஒன்றுமில்லாம அங்க நடக்குற கூத்தை நின்றுப் பார்க்கட்டாம் எங்களை நீங்களும் வெக்கம் இல்லாம நின்று பார்த்திட்டு வாறீங்கள். காசும் வேணும் ஆனால் ஒழுங்கா பக்தியோட அர்ச்சனையும் செய்ய மாட்டினம் அவை அதில இந்த கோயில் நிர்வாகி மாரின்ர லொள்ளு வேற. எல்லாம் உங்களை மாதிரி ஆக்களால வாறதுதான்.கடவுளின்ர நினைப்பு மனசில இருந்தாக்காணும்.உங்களைப்போல கோயிலுக்கு வந்ததான் கடவுளை நினைக்கோணும் என்றில்லை.

அம்மா : காணும் நிப்பாட்டு இது கோயில்.

நான் : நான் நிப்பாட்டுறன் நீங்கள் கஸ்டப்பட்டு ரிக்கற் எடுத்ததுக்கு அர்ச்சனையைச் செய்திட்டு வாங்கோ நாங்கள் இதில இருக்கிறம். அப்பா சகானா வாங்கோ.

அம்மா : அர்ச்சனை செய்தாச்சு வாங்கோ கோயிலுக்குள்ள போய் சுத்திக்கும்பிட்டிட்டு போவம் வீட்ட.

நான் : கோயிலுக்குள்ள சரியான சனம் வாங்கோ வீட்ட போவம்

அம்மா : கோயிலுக்குள்ள போகாமல் வீட்ட போறேல்ல நடவுங்கோ கோயிலுக்குள்ள.

கோயில் நிர்வாகியொருவர் : இப்ப சாப்பாடு குடுக்கமாட்டம். சாமி வெளியிலதான் நிக்குது.

(எனக்கு வந்த கோவத்துக்கு அம்மாவைத்திரும்பி பார்த்து முறைக்க எனக்கு முன்னால நின்றவர் )

ஒருவர் : வோஸ்றூம் போறாக்கள் நடந்து காலுளைஞ்சவை இப்பிடியானவையம் கோயிலுக்குள்ளதான் போகணும் தம்பி.

கோ.நி. : போங்கோ போங்கோ ( அவர் கை காட்டின விதம் என்னவாவது பண்ணித் துலையுங்கோ என்றது மாதிரி)

நான் : அம்மா இதுக்கு மேலயும் நீங்கள் கட்டாயம் கோயிலுக்குள்ள போகோணுமே? இவைக்குக் குடுக்கிற காசை செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு மாசம் மாசம் 30 டொலர் இல்லாட்டா வருசத்துக்கு 250 டொலர் குடுத்தா யாரோ ஒரு பிள்ளை உங்கட புண்ணியத்தில நல்லாயிருக்கும்.

அம்மா : ம் சரி இப்ப டக்கென்டு சுத்திட்டுப்போவம்.

கோயிலுக்குள்ள அப்பான்ர ஊர் ஐயர் ஒராள் நின்டார்.

அப்பா : என்ன ரத்தினய்யா கோயில் இப்பிடியாகிட்டுது. எல்லாரையும் எடுத்தெறிஞ்சு கதைக்கினம் நிர்வாகத்தாக்கள்

ரத்தினய்யா : என்ன தம்பி செய்யிறது. எங்களுக்கும் மரியாதையில்லை. வேற வழியில்லாமல் கடவுள் மேல பாரத்தைப்போட்டிட்டு இங்கயே இருக்கிறன். இது முழுக்க முழுக்க பணத்தை எதிர்பார்த்து நடக்குற மாதிரியாகிட்டுது. றோட்டுக்கொரு கோயில். ஐயர் மாருக்குள்ளயும் போட்டி.நிர்வாகத்துக்குள்ளயும் போட்டி பொறாமை.எங்க போய் முடியுமோ.

அப்பா : சரி ஐயா நாங்கள் போப்போறம்.

ஐயா : சரி தம்பி சந்திப்பம்.

இதோ திரு சரவணபவானந்தன் 20 டொடலர்களையளித்த 2 அதிஸ்டலாலப்சீட்டுகளைப் பெற்றுக்கொள்கிறார் . திருவடியார்களே கோயில் திருப்பணிக்குதவுங்கள்!

Monday, June 11, 2007

நிமிர்வு 2007 ம் தாசீசியஸ் மாஸ்டருடனான சந்திப்பும்

தாசீசியஸ் மாஸ்டரை மாலை 4.30 க்கு நான் நந்தியா மற்றுமொரு நண்பனும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம் ஆனால் லேற் கோச்சி ஒன்றால தாமதாகவே போய்ச்சேர்ந்தோம்.ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் ஏற்கனவே அ.மங்னை அவர்களின் நாடகப்பட்டறை நடந்துகொண்டிருந்தது.வேலை காரணமாக காலையில் நடந்த நாடகப்பட்டறைக்குப் போகமுடியவில்லை.அதே இடத்துக்கு தாசீசியஸ் மாஸ்டரைச் சந்திக்கச் சென்ற போது அங்கே மங்கையையும் பார்வதி மிஸ்சையும் கண்டு கதைத்தபோது சுமதி ரூபனைக் காணாதது நிம்மதியாக இருந்தது:-) கண்டிருந்தால் நாடகப்பட்டறைக்குப் போகாமல் விட்ட குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியிருக்கும்.

மாஸ்டர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.தன் கல்வி தொழில்முறைகளைப் பற்றி நிறையப்பேசினார்.ஆழமான தெளிவான தங்குதடையற்ற பேச்சு.மாஸ'டரைப் பற்றித் தெரியாதவர்கள் பிரபாண்ணாவின் " தாசீசியஸ் பேசுகிறார்...! " ஐ வாசியுங்கோ சரியா.எங்கள் மூவரைப்பற்றியும் கேட்டறிந்துகொண்டு தன் நோட்புக்கில் எழுதி வைத்துக்கொண்டார்.பின்னர் தமிழ்க்குடிலைப்பற்றிய பேச்செழுந்தது.நேரமின்மையால் தமிழ்க்குடிலில் நேரம் செலவழிக்க முடியவில்லை என்றும் தமிழ்க்குடிலை ஒரு 24 மணித்தியால வானொலியாகத் தொடங்கி நியுஸிலான்ட் அவுஸ்ரேலியா தொடக்கம் கனடா வரை தமிழர்கள் செறிந்து வாழும் பாகங்களிலிருந்தும் பலர் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் செயற்திட்டத்தைப்பற்றி்ச் சொன்னார்.கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஆகியிருக்கும் தேத்தண்ணி குடிக்ப்போவமா என்றார்.இல்லை நாங்கள்தான் உங்களுக்குத் தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வந்திருக்கோணும் என்றோம் " ஓ அப்ப கொண்டு வந்தனீங்களா எங்க தாங்கோ தாங்கோ " என்றார் நகைச்சுவையோடு. நாங்கள் நிமிர்வு 2007க்குப் போகவேண்டியிருந்ததால் விடைபெற்றுக்கொண்டோம்.

நிமிர்வு 2007

செல்வி சுபாங்கியும் செல்வன் சிறீயும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வளங்கினார்கள். பொன்.சிவகுமார் அண்ணாவின் நினைவுநாளான மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு நடந்த நிமிர்வு 2007 தமிழ் இளையோரமைப்பைச் சேர்ந்த சர்மி கனடாக் கொடியை ஏற்றி வைக்க ஆரம்பமானது.மேஜர் நித்திலாக்காவின் தாயார் திருமதி.செல்வநாயகம் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து சிவகுமாரண்ணாவின் படத்திற்கு அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்தது அகவணக்கம். அடுத்து செல்வி நிவேதா இராமலிங்கம் " தாய் மண்ணே உனக்கு முதல் வணக்கம் " என்ற பாடலுக்கு வரவேற்பு நடனமாடினார்.தொடர்நது தமிழிளையோரமைப்பைச் சேர்ந்த ஜெனிற் மாணவர் எழுச்சி நாளைப்பற்றிய உரையில் ஆளுமினம் தமிழர்களின் கல்வியில் கத்தி வைத்ததில் தொடங்கி மாணவர்கள் அனைவரும் எமது பிரச்சனைகளை வெளியுலகுக்கு ஓங்கி உரைக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையுட்பட மாணவர் எழுச்சிநாள் பற்றிய பலவிடயங்களைக் கூறிச்சென்றார்.

அடுத்து இடம்பெற்ற நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்தது நிவேதாவின் மாணவர்கள் வழங்கிய "ஆடிப்பாடுவோம் கவலைகள் மறந்தாச்சு புதுக்கவிதையும் பிறந்தாச்சு" என்ற பாடலுக்கான கோலாட்டம்.சிறுமிகள் நன்றாகவே பழக்கியெடுத்திருக்கிறார் நிவேதா.இரண்டு சிறுமிகள் இடையில் தடுமாறினாலும் சமாளித்துக்கொண்டு நல்லதொரு நடன நிகழ்வைத்தந்திருந்தார்கள்.அரங்கு நிறைந்து இருக்கைகள் இல்லாமல் நின்றுகொண்டிருந்தவர்கள் என அரங்கம் நிறைந்த கைதட்டலைப் பெற்றுக்கொண்டார்கள் சிறுமிகள். இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெற்ற போதிலும் எல்லா நிகழ்வுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.என்னைக் கவர்ந் இன்னும் மூன்று நிகழ்வுகள் இளையோரமைப்பினர் வழங்கிய "நிஜம்" என்ற நாடகம். கலாநிதி குலமோகன் ஆசரியரின் மாணவர்கள் வழங்கி "அறுவடை " மற்றும் U OF T மாணவர்கள் வழங்கிய " சிதைப்புக்கள்" என்ற Monologue.

"நிஜம்" யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படும் இன்னல்களைக் கருவாகக்கொண்டது.சமூக நிகழ்வுகளில் அக்கறை கொண்ட திறமையான மாணவர்களின் வாழ்க்கை இராணுவத்தினரால் எப்படி சீரழிக்கப்படுகிறதென்பதை இந்த நாடகத்தின் மூலம் காட்டியிருந்தார்கள்.அப்பா இல்லாத குடும்பத்தை ரியூசன் குடுத்து அந்தப் பணத்தில் தானும் படித்துக்குடும்பத்தையும் காப்பாற்றும் மாணவன் சிவா தன் கண்முன்னே தன் நண்பன் வெள்ளை வானில் கடத்தப்படுவதைப் பார்த்துக்கொதித்துப் போய் அடுத்த முறை இராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையும்போது அவர்களை எதிர்க்கிறான்.இன்னொரு நண்பன் இராணுவத்தினரைப் பார்த்துக் கூழை கும்பிடு போடுகிறான்.அதற்கு சிவா "எங்கட உரிமையை நாங்கள் கேக்க நீ ஏன்டா பூஞ்சிப் பூஞ்சி அவங்களிட்டப் போறாய்" என்று கேப்பான் அதற்கு நண்பனோ "டேய் நாங்கள் இப்பிடியே இருந்தா எப்படா graduate பண்றது " என்று ஆதங்கப்படுவான். அடுத்த காட்சியில் சிவாக்குப்பிடித்த மீன் குழம்பு சமைத்து வைத்துக்கொண்டு காவலிருக்கும் அம்மாவும் படித்துக்கொண்டிருக்கும் தங்கையும்.சிவா கல்லூரியால் வந்த கோலத்தைப் பார்த்துத்தாய் சண்டை போடுவாள் "நீ ஏன் அவங்கட வம்புக்குப் போறாய்? எனக்கு இருக்கிறது நீ ஒரு பிள்ளை " அதற்கு சிவாவோ " அம்மா இஞ்ச வாண எல்லாரும் எனக்கொரு பிள்ளை என்று அழுதா அப்ப ஆர்தாண இவங்களைத் தட்டிக்கேட்கிறது : நீ வீட்டைப் பார்க்கிறாய் நான் நாட்டை நினைக்கிறான்" என்பான்.சிவா சாப்பிட அமரும்போது இராணுவத்தினர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாய் தங்கையின் கண்முன்னே சிவாவைக்கொல்ல தாயாக நடித்திருந்த சுமி ஒரு கத்து கத்தினா ஐயொ எனக்குக் கண்ணால தண்ணி வந்திட்டு அப்பிடியொரு நடிப்பு. பல்கழைக்கழக மாணவர்களுடைய பெயர் விரிவுரையாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் வளாகச்சுவரில் ஒட்டப்பட்டது பாடசாலை மாணவி இராணுவத்தினரால் கடத்தப்பட்டது என அனைத்து நிகழ்வுகளையும் பிரதிபலித்த இந்த " நிஜம் " சிறப்பான நெறியாள்கையுடன் அரங்கேறப்பட்டிருந்தது. நாடகத்தின் முடிவில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட கடத்தப்பட்வர்களின் பெயர் தாங்கிய அட்டைகளை ஏந்திய படி அனைவரும் நிற்க அவர்கள் கொல்லப்பட்ட கடத்தப்பட்ட விபரங்கள் வாசிக்கப்பட்டது.இந்த நாடகத்தின் சிறப்பு என்னவெனில் நாடகம் முழுதும் ஆங்கிலத்தில் Narrator ஒருவர் திரைக்குப்பின்னால் நின்று வாசித்ததுதான்.நிமிர்வுக்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் சொல்ல வந்த செய்தி நிச்சயமாகச் சென்றடைந்திருக்கும். இந்த நாடகத்தை இன்னும் பல சர்வதேச மேடைகளில் ஏற்றவேண்டும்."கொண்டாட்டம்" போன்ற பல்கலாச்சார மக்கள் கூடும் நிகழ்வுகளில் எல்லாம் இப்படியான நாடகங்களுக்கு இடம்கொடுத்தால் எம் பிரச்சனைகளை இலகுவாக மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

"அறுவடை "

நகைச்சுவையாகப் பலசேதிகளைச் சொல்லிற்று.

இரண்டு வயோதிபர்களின் உரையாடலோடு தொடங்கியது.அவர்கள் 'Donut' ஐ சீனிவடை என்று கதைத்ததை நினைத்தால் இப்பவும் சிரிப்பு வருது.அறுவடை என்று எழுதியதை இங்கு தமிழ் படிக்கும் ஒரு சிறுவனை வாசிக்கச்சொல்வார்கள் அவன் அருவடை அறுவாடை என்று திக்குவான் அப்பொழுது அங்கு வரும் ஒரு அக்கா முத்தமிழைப் பற்றி அழகாகச்சொல்வார் அப்ப அங்கு வரும் இன்னொரு சிறுவனும் சேர்ந்துகொண்டு சும்மா பிலம் காட்டதயுங்கோ எங்களுக்கும் செந்தமிழ் தெரியும் இப்ப பாருங்கோ " நீ முத்தமொன்று குடுத்தால் முத்தமிழ் வெக்கப்பட்டுச் சிரித்தால் செந்தமிழ் பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்" என்று டான்ஸ் ஆடுவாங்கள் 2 பேரும். அந்த அக்கா சொன்ன வரிகளில் ஒன்று "எங்கள் வயலில் இப்பொழுது விதைக்பட்டிருப்பது நெல்மணிகளல்ல எம்முறவுகள்".அறுவடையின் இடையில் இரண்டு நடனமும் இடம்பெற்து" ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை" மற்றும் " ஆண்டாண்டு காலமதாய் நாமாண்டு வந்த பூமி ".

அடுத்து U OF T மாணவர்கள் வழங்கிய "சிதைப்புக்கள்". கல்லறையிலிருந்து எழுந்து வரும் நால்வர் தங்களுடைய கதையைச் சொல்லுவதா அமைந்திருந்தது இந்த Monologue. ஒரு மீனவர் தன் அன்பான மனைவியும் குழந்தைகளும் தானில்லாமல் என்ன அல்லல் படுகிறார்களோ எனத்தொடங்கி "எங்கள் கடலில் மீன் பிடிக்க எங்களுக்கு உரிமையில்லையாம் கொண்டிட்டாங்கள் என்னைக் கொண்டிட்டாங்கள்" என்று அழுதழுது தன் கதையைக் கூறினார்.உணர்ச்சியோடு கதைத்த அவர் திடீரென்று பேப்பரைப் பார்த்து வாசித்தது அவருடைய வேகத்தைக் குறைத்துவிட்டது.
அடுத்து 15 வயதுப் பள்ளி மாணவியொருத்தி தன் கற்பு கயவர்களால் சூறையாடப்பட்டதென்பதை அதிக வார்த்தைகளின்றித் தன் நடிப்பாலும் "வலிக்கிறது வலிக்கிறது" என்று நிஜமான வலியோடும் கதறினார்.மற்றுமொரு மாணவன் தன் கல்விகற்கும் உரிமை பறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவனுடைய கதை.அடுத்து ஒரு பெண்போராளியின் கதை(?).

அதற்குப் பிறகும் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட "நிமிர்வு 2007 " மலரும் இன்னும் கைக்கு வரவில்லை கிடைத்ததும் அதுபற்றிச் சொல்கிறேன்.[படங்கள் விரைவில்....]

வாசு சின்னராசா மாஸ்டரின் மாணவிகள் "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லைப்போராடுமா" என்ற பாடலுக்கு வழங்கிய நடனத்தாலோ என்னவோ இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்துவி்ட்டது.உங்களுக்காக.

Tuesday, May 01, 2007

இந்தக்காதல் இருக்கே...

இந்தக்காதல் இருக்கே...சீ அப்பிடியெல்லாம் டிஆர் மாதிரி விளக்கம் சொல்லமாட்டன் நான். ஏனென்றால் எனக்கே இந்தக்காதலைப் பற்றி ஒன்றுமே விளங்கேல்ல.காதல் என்றால் உண்மையா என்ன?அது யாருக்கு வரும்? எப்ப வரும்? ஏன் வரும்? எத்தpனை முறை வரும்? அப்ப அது எப்பிடி தோற்றுப்போகும்? ஏன் எப்பிடித் தோற்கும்? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா?இல்லாட்டா நீங்களும் என்னைப்போலத்தான் யோசிக்கிறீங்கிளோ?

சத்தியமா எனக்குக் காதல் என்னென்று தெரியாது. கூட விளையாடின பக்கத்து வீட்டுப்பெடியன்ல ஒரு தனிப்பாசம் இருக்குமே. நமக்குள்ள என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் மற்ற நண்பர்கள் மத்தியில் அவனை விட்டுக்கொடுக்காம அவன் உண்மையாவே ஏதும் தப்புச் செய்திருந்தால்கூட அவனுக்காக வாதாடுவமே அது காதலா? அல்லது 10 வயசில எங்களோடு போட்டிக்கு படிச்சவன் ஒருத்தன் மேல ஒரு தனிக்கவனம் இருக்குமே.

என்னடா இவன் நாம எந்தப் போட்டிக்குப் போனாலும் வாறான்.ஒன்றில் அவன் முதலாவதா வருவான் இல்லாட்டி நாமதான் முதலாவது வருவம்.இருவரில் எவர் முதலாவதா வந்தாலும் வெளியில முறைச்சாலும் உள்ளுக்குள்ள சரி பறவாயில்லை அவன்தானே முதலாவதா வந்திருக்கிறான் என்று ஒரு சின்ன சந்தோசம் வந்து மனசின் மூலையில ஒட்டுமே ..அதான் காதலா?

இன்னும் கொஞ்சம் வளர்ந்தபிறகு ரியூசனில் படிக்கிற பெடியங்களில ஒருத்தன் சரியா நாம எந்த மேசையில இருப்பம் என்று தெரிஞ்சு அதற்கு நேரா வந்திருந்துகொண்டு மாஸ்டர் கேள்வி கேக்கிற நேரமெல்லாம் நாம சரியாப் பதில் சொல்றமா இல்லாட்டா உதவி செய்யணுமா என்று ஒழுங்காப் பதில் சொல்லி முடிக்கும் வரைக்கும் ஒரு விதமான ரென்சன்ல இருப்பானே அந்த நேரம் பார்த்து நாம அவனைத் திரும்பிப் பார்த்தா ஒரு நிம்மதிப் புன்னகை ஒளிரும் அவன் முகத்தில..அதான் காதலா?

ரியூசன்ல நடக்கிற வினாடி வினா போன்ற போட்டிகளில் என்னதான் நம்மளோட மல்லுக்கு நின்று கஸ்டப்பட்டுப் போராடி கடைசில பெடியங்கள் தோத்துப் போனா இன்றைக்கு மாட்டினீங்கடா என்று மனசுக்குள்ள நினைச்சுக்கொண்டு அவங்களைத் திரும்பி ஒரு எகத்தாளப் பார்வை பார்க்கும்போது "சரிதான் போடி நீயும் உன்ர தெத்துப்பல்லும்..லுக்கு விட்டதும் காணும் போடி" என்று ஆற்றாமைல திட்டிட்டுப் போனாலும் போற வழியில நம்ம சைக்கிள் ரயர் பஞ்சராகி சைக்கிளை உருட்டிக்கொண்டு போறதைப் பார்த்திட்டு ரியூசன்ல நடந்த போர்மேகம் கலைந்து போனாலும் கொஞ்சம் முறைப்போடயே வந்து தன்ர சைக்கிளைத் தந்திட்டு நம்ம சைக்கிளை வாங்கிக் கொண்டுபோய் ஒட்டிக்கொண்டு வந்து தாறானே...அப்ப தாங்ஸ் என்றும் சொல்லாம ஒரு அசட்டுச் சிரிப்பு வருமே.. அதான் காதலா?

பெண்கள் பருவமடைந்ததும் ரியூசன்ல பெடியங்களோட சண்டை பிடிக்கிறது கொஞ்சம் குறைஞ்சிடும்.தெற்குப்பக்கமாக ரியூசன் முடிஞ்சு போற பெட்டையள் எல்லாம் ஒருநாள் வடக்குப்பக்கமாக போனால் பெடியங்கள் தங்களுக்குள் ரகசியம் பேசுவாங்கள் 'டேய் அந்தக் கொம்பறிமூக்கன் இன்றைக்கு வரேல்லடா அப்ப அதான் போல " என்றிட்டு ஒரு சிரிப்புச் சிரிப்பாங்கள் அப்ப பெட்டையளுக்கு விளங்கிடும் இவங்கள் கண்டுபிடிச்சிட்டாங்கள் போல என்று.பிறகு அந்தப்பொண்ணு ரியூசனுக்குத் திரும்ப வரத்தொடங்கினதும் பெடியங்கள் கொஞ்ச நாளைக்கு மரியாதை குடுப்பாங்கள் என்னத்துக்கெடுத்தாலும் வாய்காட்டாமல் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவாங்கள்.அப்ப நமக்கும் அவங்களில ஒரு மரியாதை வருமே அதான் காதலா?



(டிஸைன் தாயகப்பறவைகள்)

நாங்கள் படிக்கிறது பெண்கள் பாடசாலையில் அவங்கள் படிக்கிறது ஆண்கள் பாடசாலையில் ஆனாலும் ஆமிச் சென்ரியைக் கடக்கிற நேரம் பார்த்துக் கொஞ்சப் பெடியங்கள் பொடிகார்ட் போல வருவாங்களே பிறகு கடைக்குப்போறது போல வந்து நாங்கள் வீட்டுக்குக்கிட்ட போனதும் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு போவாங்களே.
அப்ப மனசில ஒரு பாதுகாப்புணர்வு வருமே அதான் காதலா?

கூடப்படித்தவர்களுடைய வீட்டிலோ அல்லது ஏதாவது தெரிந்தவர்களின் மரண வீட்டில் எதிர்பாராதவிதமாக கூடப்படிக்கிற ஒரு பெடியன் கண்கலங்கி நிற்பதைப் பார்த்ததும் ஐயோ பெடியங்கள் அழமாட்டாங்கள் என்று நினைச்சமே இவன் என்ன இப்பிடி அழுறான் என்று மனசு அவனோடு போய் ஒரு ஆறுதல் வார்த்தையாவது சொல்லணும் என்று அங்கலாய்க்குமே அதான் காதலா?

மீண்டும் ரியூசனில் சந்திக்கும்போதும் இவன் அன்றைக்கு அழுதவன்டி நான் பார்த்தேன் என்று எங்க மற்றப் பெட்டையளுக்குச் சொல்லி நக்கலடிப்பாளோ என்ற எண்ணம் தனியா ஒருபக்கத்தில ஓடிக்கொண்டிருந்தாலும் "அன்றைக்கு அந்த விபத்தில செத்தவர் என்ர அண்ணான்ர பிரண்ட் அவரும் எனக்கு ஒரு அண்ணா மாதிரித்தான் அவர் எனக்கு ஒரு றோல்மோடல் அவருக்கு இப்பிடி ஆனதை என்னால தாங்கிக்கவே முடியல்ல" என்று தண்ணிகுடிக்கப் போன நேரத்திலயோ அல்லது சோக்(Chalk) எடுக்கப் போன இடத்திலயோ அவசரமா சொல்லிட்டு ஓடிப்போவானே அப்ப வாறதுதான் காதலா?

ஒரு வாணி விழாவுக்கோ அல்லது ஆண்டுவிழாவுக்கோ நடைபெறும் நாடகப் பயிற்சியில் தெரியாமல் முதன்முதலாக குடும்பத்தினர் தவிர்ந்த ஒரு ஆடவனின் கை பட்டுக்கொள்ளும்போது இயல்பாக வரும் ஒரு சிலிர்ப்பு."என்னைத் தீண்டி விட்டாய் திரி தூண்டி விட்டாய்" என்று சிம்பு மாதிரி கையைச் சுத்திக்கொண்டு திரியாவிட்டாலும் சித்தார்த் மாதிரி கையைப் போட்டோகொப்பி எடுத்து வைத்துக்கொள்ளாவிட்டாலும் அந்த சிலிர்பு ஒரு நாளாவதிருக்கும். அப்ப அதான் காதலா?

வெளிநாட்டுக்கோ அல்லது வேறு ஊருக்கோ பிரிந்து செல்ல நேரும்போது இதுவரை ரியூசனில் ஒருநாள் கூட வாய்திறந்து கதைக்காம இருந்த பெடியன் கூட ஆட்டோகிறாப்ல (Autograph) "நாங்கள் இதுவரை பேசிக்கொண்டதில்லை இருந்தாலும் பல தடவைகள் உன் நக்கல்களையும் திறமைகளையும் ரசித்திருக்கிறேன் எப்பவும் இப்படி கலகல என்றிருக்க வேண்டும்" என்று இவன் இப்பிடி எழுதுவானா என்று நம்மைக் கொஞ்சம் ஆச்சரியப்பட வைப்பானே அப்ப கடவுளே இவர்கள் எல்லாரையும் மிஸ் பண்ணப்போறமே பேசாம வாழ்நாள் முழக்க இவர்களில் ஒருவனோடயே இருக்க முடியாதா என்ற எண்ணம் வருமே அதான் காதலா?

பல்லாயிரக் கணக்கான மைல்களைக் கடந்து வந்தாலும் எப்பவாவது கூடப்படிக்கிற ஒரு பெடியன் எங்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும்போது ரியூசனில் படித்த யாரோ ஒருவனின் முகம் நினைவில் வந்து எவ்வளவு காலம் கூடப்படித்தோம் என்னதான் அடிபட்டாலும் அவன் இவனைப்போல இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டதில்லையே என்று நினைப்பமே அதான் காதலா?

பதின்ம வயது நிறைவுபெறும் காலத்தில் ஏதோ உரிமையுள்ளவன் போல "அடியே" என்று கூப்பிட்டுக் கதைப்பவனிடமும் சரி வெளிப்பேச்சுக்காக அல்லாது உண்மையாகவே மனசார உரையாடல்களினிடையே "அம்மா" போட்டுக் கதைப்பவனிடமும் சரி தனிக்கவனம் வரும்.கதையிலயே மயங்கி ஐயோ இவன் கதைக்கிறத உயிருள்ளவரை கேட்டுக்கொண்டேயிருக்கணும் போலத் தோணுமே அதான் காதலா? அதேபோல அம்மவைப் பற்றி வெளிப்படையாகவும் அம்மா தனக்கு முக்கியம் என்பது போலப் பேசுபவர்களிடமும் மரியாதை அதிகரிக்கும். இப்படி அம்மாவை நேசிப்பவன் தன் மனைவியையும் நேசிப்பான் என்று எங்கயோ கேட்ட ஞாபகம் வரும் அதால இவனே நமக்குத் துணையா வந்தா நல்லா இருக்குமே என்று நினைக்கிறமே அதான் காதலா?

இப்படி நான் சொன்ன வற்றில் எதைக் காதல் என்றுறது? உங்களுக்கேதும் விளங்குதா? இதெல்லாம் ஆத்மார்தமான உணர்வுகள்.அப்பப்ப இதை நாங்கள் எல்லாரும் அனுபவிக்கிறோம்.சிலவற்றை பப்பி லவ் என்கிறோம் இன்னும் சிலதை வெறும் கவர்ச்சி என்கிறோம். சிலர் உண்மைக்காதல் என்கிறோம். இன்னும் சிலர் Matured love என்கிறோம். இதில எது சரி எது பிழை என்றது யாருக்குமே சரியாத் தெரியாதென்றுதான் நினைக்கிறன்.

காதல் என்றால் என்ன என்று முன்னோர்கள் யாரும் வரைவிலக்கணம் எழுதி வச்சிட்டுப் போயிருந்தால் வசதியாயிருந்திருக்கும். இது அப்பிடி யாரும் செய்யாததலா நாங்கள் என்ன நினைக்கிறமோ அதான் காதல் என்றாயிடுச்சு அதனாலதான் காதல் தோல்வி என்றால் என்ன என்றே தெரியாம இருக்கிறம்.காதல் என்றால் என்ன என்று முதல் தெரிந்துகொண்டு வாறன் நான் வந்து அடுத்த முறை காதல் தோல்வியென்றால் என்ன என்று சொல்றன்.

தொடரும் .......
தாயகப்பறவைகள் சமுதாயக் கண்ணோட்டத்துக்காக எழுதியது.

Friday, April 06, 2007

எனது பார்வையில் அணங்கு, தோற்றமயக்கம், அடையாளம் I & II

போன வருடம் போக முடியாமல் போன உயிர்ப்பூ நாடக அரங்கப்பட்டறையின் நாடக நிகழ்வுக்கு இம்முறை போயே ஆகவேண்டும் என்று போய்ச்சேர்ந்தேன்.சுமதிரூபனின் (சுமதி ரூபன் தான் நம்ம கறுப்பி :-))இயக்கத்தில் மேடையேறப்போகும் நாடகங்கள் என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடனே முன்னிருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன்.வழமையான தமிழ்நிகழ்வில் நடைபெறும் விளக்கேற்றுதல் போன்ற கலாச்சார நிகழ்வுகளெதுவும் இன்றி சிறிய அறிவுப்புடன் முதல் நாடகம் ஆரம்பமானது கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது (விரைவா வீட்ட போகலாம் எல்லோ).அணங்கு அடையாளம் 1 தோற்றமயக்கம் அடையாளம் 2 என நான்கு நாடகங்கள் இடம்பெற்றன. நான்கு நாடகங்களையும் சுமதி ரூபன் இயக்கியுள்ளார்.ஒளி சத்தியசீலன்.ஒலியமைப்பு ரூபன் இளையதம்பி.மேடை உதவி ஈஸ்வரி.

நிகழ்ச்சி நிரலில் இருந்த அதே வசனங்களை அப்படியே அறிவிப்பாளர் ராதிகா சுதாகர் வாசித்தாரர். பக்கத்திலிருந்த சில இளையவர்கள் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் முன்னாலிருந்த ஒரு நடுத்தரவயதுப் பெண்மணி சத்தம்போடாமல் இருக்கச்சொல்ல இளையவர்களும் பேப்பரில இருக்கிறதைத்தானே அவா வாசிக்கிறா என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து கதைத்து முடித்தார்கள்.

முதலாவது நாடகமான அணங்கு ஆரம்பமானது.பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து குழந்தைகள் ஆரவாரப்படும் சத்தம்.உடனே சிலர் அமைதியாகவிருங்கள் நாங்கள் மியுசியத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம்...சத்தம்போட்டுக் கதைக்கக்கூடாதென்றார்கள்.மியுசியத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ணகி சிலை சீதையின் சிலை மணிமேகலையின் சிலை போன்றன இருந்தன.அந்தச்சிலைகளைப் பற்றிக்கேட்ட குழந்தைகளுக்கு அழகாக ஆங்கிலத்தில் அவர்கள் மூவரைப்பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது.கண்ணகியை அறிமுகப்படுத்தும்போது சிறீலங்காவில் சிங்களவர்கள் "பத்தினித்தெய்வ" என்று வழிபடுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது.

அடுத்த காட்சியில் இக்காலப்பெண்ணான சத்யா தன் கணவரான கோபியுடன் மனஸ்தாபப்பட்டு "கோபி என்னை விட்டுப்போகாதயுங்கோ" என்று கெஞ்சுவா பிறகு தனிமையில் என்ர பிரச்சனைகளிலிருந்து வெளியேற என்ன வழி என்று யோசனை செய்து கொண்டிருக்கும்போதே வேறொரு உலகமான கண்ணகி சீதை மணிமேகலை மூவரும் வசிக்கும் இடத்துக்கு வந்துவிடுவார்.

அங்கே கற்பில் சிறந்தது தான்தான் அதனால் தான் தன்னைப் பத்தினித்தெய்வமாக வழிபடுகிறார்கள் என வாதாடுவார் கண்ணகி சீதையோ நான்தான் பாக்கியம் செய்தவள் உலகமே ஏகபத்தினிவிரதன் என்று போற்றும் இராமனைக் கணவனாக அடைந்தவள் என்று கூறுவார்.அதற்கு இக்காலப் பெண்ணான சத்யா இந்தக்காலத்தில எல்லா ஆண்களுமே இராவணன்தான் என்பார்."அப்பவும் என்ர மாமி சொன்னவா கணவனைச் சீலைத்தலைப்பில முடிஞ்சு வைக்கவேணும் என்று நான்தான் தப்பு பண்ணிட்டன் அதான் அவர் அவளிட்ட போயிட்டார் என்று கண்கலங்குவா" சத்யா.அதற்கு கண்ணகி எதற்கும் கவலைப்படாதே நீ போய் உன் கணவரோடு சந்தோசமாக வாழத்தொடங்கு என்று சொல்ல சீதையும் சேர்ந்துகொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக இருப்பாய் என்று கூறுவார்.உடனே மணிமேகலையோ பற்றுக்களைத் துறந்துவிடு அதுதான் உண்மையான சந்தோசமான வாழ்க்கைக்கு அத்திவாரம் என்பார்.

சத்தியா மீண்டும் தன் கணவரின் சந்தேக புத்தியைச் சொல்லி அழ ஆரம்பிப்பா.நாங்கள் வாடகைக்கு இருக்கிற வீட்டுக்காரர் ஒருமுறை பேஸ்மன்றுக்கு ஏதோ திருத்தவென்று வந்தவர் தவறுதலாய் சிகரெட் பிடிச்சுப்போட்டு அடிக்கட்டையை கீழே போட்டிட்டு போட்;டார் அதுக்குக் கோபி யாரோட படுத்தனீ என்று என்னை அடிக்கிறார் என்று அழுவா.உடனே மணிமேகலை சத்யாவைத் துறவுபூணும்படி அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கு கண்ணகியும் சீதையும் சேர்ந்;து "நீ பரத்தவள் குலத்தில் வந்தவள் குலமகள் அல்ல" என்று உரக்கச் சொல்வார்கள்.மணிமேகலை அமைதியாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வேறொரு பெண்ணை நாடிச் சென்ற உன் கணவருக்காக காத்திருந்து அவன் மீண்டும் வரும்போதெல்லாம் உன் சொத்துக்களை வாரி வழங்கி பின்னர் அவனை ஏற்றுக்கொண்டவள் நீ.உன் கணவருக்குப் பாண்டிய மன்னன் தீர்ப்பு வழங்கும்போது நீதிதவறியதற்காக ஒரு மாநகரையே எரித்த சுயநலக்காரியான நீ குற்றமற்றவளா? நீ கற்புக்கரசியா?என்று கேக்க கண்ணகி கூனிக்குறுகி தன் தவறை ஒப்புக்கொண்டு தனக்கான தண்டனை என்ன என்று கேட்பார்.அதற்கு மணிமேகலை உனக்கான கோயில்கள் இடிக்கப்பட வேண்டும்.பட்டிமன்றங்களிலிருந்தும் சரித்திரங்களிலிருந்தும் உன் பெயர் நீக்கப்பட வேண்டும்.நீ பெண்களுக்கான சரியான வழிகாட்டியல்ல என்று தீர்ப்புவழங்குவார்.

அடுத்ததாக சீதையும் தன் கதையின் மறுபக்கத்தைச் சொல்வார்.சூரியன் வானத்திலிருக்கும்போது சூரியனும் சந்திரன் இருக்கும்போது சந்திரனும் நான் கற்புள்ளவள் என்பதற்கு சாட்டிசிக்காரர்கள்.அவர்கள் இருவரும் இல்லாதபோது அக்னி பகவான்தான் என் கற்புக்குச் சாட்சி. தன் தம்பியான லக்ஸ்மணணின் படுக்கையில் கிடந்ப வளையல்களைப் பார்த்துக் கூடப்பிறந்த தம்பியையும் என்னையும் சந்தேகப்பட்டவர்தான் இராமர் என்று ஒப்புக்கொள்வார்.இராமரின் பெயரால் நடக்கும் உயிர்ச்சேதங்கள் நிறுத்தப்படவேண்டும் இராமர் கோயில்களும் உடைக்கப்படவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படும்.

கிட்டத்தட்ட இதே பார்வையில் தமிழ்நதியும் காவியப்பெண்களைக் கேள்விப் படுத்தியிருந்தது உங்களுக்கு ஞாபகம் வருகிறது.



இவற்றையெல்லாம் கேட்டபிறகு சத்யா தன் பிரச்சனைக்குப் பொறுமை விவாகரத்து மறுமணம் தற்கொலை இவையெல்லாம் முடிவாகாது என்ற முடிவுக்குவந்து துறவுதான் சிறந்த வழி எனத் தீர்மானித்துக் கண்ணகி சீதை இருவரையும் அழைத்துக்கொண்டு மணிமேகலையிடம் போய்ச் சேர்ந்து தியானத்தில் ஈடுபடுவார்கள்.அப்பொழுது மணிமேகலையின் தியானத்தில் உதயகுமாரன் தோன்றுவார்.தியானத்திலே மணிமேகலைக்கும் உதயகுமாரனுக்குமான இடையில் இடம்பெறும் உடலுறவு மிக அழகான நடன அசைவுகளால் சித்தரிக்கப்பட்டதுதான் இந்த நாடகத்தின் சிறப்பே."காமகோள" சுதர்சன் துரையப்பாவின் உதிவியோடு இந்த நடனத்தை அமைத்தவரும் மணிமேகலையாகப் பாத்திரமேற்ற தர்சினி வரப்பிரகாசம் தான்.அணங்கு நாடகத்தில் மிகச்சிறப்பான வேடம் தர்சினிக்குத்தான் வாய்த்திருக்கிறது.


உண்iமாயாகவே மணிமேகலை இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றும் சாந்தமான முகவமைப்பு தர்சினியினுடையது.இக்காலப்பெண்ணாக நடித்த சத்யா தில்லைநாதன் கண்ணகியாக யசோதா கந்தையா சீதையாக பவானி சத்யசீலன் உதயகுமாரனாக றெஜி இமானுவல்பிள்ளை ஆகியோரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்கள்.

அடுத்ததாக அடையாளம் 1 என்ற ஒரு வித்தியாசமான நாடகம் இடம்பெற்றது.2300 வருடங்களுக்கு முதல் கிரீக் நாட்டுக் கவிஞரான நுரசipனைநள என்பவரால் ஆநனநய என்ற நாடகத்தின் பாதிப்பாக கனடாவில் அதிகமாக நிகழும் மனவுளைச்சலால் பாதிக்கபட்ட ஈழத்துத் தமிழ்ப்பெண்களின் தற்கொலை பற்றிச் சொல்கிறது இந்த நாடகம்.

ஆண் பெண் உறவின் அடையாளத்தைக்குறிக்க மேடையின் ஒரு மூலையில் சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மொழி இனம் சாதி என்ற எந்தப்பாகுபாடுமின்றி மனிதன் என்ற இனம் மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற அங்கலாய்க்கும் ஒரு பெண் தன் கதையைச் சொல்கிறாள்.ஊர் ஊராய் ஓடி இந்த உடம்பில உயிரைத்தக்க வைக்கப் பாடுபட்டு இறுதியில் திருமணம் என்றபெயரில் ஒரு சித்திரவதைக்கூடத்துக்கு அனுப்பப்படுகிறாள்.அனுபவங்கள் வெறுமையும் கொடுமையுமாகவே அமைந்துவிடுகிறது.

சில குழந்தைகள் குதூகலமாகச் சிரித்து "ஓரம்மா கடைக்குப்போனா ஒரு டசின் பென்சில் வாங்கிவந்தா அதன் நிறமென்ன" என்று விளையாடுவதைப் பார்த்ததும் தானும் சின்னவயதில் இப்படித்தானே சிரித்துச் சந்தோசமாக இருந்தேன் என்று நினைத்துப்பார்க்கிறாள் அந்தப்பெண்.அப்பொழுதுதான் அவளை முதன் முதலாகப் பெண் என அடையாளம் காட்டுகிறது சித்தப்பா என்ற உறவு."சித்தப்பா விடுங்கோ என்னை விடுங்கோ" என்று திமிறி ஓட முடியாமல் தனக்குள்ளே அழும் அந்த அழுகை" பார்வையாளர்கள் எல்லாரையும் ஒருமுறை உலுக்கியிருக்கும்.

இந்தநாடகம் சுமதி ரூபனின் தனிநடிப்பாலாமைந்தது.அவரே பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் பின்னர் அந்தப்பெண் படும் வேதனையை வெளியே இருந்து பார்க்கும் மக்களாகவும் நடித்தார்.ஆண்கள் போராடப்போனால் வீரமென்று போற்றும் அதே சமுதாயம்தான் பெண்கள் போராடப்போனால் குடும்பப்பிரச்சனைகள் போன்றவற்றையே முதன்மையாக்கிப் பேசவும் செய்கின்றது என்றும் பின்னர் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு பெண்ணின் தற்கொலைக்கான காரணத்தை எப்படி பலர் பல விதமாகத் திரித்துக் கதைப்பார்கள் எனவும் தெளிவாகத் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார் சுமதி ரூபன்.

1.அந்தப்பிள்ளையை ஊரில ஆமிக்காரர் கொஞ்சநாள் பிடிச்சு வச்சிருந்தவங்களாம் அவங்கள் அந்தப்பிள்ளையை என்ன செய்தாங்களோ யாருக்குத் தெரியும்..முதல் பிள்ளை பிறந்நததில இருந்தே ஒரு மாதிரித்தான் இருந்தது பாவம் இப்பிடி அநிநாயமாச் செத்துப்போச்சு.

2.இல்லையே நான் வேற மாதிரியெல்லோ கேள்விப்பட்டனான் என்று தற்கொலைக்கு இன்னொரு காரணம் கற்பிக்கப்படும்.

பின்னர் மின்னல் விழுந்து எரிஞ்சு நான் சாகமாட்டனே.ஆற்றில குதிச்சுச் மூச்சுத்திணறிச் சாவமோ என்று தற்கொலைக்கான பல வழிகளையும் யோசித்து விட்டு "ஐயோ என் குஞ்சுகள் பாவமே" என்று அரற்றுவாள்.அப்பொழுது இன்னொரு பெண்குரல் இந்தப்பெண்ணைச் சமூகநலமையமொன்றில் உதவி பெறும்படி அறிவுறுத்தும்.அதற்கு இந்தப்பெண் அப்ப கல்யாணம் என்றது பொய்யா?? எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை எனக்கு என்ன செய்யிறதென்று தெரியும் என்பாள்.தன் குழந்தைகளை அழைத்து " அம்மா சொன்னாக் கேப்பிங்கள் தானே..அம்மா உங்களுக்கு நல்லதுதானே செய்வன்" என்று சொல்லும்போதே தன் குழந்தைகளின் முகத்தைப்பார்த்ததும் மீண்டும் சாக மனம் வராது தன் குழந்தைகளைக் கொஞ்சுவாள்.தன் மகளைப் பார்த்து அம்மா இல்லாமல் நீ வளரமாட்டாய் உன்னைச் சீரழிச்சிடுவாங்கள் என்று சொல்லும்போது மகளாக நடித்த அந்தச் சின்னப் பெண்ணின் கண்ணில் பலநூறு கேள்விகள்.சந்தோசமான உலகத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன் என்று சொல்லிக் குழந்தைகளையும் தன்னோடு மரணத்துள் திணிப்பதாக முடிகிறது அடையாளம் 1. ஏற்கனமே சுமதி ரூபனின் குறும்படமொன்று சிறுமியொருவர் வீட்டில் வாடகைக்கிருக்கும் ஒரு அண்ணாவால் பாலியல் வதைக்குள்ளாவது பற்றியும் மற்றொரு குறும்படமான "மனுசி" பெண்கள் சில ஆண்களால் ஒரு இயந்திரமாகப் பார்க்கப்படுவது பற்றியும் பேசியிருந்தன.மீண்டும் அவருடைய அடையாளம் 1 என்ற இந்த நாடகம் கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் நடக்கும் பெண்கள் பிரச்சனைகள் பற்றி எடுத்தியம்புகிறது.இந்த நாடகத்தைப் பார்க்கும்போது உண்மையாகவே தன் குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களுக்கு அந்த முடிவை எடுக்க எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்..அந்த முடிவை எடுக்கு முன்னர் அவர்களுடைய மனதில் எத்தனைவிதமான போராட்டங்கள் நடந்திருக்கும் என்று கண்முன்னே காணக்கூடியதாகவிருந்தது.


தோற்றமயக்கம்

நான்கு நாடகங்களிலும் என்னை மிகவும் கவர்ந்தது தோற்றமயக்கம் தான். என்னை மட்டுமல்ல அநேகமானோரைக் கவர்ந்து என்று சொல்லலாம் காரணம் இந்த நாடகத்தில் பங்கேற்று நடித்த சத்யா தில்லைநாதன் அபிராமி சஞ்ஜெய் பவானி சத்யசீலன் மூவரும் போட்டி போட்டிக்கொண்டு நடித்ததுதான்.இந்த நாடகம் யுஅநசiஉயn டீரககயடழ என்ற நாடகத்தின் தழுவல். நாடகம் ஆரம்பமாக முதலே கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறும் என்று சொல்லப்பட்டதால் சுமதி ரூபன் அப்படி யாரைத் திட்டப்போறா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால் சீதையாக அணங்கு நாடகத்தில் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த பாவனி சத்யசீலன் இதில் தையல்காரியாக வெற்றிலை போட்டுக் குதப்பியபடி ஏத்திக் கட்டிய புடைவையுடன் "நாசமாப்போவான் கோதாரி விழ" என்று திட்டிக்கொண்டே வந்தா மேடையில.எனக்கு வேற 10 தரம் அண்ணா போன் பண்ணிட்டான் வெளியில வரச்சொல்லி..பேசமா எழும்பிப்போவமா என்று யோசிச்சுக்கொண்டிருக்கும்போதே தையல்காரியின் வேலைக்காரப்பெண்ணாக சத்யா வந்தார்.சத்யாவின் பரட்டைத் தலையும் வாய் சுழிப்பும் கண் பார்வையும் கழுத்தைத் திருப்பி திருப்பி ஒரு மாதிரிப் பார்ப்பதுவும் என்னை இருக்கையை விட்டு எழும்ப விடேல்ல.சத்யா எங்க இருந்துதான் இந்த நடிப்பைக் கற்றுக்கொண்டாரோ தெரியவில்லை.நடிப்புக்கா துளியும் கஸ்டப்பட்டதாக தெரியவில்லை ...இயல்பான நடிப்பு.

இந்நாடகத்தின் கதை மிகவும் சுருக்கமானது.ஒரு பணக்காரக் கிழவியின் வீட்டு அலுமாரியில் இருக்கும் சிவிப்புச்சீலையைக் களவெடுத்து விற்றுப் பணமாக்குவதுதான் தையல்காரியின் நோக்கம்.சத்யாவுக்குத்தானும் களவெடுக்கப் போகவேண்டுமென்றாசை ஆனால் சத்யா சின்னப்பெண் என்று அவருடைய முதலாளியம்மா சத்யாவைத் தன்னுடன் வரவேண்டாமென்று சொன்னதும் சத்யா மூஞ்சையத் தூக்கி வச்சுக்கொண்டிருப்பா.சத்யாவைச் சிரிக்க வைப்பதற்காக முதலாளியம்மா "ரசனிக்காரன்ர படம் ஓடுதாம் பார்க்ப்போவமே" என்று கேக்க சத்யா கி கி என்றொரு சரிப்புச் சிரிப்பா அதைக் கேட்ட முழுப்பேருக்கும் சிரிப்புத்தான்.முதலாளியம்மா றேடியோவ ஒன் பண்ண முதலே திரைக்குப்பின்னாலிருந்து பாட்டு ஒலிக்கத் தொடங்கிவிட்டது. " ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று பாடல் ஒலிக்கும்போதே சத்யா தும்புக்கட்டையை எடுத்துக்கொண்டு டான்ஸ் ஆடி ஆடி வீட்டைக் கூட்டுவா.ஏமாளிப்பெண்ணாக ஒரு குழந்தையின் குதூகலத்தோடு முதலாளியம்மாவையே சுற்றிவரும் பெண்ணாக சத்யா திறம்பட நடித்துள்ளார்.தையல்காரியின் நடிப்பும் அவர் பிரயோகிக்கும் "சிங்காரி அடி சக்கையென்டானாம்" இப்படியான வார்த்தைகளும் தலைக்;குக் குளித்துவிடடு வரும் வேலைக்காரப் பெண் சத்யாவைத் தன் பிள்ளைபோல ஓடிக்கலோன் பவுடர் எல்லாம் போட்டு விடுவது சத்யா ஒவ்வொரு நிமிசத்துக்கும் "நானும் வரட்;டே இரவைக்கு" என்று கேட்பதும் பார்வையாளர்களின் மத்தியில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டேயிருந்தது.



முதலாளியம்மாவுக்கும் வேலைக்காரப்பெண்ணுக்கும் இடையில் களவெடுக்கப்போக கூட்டுச்சேர வரும் ஊரிலுள்ள இன்னொரு பெண்ணாக அபிராமி சஞ்செய் நடித்திருந்தார்.அபிராமிக்கு இதுதான் முதல் மேடையனுபவம் என்பது நம்பமுடியவில்லை.சிறப்பாக நடித்திருந்தார்.சத்யாவை விட்டிட்டுத் தானும் தையல்காரியும் சீலையைக் களவெடுக்கப்போகலாம் என்பது அபிராமியின் ஐடியா.அதற்காகச் சத்யாவை சத்யாவின் வீட்டுக்குப் போகச்சொல்லிவிட்டு அன்றிரவு அபிராமியும் தையல்காரியும் களவெடுக்கப்போக ஆயத்தமாக இருப்பார்கள்.அப்பொழுது சத்யா அரக்கப் பரக்க கையில் ஒரு பார்சலுடன் ஓடி வருவா வந்து "முதலாளியம்மா களவெடுக்கப்போகவேண்டாம் அங்க நிறைய ஆக்கள் நிக்கினம்" என்று சொல்லிட்டு "முதலாளியம்மா இதில ஒரு சீலையிருக்கு இதை நானுங்களுக்கு விக்கப்போறன்" என்று சொல்லவே அபிராமி தையல்காரியை இழுத்துக்கொண்டு போய்.."பெட்டையப் பார்த்திங்கிளே ஆருக்குக் கதை விடுறாள் கச்சிதமாக் காரியத்தை முடிச்சிட்டு வந்து இப்ப எங்களை ஏமாத்தப் பார்க்கிறாள்..கையில பார்சலைப் பார்த்திங்கிளோ அவள் அங்க போய்ச் சிவப்புச்சீலையை எடுத்திட்டாள்" என்று தையல்காரியிட்டச் சொல்லவும் அவாவும் அதை நம்பி ஆத்திரத்தில சத்யாவைத் திட்டிப்போட்டு பக்கத்தில கிடந்த அயன்பொக்ஸ் ஐ எடுத்துச் சத்யான்ர காதருகில சுட்டுப்போடுவா.சத்யாவும் "ஏன் என்னைப் பேசுறீங்கள் ஏன் என்னைப் பேசுறீங்கள்" என்று பிதற்றிக்கொண்டு மயங்கிடுவா.அபிராமி பார்சலைப் பிரிச்சுப் பார்த்தால் அதில சிவப்புப் புடைவை இல்லை மாறாக வேறொரு புடைவைதானிருக்கும்.தையல்காரி சத்யா பேச்சு மூச்சில்லாமக் கிடக்கிறதப் பார்த்திட்டு "என்ர ராசாத்தி எழும்படி ஐயோ நான் என்ன செய்வன்" என்ற கதறுவா.."ஆராவது வாங்கோவன் என்ர செல்லத்தைக் காப்பாத்துங்கோ" என்று கத்துவா அபிராமி அந்த இடத்தை விட்டு ஓடிடுவா.


அடையாளம் 2

நடிப்பைப் பார்க்கும்போது தோற்றமயக்கம் என்னைக் கவர்ந்தது போல் கதை வரிசையில் என்னைக் கவர்ந்தது அடையாளம் இரண்டு என்ற குறுநாடகம்தான்.பெண்களை அடிமையாக வைத்திருத்தல் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பாதிக்கும் என்று சொல்கிறது.தாயான சுமதி ரூபனுக்கு நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் மகனும்.சின்ன வயதிலிருந்தே மகனை வைத்து பெண்களை அடிமையாக வளர்க்கிறார் தாயார்.மகன் பெண்கள் நால்வரையும் கயிறு கட்டி மேய்ப்பார்.பெண்கள் வளர்ந்ததும் நால்வருக்கும் திருமணம் நடக்கிறது.அம்மாவுக்கும் வயசாகிக்கொண்டே போகிறது.நான்காவது பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது.அம்மாக்கு மிகவும் வயசாகிவிட்டது.மகனுக்குத் திருமணம் ஆனதாகக் காட்டுப்படவில்லை.இறுதியில் "பெட்டையள் ஒருதரும் திருமணத்துக்குப்பிறகு இந்தப்பக்கம் திரும்பியும் பார்க்கேல்ல எனக்கும் வயசாகிட்டு என்னையும் நீதாண்டா பராமரிக்கணும்" என்று தாயார் சொல்லும்போதே மகன் தரையில் சுரண்டு விழுந்துவிடுவான்.ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் நடக்கும்போதும் அவர்களை முன்னர் கட்டியிருந்த கயிற்றை அண்ணனுக்கு மேலே சுற்றிவிட்டுச் செல்வார்கள்.நான் நினைக்கிறேன் ஆண்களுக்கு பெற்றோராலும் சகோதரிகளாலும் ஏற்றப்படும் சுமையை அந்தக் கயிறு சித்திரிக்கிறதென்று.

நான்கு நாடகங்களும் முடிந்த பின்னர் கேள்விகள் கேட்பதற்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் நேரம் ஒதுக்ப்பட்டது.அடையாளம் 1ல் அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்வது போல காட்டியது ஆண் கொடுமைப்படுத்தியதாலா அல்லது மனவுளைச்சலால என்று ஒருவர் கேட்டார் அதற்கு இயக்குனர் சுமதி ரூபன் அது கனடாவில் நடந்த ஒரு உண்மைக்கதையைத்தான் நாடகத்தில் அப்படியே காட்டியுள்ளேன் என்றார்.அதே நாடகத்தில் பெண்கள் போராடப்போவது பற்றிய அவரது கருத்துப் பற்றி நான் கேட்டதற்கு அவர் சொன்ன விளக்கம் எனக்கு ஆச்சரியமாகவிருந்தது ஆனால் அது உண்மையெனப் பின்னர் அறிந்துகொண்டேன்.ஈழப்போராட்டத்திலிருந்து விலகிய பெண்களின் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அப்பெண்களின் சகோதரிகளுக்குத் திருமண ரீதியாக வரும் பிரச்சனைகள் பற்றியும் அறியக்கூடியதாகவிருந்தது.

அணங்கு நாடகத்தில் இறுதியில் மணிமேகலை உதயகுமாரனுடன் தியானத்தில் ஒன்றுசெருவது போலக் காட்டுவதன் மூலம் இயக்குனர் பெண்களின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறாரா என ஒருவர் கேட்டார் அதற்குப் பார்வையாரளர் பகுதியிலிருந்து " அதைப் பலவீனம் என்று சொல்லாமல் பெண்களுக்கும் உணரச்சிகள் இருக்கென்றும் எடுத்துக்கொள்ளலாம் என்று" ஒரு பதில் வந்தது. தொடர்ந்தும் நடைபெற்ற கருத்துப்பரிமாற்றத்தில் கலந்துகொள்ளமுடியாமல் போயிற்று.இப்படியான நாடக நிகழ்வுகளில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற சுமதி ரூபனின் ஆதங்கத்தை இனிவரும் நிகழ்வுகளில் ஆண்கள் தீர்த்து வைப்பீர்கள் தானே:-)

Sunday, February 18, 2007

அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு!

வசந்த்தின் இசையில் சுஜீத் மற்றும் ஸ்ரெபியா டன்ஜா ஆகியோரின் குரலில் வெளிவந்திருக்கும் இந்தப்பாடலை எழுதியவரும் சுஜீத் தான். சந்தூரின் உதவியுடன் லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது இந்தப்பாடல்.

சுஜீத்தின் சிங்கிள் என்ற அல்பத்தில் இடம்பெற்ற பாடல்களை நீங்கள் ஏற்கனவே சயந்தன் அண்ணாவின் சுஜீத்திடுனான நேர்காணலின் மூலம் அறிந்திருப்பீர்கள்.இன்று கூட வசந்தன் அண்ணா சுஜீத்தின் அடுத்த அல்பத்தில் இடம்பெறுகின்ற ‘விடுதலை” என்ற பாடலின் ஒளிப்பதிவை வசந்தம் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார்.

ஒருதடவை பார்த்தபோதே "இது கதையல்ல நியம்" என்ற இந்தப்பாடல்என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.பாடலைப் பார்க்கும்போது மலேசியத்திரைப்படமான “ஆண்டாள்” கண்முன்னே வந்து போனது.மற்றும் கெல்லி கிளார்க்ஸனின் பாடலொன்று கூட நினைவுக்கு வந்தது.

பாடலாக்கப்பட்ட விதம் காட்சியமைப்புகள் என எல்லாமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.புலம்பெயர் நாடுகளில் பெற்றோர்கள் வேலை வேலை என்று ஓடியோடி யாருக்காக உழைக்கிறோம் என நினைத்து உழைக்கிறார்களோ கடைசியில் அந்தப்பிள்ளைகளின் வாழ்க்கையில் அக்கறை காட்டாமல் அவர்களைப் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஏங்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையைத்தான் இந்தப்பாடலில் சொல்லியிருக்கிறார்கள்.சிறுமி அஞ்சு வேலைக்குச் செல்லும் நேரம் தவிர வீட்டில் ஓய்வெடுக்கும் தந்தையிடமும் சின்னத்திரைக்கிரையாகிப்போன தாயிடமும் பாசத்துக்காக ஏங்கி அது கிடைக்காத பட்சத்தில் நல்ல நண்பர்களைத் தேடுகிறாள் அதுவும் அவளுக்குக் கைகூடவில்லை.வருடங்கள் சில ஆனதும் அன்பு காட்டுமொருவனிடம் காதல்கொண்டு வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்கிறாள்.ஓரு வருடத்தில் தாயுமாகிறாள்.காதல் வாழ்க்கை சலித்து இருவரும் பிரிகிறார்கள்.கடைசியில் பிள்ளையுடன் நேரம் செலவவழித்து வேலையும் போனபின்னர் கடையில் திருடுகிறாள்.மானமும் போய் பிள்ளைளையும் அரசினர் தூக்கிச்செல்ல போதைக்கடிமையாகிப் பின்னர் போறவை வாறவையுடனும் இரவில் திரிய வேண்டிய நிலமைக்குத்தள்ளப்பட்டு வாழப்பிடிக்காமல் இறந்து போகிறாள்.

இது வெறும் கதையல்ல புலம்பெயர் நாடுகளில் பல தமிழ் இளையோரின் உண்மைக்கதை.பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான்.அம்மா அப்பாவிடம் இருந்து கிடைக்கவேண்டிய நியாயமான அன்பு கிடைக்காமல் ஏங்கி ஏங்கியே ஒருநாள் மாண்டு போகிறார்கள்.ஆனால் வெளியில தெரியிற உண்மை??? அந்தப்பெடியன் காங்ஸராம்.அந்தப்பெட்டை பாரில வேலை; டான்ஸ் ஆடுறளாம்.பெடியங்களோட திரியிறாளாம்.கதைக்க நல்லாயிருக்கும்.நீங்கள் குடுக்க வேண்டிய அன்பை அவர்களுக்குக் குடுத்தா அவர்கள் ஏன் அதை வெளியில் தேடிப்போகிறார்கள்.

ம் நான் எங்கயோ தொடங்கி எங்கயோ போயிட்டன்.பாடல்வரிகளைக் கீழே தந்துள்ளேன்.ஓரிரு சொற்கள் விளங்கவில்லை.பிழையிருப்பின் அறியத்தாருங்கள்.


இது கதையல்ல நியம்! புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!

அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு
ஆகவில்லை இன்னும் பதினைஞ்சு
கேட்டது அவள் பாசம் அன்பாய்ச் சின்ன நேசம்
கிடைக்கலை பாசம் நேசம் வாழ்க்கையாகிப் போனதடா வேசம்
அப்பா அம்மா அவளில் காட்டவில்லை நேசம்
கடையில பணத்துக்கா வாங்கலாம் பாசம்?
அப்பா என்றும் வேலை வரவில்லை காலை மாலை
வந்தால் கூட தூக்கம் அஞ்சு கண்ணில் ஏக்கம்
அப்பா என்னைப் பாருங்கோ அஞ்சு என்று கொஞ்சுங்கோ
அம்மா அம்மா சொல்லுங்கோ அப்பாகிட்டச் சொல்லுங்கோ
அம்மா கண்ணில் கவலை காரணம் பிஞ்சு அஞ்சு இல்லை
அவள் முன்னே சின்னத்திரை அம்மா சின்னத்திரைக்கிரை!
அய்யோ பிஞ்சு பாவம் ஆசை ---- தாகம்
புலம்பெயர் நாட்டிலில்லை ஆரிட்டைத் தேடிப்போகும்

கதையல்ல நியம்! இப் புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!
பிஞ்சு அஞ்சு தனியானாள் பாசத்தைத் தேடிப்போனாள்
பாசம் கிடைக்குமா நேசம் கிடைக்குமா
தனியே அழுகிறாள்!

(இசை)

சொந்த நாடு விட்டு நாடு வந்தாள்
வீட்டில் அன்பிழந்தாள்
------ வாடுகிறாள் நண்பனைத் தேடுகிறாள்
அப்பாவும் மாறவில்லை அம்மாவும் மீளவில்லை
வருடங்கள் ஓடியது வயசும் ஓடியது
வீட்டிலே சேர்ந்திருந்தும் தனிமை வாட்டியது
நண்பர்கள் சேரவில்லை சேர்ந்தவர் சரியில்லை
நல்லவர் தேடிச்செல்லும் வழியும் தெரியவில்லை
என்ன செய்வாள் அஞ்சு இன்னுமவள் பிஞ்சு
அன்பு வந்து போச்சு காதல் என்று பேச்சு
கண்டவுடன் காதல் வீட்டுக்கது மோதல்
வீட்டைவிட்டுப் பிரிந்து குடும்பம் தனியானாள்
வருடமும் போக குழந்தைக்குத்தாயானாள்
சில காலம் போச்சுச் சிக்கல்கள் உருவாச்சு
அன்பு தந்த காதல் எங்கோ ஓடிப்போச்சு
பாசம் வற்றியாச்சு சண்டை முற்றிப்போச்சு
மணவாழ்க்கை முறிந்து உறவு பிரிந்தாச்சு
கைகளிலே மழலை கண்களில் வலி கண்ணில் மழை.

கதையல்ல நியம! புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!
அஞ்சு அவள் தனியானாள் குழந்தை சுமையானாள்
என்ன செய்வாளோ???

(இசை)

அஞ்சோ இன்னும் பிஞ்சு அவளுக்கோர் குஞ்சு
பிள்ளை தந்த பாசம் ஓடிச்சு சில மாசம்
பிள்ளையோட கொஞ்சி கொஞ்சி நேரம் செலவிட
வேலைக்கு நேரம்போச்சு வேலையே ஒருநாள் போச்சு
கைகளில் காசு இல்லை உதவ யாரும் இல்லை
செய்வது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை
கடையிலே களவெடுத்து மரியாதை மீளவில்லை
அஞ்சு கதை வெளியாச்சு ஊர் முழுக்க இது பேச்சு
அரசுக்கும் கதை போச்சு அஞ்சு பிள்ளை பறிபோச்சு
மறுபடி தெருவில ஊர் சனம் சேரவில்லை
பிள்ளையும் போனதால உயிரில் ஜீவனில்லை
அஞ்சு தடம்புரண்டு போதைக்கடிமையானாள்
வந்தவை போறவையோட ராவில் சுத்தலானாள்
அஞ்சு வாழ்க்கை மாறிப்போச்சு மானம் மலையேறிப்போச்சு

என்ன செய்வாள் அஞ்சு இன்னுமவள் பிஞ்சு
என்ன செய்தும் முடியேல்ல பாசம் நேசம் கிடைக்கேல்ல
கண்ணாடி முன்னால நின்று இருந்தென்ன பயன்?
வாழ்ந்தென்ன பயன்? கேட்க கேள்விக்குப் பதிலில்லை
வாழ்வை முடிப்பதில் பிழையில்லை கதறினாள் அஞ்சு
அவள் குடிக்கிறாள் நஞ்சு!
வாழும்போது உதவாதவர் சாகும்போது தடுக்கிறார்
அவளையள்ளிக்கொண்டு வைத்தியரிடம் சேர்க்கிறார்
அஞ்சு அவள் விழி திறக்கப் பிள்ளை நிற்கக் காண்கிறாள்
ஐயொ என்னிடம் வருமோ என்று விழியிறுக்கி மூடுகிறாள்
உயிர் துறக்க மூடுகிறாள் !

(இசை)


இது கதையல்ல நியம! புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!

அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு.




Saturday, February 17, 2007

திருவாளர் திருமதி




திருவாளர் திருமதி என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் ஒலிபரப்பாகும் ஓரு புதிய நிகழ்ச்சி.சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.சும்மா ஒரு பொழுது போக்கு நிகழ்சிதான்.முதல் சுற்றை டுயட் றவுண்ட் என்று சொல்கிறார்கள்.அதாவது கணவன் மனைவியிருவரும் தங்களுக்குப் பிடித்த ஒரு பாடலைத் தெரிவு செய்து அதற்கு நடனமாட வேண்டும்.புள்ளிகள் வளங்குவதற்கு பிரத்தியேகமாக அவர்கள் என்ன பொருட்களைப் பயன்படுத்தினார்கள் முகபாவனை தம்பதிகளுக்கிடையேயான அந்நியோன்யம் இப்படி பல அம்சங்களைக் கவனிக்கிறார்கள்.

அடுத்த சுற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குடுக்கும் பட்ஜெட்டில் தம்பதிகள் சொப்பிங் செய்ய வேணும்.இரு தம்பதிகளில் யாருடைய பொருட்கள் பட்ஜெட்டையொட்டியிருக்கிறதோ அவர்களுக்க அதிக புள்ளிகள்.

மூன்றாவது றவுண்டில் தொகுப்பாளர் குடுக்கும் சிற்றுவேசனுக்கு 2 நிமிடத்துக்குள் தம்பதிகள் சண்டை பிடிச்சுச் சமாதானமும் ஆகவேணும்.2 நிமிசத்துக்குள்ள நடக்கிற காரியமா அது?

ஹி ஹி.

இருந்தாலும் தம்பதிகள் சண்டை பிடிக்கிறத பார்க்கிற எங்களுக்கே என்னடா இப்பிடியெல்லாம் சண்டை பிடிப்பினமா என்றிருக்கும்.தொகுப்பாளரைப் பார்த்தா பாவமா இருக்கும்.
இதிலொரு சுவாரிசயமான கதையொன்று சொல்கிறேன்.

போன வாரம் நடைபெற்ற திருவாளர் திருமதியில் ஒரு தம்பதியினர் சண்டை போட்டுக்கொள்ளும்போது மனைவி கணவனை நீ ,போ ,வா என்றெல்லாம் பேசி நிஜமாவே சண்டைபோட்டா.அந்தக் கணவரைப்பார்த்தாப் பாவமா இருக்கும்.அந்த மனைவியைப் பார்த்தா எங்களுக்கு எங்கட சித்தியொராள்ட ஞாபகம் வந்திட்டு.சித்தப்பா கொஞ்சம் அப்பாவி.பெற்றோல் போடுறதுக்குக்கூட சித்திட்டத்தான் காசு கேப்பார்.எல்லாரும் சேர்ந்துதான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.அந்தச்சுற்று முடிந்ததும் நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேட்டா அந்த மனைவிட்ட " என்னங்க உங்க வீட்டுக்காரரைப்போய் நீ வா என்றெல்லாம் பேசுறீங்கிளே அவங்க கோவிச்சுக்கமாட்டாங்களா? உங்களை அடிக்க மாட்டாங்களா?" அதுக்கு அந்த மனைவி "இல்லைங்க அவரு என் அத்தை பையன்.சண்டை வந்தா நான்தான் அவரை அடிப்பேன்" என்று.

எனக்கு தங்கைச்சிக்கு அம்மாக்கு ஒருதருக்கும் சிரிப்புத்தாங்க முடியல. எனக்கு அதுக்குமேல அந்தக்கேள்வியை கேக்காம இருக்க முடியல அதால "இந்த மனைவியைப் பார்த்தா எனக்கொராளின்ர ஞாபகம் வருது..யாரெண்டு சொல்லுங்க பார்ப்பம்" என்று சொல்லி நான் வாய் மூடேல்ல அம்மா தங்கச்சி அப்பா எல்லாருமே நான் நினச்ச சித்தியின்ர பெயரைச் சொல்லிட்டினம்.அன்றைக்கு முழுதும் ஒரே சிரிப்புத்தான்.இதில சிறப்பம்சம் என்னெண்டால் அடுத்த நாள் ஒரு வேலை விசயமா சித்தியும் சித்தப்பாவும் எங்கட வீட்ட வந்தவை.அப்ப எப்பிடியோ இந்த திருவாளர் திருமதி நிகழ்ச்சியைப் பற்றின கதை வந்திட்டு.சித்தி உடன "நேற்று அந்த நாவல் கலர் சாறி கட்டியிருந்தவா நல்லா டான்ஸ் ஆடினா நல்லா உண்மையாச் சண்டை பிடிக்கிற மாதிரியே சண்டை பிடிச்சா என்ன" நாங்களும் எல்லாரும் சிரிப்பையடக்கிக்கொண்டு தலையத்தலைய ஆட்டினம்.

அடுத்த ரவுண்டில் ஏழெட்டு வருசங்களுக்கு முதல் "ஜோடிப்பொருத்தம்" என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் செய்தார்களே ஞாபகம் இருக்கா? அந்த நிகழ்ச்சியில் வருவது போல கணவரைத் தனியாகவும் மனைவியைத் தனியாகவும் கேள்விகள் கேட்பார்கள்.இருவருடைய பதிலும் ஒத்துப்போனால் ஒவ்வொரு கேள்விக்கும் ரூபா 2000.இந்தச்சுற்றில் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகள் மிகவும் சுவாரிசயமானவை.

உதாரணமாக
==>கல்லூரிக்காலத்தில் உங்களருகில் அமர்ந்திருப்பவர் ஆணா பெண்ணா?
==>குளிர்காலத்தில் உங்கள் வீட்டு மின்விசிறியின்வேகம் என்ன?
==>உங்களுக்கு வளைகாப்பு எப்போது நடந்தது.
==>ஒரு மாதத்துக்கு உங்கள் வீட்டில் சமையலுக்குப் பாவனையாகும் எண்ணெயின் அளவென்ன?

இந்நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி அதைவிட்டா வேற என்ன இருக்கென்று கேக்கிறீங்கிளா?? உண்மையில திருமணம் செய்து பல வருடங்களான தம்பதிகளுக்கு இப்படி ஒரு பாடலுக்கு நடனமாடவோ அல்லது தங்களுடைய எண்ணங்கள் செயல்கள் எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது என்பதையோ தெரிந்துகொள்ள விருப்பம் இருந்திருக்குமா?அப்பிடியே விருப்பம் இருந்தாலும் அதை முயற்சித்திருப்பார்களா?அல்லது ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறோம் என்றெல்லாம் யோசிச்சுப் பார்க்கிறார்களா? இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

அப்பா வேலையால வாற நேரமாச்சு பிள்ளையள் எல்லாரும் சத்தம் போடாம இருங்கோ.
அப்பா செய்திகள் பார்க்கவேணும் ரீவி பார்த்தது காணும் போய்ப் படியுங்கோ.
அம்மா இன்றைக்கு முட்டைக்குழம்பு வையுங்கோவன் பிளீஸ்.அப்பாக்கு முட்டைக்குழம்பு பிடிக்காது இன்றைக்கும் இறைச்சிக்கறிதான்.
இப்பிடி எப்வவுமே அப்பா அப்பா என்று உயிரை விடுற அம்மாக்கள் எல்லாம் இன்றைக்கு ரீவில வந்து அழகாகவோ இல்லை சும்மா ஏனோ தானோ என்றோ எப்பிடியோ தைரியமா சன்ரீவி செற்ல நடனம் ஆடினமா இல்லையா?? இருவரும் சேர்ந்து முயற்சித்தால்தான் பரிசு.ஒருவர் மட்டும் திறமையாகப் போட்டியில் கலந்துகொண்டால் அவர்களால் பணத்தையும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பையும் வெல்ல முடியாது.

இந்த அம்மாக்களுக்காகவே எனக்கு இந்த நிகழ்ச்சி பிடிச்சிருக்கு.உங்களுக்கு?

Friday, November 11, 2005

உஷா எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான்

இந்தப் பதிவை வாசிக்க முதல் என் இதற்கு முதலான பதிவில் உஷாவின் பின்னோட்டத்தை வாசிச்சிட்டு வாங்க.
http://www.blogger.com/comment.g?blogID=13204662&postID=113174835510547584

உஷா
சோசலிச சமுதாயம் உருவாகணும் என்பது நல்ல கருத்துதான் இதற்கு மாறாக நான் என்ன சொல்லியிருக்கிறேன்?

நான் அசின் போட்ட உடையைப் பற்றித் தெளிவாகச் சொல்லவில்லை போலிருக்கிறது.பெண்கள் புடவை கட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன் -நானே ஏதாவது விழாக்களுக்கு சேலை கட்டணும் எண்டா அக்காவைக் கொண்டு கட்டுவிக்கிறனான்-:

உஷா படத்தில அசின் சோட்ஸ்ம் ஸ்லீவ்லெஸ்ம் போட்டுக் கொண்டு வர விஜய் சொல்லுவாரு “தாவணியும் இல்லை பாவாடையும் இல்லை யட்டியோடயும் பிறாவோடயும் வந்து நிக்கிறாய்” .அந்தக் காட்சிக்குப்பிறகு அசின்ர அப்பா வீட்ட போய் அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு செல்லமா வளர்ந்திட்டா ...etc.பதிவிலயே சொல்லியிருக்கிறன் ஆடை அணிதல் அவரவர் விருப்பம் எண்டு.

படத்த பார்த்த பிறகும் நீங்க அசின் போடுற உடுப்பில பெண் சுதந்திரம் இருக்கெண்டு சொல்ல மாட்டீங்க என்று நினைக்கிறன்.பெண் சுதந்திரமா இருக்க சுதந்திரத்தைப் பயன்படுத்த வேறு உபயோகமான நேரங்கள் வழிகள் இருக்கென்று நான் நம்புகிறேன்.உதாரணமாக இரவு எட்டரை மணிக்குத்தான் ஒரு வகுப்பு முடியுமென்றால் பெண் சுதந்திரமாக அந்த வகுப்புக்கும் சென்று வர சுதந்திரம் தேவைதான்.

அம்மாக்களை பற்றி நான் சொன்னது உங்கள் பார்வையில் தப்பாக(?) தெரிகிறதா?என்னைப் பொறுத்தவரையில் எந்த அம்மாவும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு தன் மகள் சுயமாக சிந்தித்து செயற்படுவதையே விரும்புவாள்.

புதிய படம் ஒன்று வெளிவந்தால் அதைப்பற்றிய விமர்சனங்கள் எழுதுவது இயல்புதானே உஷா?? என் பதிவுகளைப் பார்த்தால் தெரியும் நான் இதுவரை சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளே போட்டதில்லை.நான் படம் பார்ப்பதும் குறைவு.நேற்று சிவகாசி பார்த்தேன்.2 தேர்வெழுதிப்போட்டு ரிலாக்ஸா இருக்க கொஞ்சம் சிரிக்க வைச்ச படம்.

நான் சொன்னவை என் சிற்றறிவுக்கு எட்டியவை.அவ்வளவே.ஒரு படம் எடுக்க எவ்வளவு பேர் எவ்வளவு உழைக்க வேணும் எண்டு எனக்கும் கொஞ்சம் தெரியும் உஷா.எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் “Beneath the skin” என்றொரு படம் எடுக்கத் தொடங்கி கையைச் சுட்டுக்கிட்டார்.

படத்ததைப் பார்த்திட்டு வாங்க திரும்பவும்.

உங்க பின்னோட்டத்தை பார்த்ததில எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான்.