காதல் - கல்யாணம் - மண்ணாங்கட்டி
ஒரே உளவியல் பதிவுகளாப் போட்டு bore அடிக்கிறன் என்று சொன்னாக்களுக்காக ஒரு அலட்டல் குரல்பதிவு.அலட்டல் என்றும் சொல்லேலாது ஏனென்றால் உண்மையா இதுக்கெல்லாம் காரணம் என்ன என்று எனக்குத் தெரியேல்ல.அனுபவசாலிகள் உங்களில நிறையப்பேர் இருப்பீங்கள்தானே உங்கட வாழ்கையில நாங்கள் கதைக்கிறது தொடர்பான சந்தர்ப்பங்கள் இடம்பெற்றிருந்தால் அதப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ.

18 comments:
வாவ்.. நல்ல முயற்சி சினேகிதி..
சாதாரண உரைநடையிலும், ஆங்காங்கே தமாச்ஷாகவும், ஃபிரண்டிடம் பேசுற மாதிரியே சகஜமாக கதைச்சிருக்கீங்க. :-)
வாழ்த்துக்கள் சினேகிதி :-)
மலேசியா மாரியாத்தா :-) (அப்பிடின்னு நான் சொல்லேல்ல யாரோ சொல்லியிருக்கினம்).
வாழ்த்திருக்கட்டும். நீங்கள் ஒரு கதைதயும் சொல்லேலயே...உங்க பிரண்ஸ் யாரும் இப்பிடி வயது கூட குறைய லவ் பண்ணினமா? உங்க ஊர் பெடியங்கள் பெட்டையள் லவ் சொன்னால் accept பண்றாங்களா :-)
சில நேரங்களிலை ஊரிலை பேசி பொருத்தம் பாத்து செய்யிற கலியாணங்கள் கூட வயது கூடின பொண்ணுக்கும், வயது குறைஞ்ச மாப்பிள்ளைக்கும் நடந்திருக்கு. ஆனா அங்க இரண்டு வீட்டு காறரும் தேடி அலைஞ்சு சாதகம் பொருந்தேல்லை வயதும் நல்லா கூடி போச்சு இனியும் ஏலாது எண்ட கட்டத்திலை தான் நடத்தி வச்சிருக்கினம். ஆனா அது கூட 6/7 வயது வித்தியாசமா இருக்காது ஒரு 2/3 வயதா தான் இருக்கும்.
மற்றும் படி ஊரிலையும் விருப்பி வயது கூடின பொண்ணை வயது குறைஞ்ச பொண் கட்டின சந்தர்ப்பங்கள் இருக்கு.
ஆஹா.. நீங்கள்ளும் விட்டு வைக்கலையா?? :-)))
//...உங்க பிரண்ஸ் யாரும் இப்பிடி வயது கூட குறைய லவ் பண்ணினமா?
//
ம்ம்.. நல்ல காலம்.. அந்த மாதிரி வயது பிரச்சனை உள்ள காதல் கதை இங்கு நான் பார்த்ததில்ல. (நம் தமிழர்கள் மத்தியில்..)
மலாய்காரர்களுக்குள் இப்படி ஆண்கள் வயது மிகக் குறைவுடனும் பெண்கள் வயது கூடவும் உள்ளவர்கள் திருமணம் பண்றது ரொம்ப ரொம்ப சகஜம். அவங்களுடைய நபி முகமதுவே அப்படித்தானே செய்தார் என்பது அவர்களின் வாதம்.
//உங்க ஊர் பெடியங்கள் பெட்டையள் லவ் சொன்னால் accept பண்றாங்களா :-)//
ம்.. யாரா இருந்தாலும் தனக்கு பிடிச்ச பையனோ பொண்ணோ காதலை சொன்னால் கண்டிப்பாக ஏத்துப்பாங்க.. ஆனால், காதலை சொல்லும் அந்த பையன்/ பெண் மேலே அவங்களுக்கு காதல் இல்லின்னா கண்டிப்பாக "நோ"தான். தன்னை ஒரு பொண்ணு லவ் பண்ணுதுன்றதுக்காக எல்லாம் ஓகே சொல்ல முடியாது இல்லையா? :-)
காதல், கல்யாணம் - இதை பத்தி சொல்ல பெரியவங்க பல பேர் இருக்காங்க. :)
மண்ணாங்கட்டி - இதை சொந்த ஊருக்கு போகும் போது நண்பர்கள் காண்பித்தது பார்த்திருக்கிறேன். சில சமயம் நாம ஏதவாது சொல்லி அதற்க்கு மண்ணாங்கட்டின்னு வாங்கி கட்டியிருக்கிறேன். :)
வாவ் வாவ் வாவ் வவ்வவ்வவ் ;-)
கூடக் கதைச்ச பெடியன் இளைஞர்களின் நாடித்துடிப்பாப் பேசியிருக்கிறார். ஆனால் அவரின்ர பக்கம் கொஞ்சம் ஒளிச்சிருந்து பேசினமாதிரி இருக்கு.
இது கூட எனக்கு உளவியல் மாதிரித்தான் கிடக்கு
Pls listen to these two songs!!!!
(1) http://www.youtube.com/watch?v=3uflOK-LyK4
(2) http://www.youtube.com/watch?v=ahxCRivqWQ8
Thank you!!
சஞ்சான்னு கூப்பிட்டிங்க... அதான் உங்ககூட கதைச்சவரொட பெயரா? கஞ்சா மாதிரி சஞ்சாவும் கிக்கா இருக்கு. அந்த போய்க்கு என்ன வயசுங்க... அவருக்கு கேர்ள் பிரண்ட் இருக்கா?
காதல் - கலியாணம் - மண்ணாங்கட்டி...
:-)
//காதல் - கலியாணம் -மண்ணாங்கட்டி.//
ம்.. இனி மூணாவது..
//வயது கூடின பொண்ணுக்கும், வயது குறைஞ்ச மாப்பிள்ளைக்கும் நடந்திருக்கு. //
ஒரு புறம் பார்த்தால் மிதிலையில் மைதிலி-சீதை
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி--- மாதவி
இந்த பாடல் வரிகள் அபூவர் ராக படத்தில் வரும் வரும் வரிகள்
அந்த படத்தில் கமலகாஸன் தன்னிலும் வயது கூடிய சிறிவிதயாவிடம் காதல் கொள்ளுறாராம்
இராமரிலும் பார்க்க சீதைக்கு வயது கூடவாம்
அதே போல கோவலனை விட மாதவிக்கு வயது கூடவாம்
என்னண்டு தெரியும் எண்டு கேட்க கூடாது.இதை பற்றி விசாரிக்க கண்ணதாசனும் இப்ப இல்லை
உங்க பதிவுகள் எல்லாம் அருமை. நல்லா எழுதறீங்க. psychology student veraya? ஹஹா கேட்கவே வேணாம். கலக்குங்க :)
அப்புறம்.. இந்த தலைப்பு பற்றி.. ஹிஹி.. அதெல்லாம் சொல்லலாம்.. :) கேக்கும் பொறுமை??
தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்.
ஒலிப்பதிவைக் கேட்டுக்கொண்டிருக்கேக்க, தாய் தகப்பனுக்கிடையிலான வயசு வித்தியாசத்தைப் பற்றிச் சொல்லும் கட்டத்தில்,
ஆருக்கு வயசு வித்தியாசம்? எண்டு சினேகிதி கேட்ட மாத்திரத்தில் மனதுக்குள் திட்டிக்கொண்டேன், ' வெங்காயம்' எண்டு.
என்ன ஆச்சரியம்? அடுத்த நொடியில் அந்தப் பெடியனும் அதையே சொல்லிறான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்கட முதற் பதிவில சிறு ஒலித்துண்டைப் போட்டிருந்தியள். அதைக் கேக்கேக்க உது குழைக்காட்டான் எண்டுதான் நினைச்சிருந்தன்.
இப்ப அந்த நினைப்பை மாத்திட்டன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏற்கனவே 'காதலும் கத்திரிக்காயும்' எண்ட சயந்தனின் பதிவில சில விசயங்கள் கதைச்சாச்சு.
நீங்கள் மண்ணாங்கட்டி எண்டு தலையங்கம் வைச்சதும் நல்லாத்தான் இருக்கு.
விரைவில் மண்ணாங்கட்டியாகப் போகும் சயந்தனுக்கும் பிறருக்கும் வாழ்த்து.
உங்கள் தலைப்பு ஒழுங்கின்படி, காதலித்துக் கலியாணம் செய்பவர்கள் மட்டும்தான் மண்ணாங்கட்டியாவார்கள் என்று சொல்ல வருகிறீர்களென நினைக்கிறேன். காதலிக்காமல் பேசித் திருமணம் செய்பவர்கள் மண்ணாங்கட்டி ஆக மாட்டார்களா?
முடிபு தெரிந்தால் நன்று. கண்கெட முதல் சூரிய நமஸ்காரம் நல்லது தானே?
நல்லா இருந்தது ஆடியோ!
Post a Comment